குருபகவான் பத்தாம் பாவமான தொழில், கர்மா ஸ்தானம் என்ற இடத்தில் பயணம் செய்கிறார். குரு கோசாரத்தில் பத்தில் வந்தால் பாதகமா.? சாதகமா.? என்றால் 75 சதவிதம் பேர் நன்மைகளை அடைந்து இருப்பார்கள். குருவின் பார்வை 2, 4, 6, ஆகிய ஸ்தானங்களின் மீது விழுகிறது. குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.சொல்லும் செயலும் நிறைவேறும். இது வரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விடலாம்.பணம் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.மனவருத்தங்களால் பிரிந்த தம்பதியினர் ஓன்று கூடுவார்கள்.வர வேண்டிய பாக்கிகள் வசூல் ஆகும். புது முயற்சிகள் கை கூடும். தன்னுடைய ஏழாம் பார்வையால் சுகஸ்தானம் என்ற நாலாம் பாவத்தை பார்க்கிறார்.தாயார் வீடு வாகனம் ஆகிய ஸ்தானத்தை பார்ப்பதால் புது வீடு கட்டி குடிபோகலாம். குரு 9 ஆம் பார்வையாக ஆறாம் பாவத்தை பார்ப்பதால் வழக்குகள் முற்றிலும் அகலும்.