ஆகஸ்ட் மாத ராசி பலன் 2024: ஆட்சி பெற்ற சூரியன்; கல்யாண வைபோகம் யாருக்கு கைகூடும்?

First Published | Jul 29, 2024, 1:39 PM IST

ஆகஸ்ட் மாதம் ஆங்கில வருடத்தின் 8வது மாதம் நவ கிரகங்களின் தலைவன் சூரியன் கடக ராசியில் 15 நாட்களும் சிம்ம ராசியில் 15 நாட்களும் சஞ்சரிப்பார். இப்போது கடகத்தில் இருக்கும் கிரகங்களின் கூட்டணி ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு மேல் சிம்மத்தில் இணைகின்றன. சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் கூட்டணியால் மேஷம் முதல் கன்னி ராசி வரை பலன்பெறப்போகும் ராசிக்காரர்கள் யார், யாருக்கு பாதிப்பு வரும் என்று பார்க்கலாம்.
 

ஆகஸ்டில் நவ கிரகங்களின் பயணம்

ஆகஸ்ட் மாதம் ஆடி மாதமும் ஆவணி மாதமும் இணைந்த மாதம். ஆகஸ்ட் மாதத்தில் கடக ராசியில் சூரியன், சிம்ம ராசியில் புதன், சுக்கிரன், கன்னி ராசியில் கேது, கும்ப ராசியில் சனி வக்ரம்,மீன ராசியில் ராகு, ரிஷப ராசியில் செவ்வாய், குரு, மிதுன ராசியில் சந்திரன் என கிரகங்களின் பயணம் உள்ளது. ஆகஸ்ட் மாத பிற்பகுதியில் சூரியன், புதன், சுக்கிரன் கூட்டணி சேருவதால் ஆடி போயி ஆவணி வந்தால் யாரெல்லாம் டாப்பாக வருவார்கள் என்று கணிக்கலாம். ஆகஸ்ட் மாதத்தில் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு ஆகஸ்டில் வருமானம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும் சொத்துக்கள் வாங்குவீர்கள். உற்சாகமான நிலை ஏற்படும்.  இந்த மாத துவக்கமே ராஜயோகம்தான்  நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையில் சின்னச் சின்ன மாற்றங்கள் ஏற்படும். வெளிநாடு செல்லும் யோகம் கூடி வரும். 17 ஆம் தேதிக்கு மேல் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமடைவதால் வேலையில் மிகப்பெரிய மாற்றமும் புரமோசனும் ஏற்படப்போகிறது. ஆகஸ்ட் மாதம் மேஷம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதம்.
 

Tap to resize

ரிஷபம்

சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராசியில் செவ்வாய் குரு இணைந்திருப்பதால் மனதில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். 17ஆம் தேதிக்கு மேல் சூரியன், சுக்கிரன் ஒன்றாக இணைந்து நான்காம் வீட்டில் பயணம் செய்வது ராஜயோக காலமாகும் பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலையில் இருந்த நெருக்கடிகள் தீரும்.  லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள் நல்லதே நடக்கும்.

மிதுனம்

புதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே ராசி நாதன் புதனால் பணவருமானம் கூடும். பொருளாதார ரீதியான வெற்றி கிடைக்கும். வெளிநாடு தொடர்பில் வெற்றி கிடைக்கும்.  தொழில் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பேரும் புகழும் ஏற்படும். நீங்க எதற்கும் அவசரப்பட வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை உணவுக்கட்டுப்பாடு அவசியம். குடும்ப வாழ்க்கையிலும் உடல் நலத்திலும் அக்கறை தேவை.
 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஆசைப்பட்டவை நிறைவேறும். புது வேலை கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.  17ஆம் தேதி சூரியன் இரண்டாம் வீட்டிற்கு நகர்ந்து ஆட்சி பெற்று அமர்வதால் நன்மைகள் நடைபெறும். சுக்கிரனும் இரண்டாம் வீட்டிற்கு வருவதால் தன வருமானம் அதிகரிக்கும். வேலையில் உயர்வு கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.  புதிய வேலை கிடைக்கும் சம்பள உயர்வு அதிகரிக்கும். திருமணத்திற்கு எதிர்பார்த்து காத்திருக்கும் ஆண்களுக்கு மனதிற்கு பிடித்த மனைவி அமைவார். நன்மைகள் நடைபெறும் மாதம்.

சிம்மம்

சூரியனின் பலத்தால் இந்த மாதம் உங்களுக்கு உற்சாகம் கூடும். விரைய ராசியில் உள்ள ராசிநாதன் சூரியன், உங்கள் ராசிக்கு வந்து ஆட்சி பெற்று அமரப்போகிறார்.  ராசியில் 3 கிரகங்கள் இணைவதால் எதிர்பாராத பதவி கிடைக்கும் பணவருமானம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். மூன்று கிரகங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டை பார்ப்பதால் திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும். சிம்ம ராசிக்காரர்களுக்கு மாதத்தின் முதல்பாதி சுமாராக இருந்தாலும் மாதத்தின் இரண்டாம் பாதியில் நன்மைகள் அதிகம் நடைபெறும்.
 

கன்னி

ஆகஸ்ட் மாதத்தில் லாப வீட்டில் உள்ள சூரியனால் பண வருமானம் வரும். புதிய வேலை கிடைக்கும். உங்க ராசிநாதன் புதன் சூரியன், சுக்கிரன் உடன் இணைந்து விரைய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். செய்யும் முயற்சியில் தடை தாமதங்கள் அதிகமாகும். ராசியில் உள்ள கேதுவினால் மன உளைச்சல் அதிகரிக்கும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் திருமண சுப காரியம் கைடும். ஆகஸ்ட் மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கல்யாண வைபோகம் கூடி வரப்போகிறது.  

Latest Videos

click me!