Guru Peyarchi : குருப் பெயர்ச்சி என்றால் என்ன? அறிவியல் மற்றும் சோதிடப் பார்வை!

Published : May 26, 2026, 04:32 PM IST

Guru Peyarchi : குருப் பெயர்ச்சி என்றால் உண்மையில் என்ன? சிலர் இதனை 'குருவை வழிபடும் நாள்' என்பார்கள், சிலர் 'நேர் ஆற்றலும் எதிர் ஆற்றலும் மாறும் நாள்' என்பார்கள்.இதன் பின்னணியில் உள்ள உண்மை மற்றும் அறிவியல் கலந்த சோதிட விளக்கத்தை இங்கு காண்போம்.

PREV
16
பெயர்ச்சி என்பதன் பொருள்

"பெயர்ச்சி" என்றால் இடப் பெயர்ச்சி என்று பொருள். வானவியலின்படி, நம் சூரிய குடும்பத்தில் உள்ள குரு பகவான் (வியாழன் கோள்) ஒரு ராசி மண்டலத்திலிருந்து இன்னொரு ராசி மண்டலத்திற்கு இடம் பெயர்வதையே நாம் 'குருப் பெயர்ச்சி' என்று அழைக்கிறோம்.

இங்கு ராசி மண்டலம் என்பது விண்மீன்களின் கூட்டமாகும். வானில் உள்ள சில விண்மீன்களைக் கோடிட்டு இணைத்தால் அவை சில குறிப்பிட்ட வடிவங்களில் தோன்றும். அந்த வடிவங்களை வைத்தே நம் முன்னோர்கள் சிம்மம், மீனம், கும்பம், தனுசு போன்ற பன்னிரண்டு ராசி மண்டலங்களாக அவற்றுக்குப் பெயரிட்டனர். பூமிப் பரப்பிலிருந்து நாம் வானத்தைப் பார்க்கும்போது, வியாழன் கோள் ஒரு நட்சத்திரக் கூட்டத்திலிருந்து இன்னொன்றுக்கு நகர்வது போலத் தோன்றுவதால் இது குருப் பெயர்ச்சி எனப்படுகிறது.

26
பிரபஞ்ச அமைப்பும் ஈர்ப்பு விசையும்

நம் பிரபஞ்சம் மிகப்பெரியது. சந்திரன் பூமியைச் சுற்றி வருகிறது. பூமியும் இதர கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்தச் சூரிய குடும்பம், பால்வெளி விண்மீன் மண்டலம் (Milkyway Galaxy) என்ற நமது விண்மீன் மண்டலத்தின் மையத்தைச் சுற்றி வருகிறது.

• நமது விண்மீன் மண்டலத்தில் கிட்டத்தட்ட பத்தாயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு சூரியனே ஆகும்.

• இந்த விண்மீன் மண்டலத்தைப் போல் பிரபஞ்சத்தில் கிட்டத்தட்ட பத்தாயிரம் கோடி விண்மீன் மண்டலங்கள் உள்ளன.

• ஒட்டுமொத்தமாக நமது பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை தோராயமாக பத்தாயிரம் கோடியையும் பத்தாயிரம் கோடியையும் பெருக்கினால் வரும் தொகை ஆகும்.

நியூட்டனின் ஈர்ப்பு விதிப்படி, ஒவ்வொரு நிறையும் (Mass) அடுத்த நிறையைத் தன் பால் கவர்ந்திழுக்கிறது. அதேபோல், பூமிக்கும் பிற கோள்களுக்கும் இடையே உள்ள ஈர்ப்பு விசையின் தாக்கம் பூமியில் உள்ள உயிரினங்கள் மீது நேரடியாகப் பாய்கிறது.

36
மனித எண்ணங்களில் கோள்களின் தாக்கம்

சூரியன், சந்திரன் மற்றும் வியாழன் (குரு), புதன், வெள்ளி (சுக்கிரன்), செவ்வாய் போன்ற கோள்களின் ஈர்ப்பு விசை மனிதர்களின் இரத்த ஓட்டத்திலும், எண்ணங்களிலும், குணங்களிலும் மாற்றங்களை உருவாக்குகிறது. இதையே நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து, கோள்களின் ஆதிக்கத்திற்கு ஏற்ப புதன் திசை, சுக்கிர திசை, செவ்வாய் திசை, வியாழ திசை என்று வகுத்தார்கள்.

கோள்களும் நட்சத்திரங்களும் அமையும் நிலைகளைக் கொண்டு மனிதனின் எண்ணங்கள் மற்றும் செயல்களின் விளைவுகளை அலசி ஆராய்வதே சோதிடக்கலை ஆகும்.

46
பௌர்ணமியும் ஈர்ப்பு விசையும்: ஓர் உதாரணம்

இதற்குச் சிறந்த உதாரணம் பௌர்ணமி நாள். பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பு விசை மாற்றத்தால் கடலில் அலைகள் ஆக்ரோஷமாக எழுகின்றன. அதேபோல், மனித மனங்களிலும் குழப்பம், மன அழுத்தம், மாரடைப்பு போன்ற பாதிப்புகளும், சில எதிர்மறைச் சம்பவங்களும் பௌர்ணமி மற்றும் அதற்கு முன் பின் நாட்களில் சற்று அதிகமாகக் காணப்படுவதைக் காணலாம்.

56
சோதிடக் கணிதமும் இன்றைய மாறுதல்களும்

ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் கோள்கள் மற்றும் நட்சத்திரக் கூட்டங்களின் நிலையைப் பொறுத்தே ராசியும் சாதகமும் கணிக்கப்படுகிறது. சாதகப் பலன் சரியாக அமைய குழந்தை பிறக்கும் நேரம் மிக முக்கியம். இந்த நேரம் என்பது:

1. தாய் கருவுறும் நேரம்

2. தாய் வசிக்குமிடம்

3. கர்ப்ப காலத்தில் தாயின் செயல்பாடுகள் மற்றும் எண்ணங்கள் ஆகியவற்றைச் சார்ந்தது.

நவீனக் காலச் சவால்கள்:

• இயற்கைப் பிரசவம் vs அறுவை சிகிச்சை: இயற்கையாகப் பிறக்கும் குழந்தைகளுக்குத்தான் சோதிடப் பலன் சரியாக அமையும். இன்று பலர் நல்ல நேரம் பார்த்து அறுவைச் சிகிச்சை (C-Section) மூலம் குழந்தையை வெளியில் எடுக்கிறார்கள். இவர்களின் சாதகப் பலன் பெரும்பாலும் தவறாகவே அமையும்.

• இடமாற்றம்: முற்காலத்தில் கர்ப்ப காலத்திலும் பிரசவ காலத்திலும் பெண்கள் அருகருகே உள்ள ஊர்களிலேயே இருந்தனர். இதனால் ஈர்ப்பு விசையின் தாக்கம் மாறாமல் சாதகம் சரியாக இருந்தது. ஆனால் இன்று, கர்ப்ப காலத்தில் முதல் ஐந்து மாதங்கள் ஒரு நகரிலும் (உதாரணமாகச் சென்னை), அடுத்த ஐந்து மாதங்கள் வேறு தொலைதூர நகரிலோ (டெல்லி அல்லது அமெரிக்கா) வசித்தால், இடத்திற்கு இடம் ஈர்ப்பு விசை மாறுபடுவதால் சாதகப் பலன்கள் தவறாகப் போக வாய்ப்புள்ளது. இதனால் தான் இன்று பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்தாலும் பல சிக்கல்கள் வருகின்றன.

66
தீமைகளைக் குறைக்கும் வழிகள்

கோள்கள் மற்றும் நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் மோசமான தாக்கங்களை நாம் முற்றிலும் தவிர்க்க முடியாவிட்டாலும், சில நற்செயல்களின் மூலம் அவற்றின் வீரியத்தைக் குறைக்க முடியும்:

• சுய கட்டுப்பாடு: முறையான உணவுப் பழக்கம், தகுந்த தூக்கம், உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்கள் மூலம் உடலையும் மனதையும் சீராக வைக்கலாம்.

• ஆன்மீகப் பரிகாரங்கள்: நேர்மையான, உண்மையான அர்ச்சகர்கள் மற்றும் சாஸ்திரிகள் மூலம் பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்வதன் மூலம் கெட்ட விளைவுகளை ஓரளவு குறைக்கலாம் (பூஜை என்ற பெயரில் ஏமாற்றும் கும்பல்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்).

• புண்ணியச் செயல்கள்: நம் வாழ்வில் புண்ணியச் செயல்களை அதிகரித்து, பாவச் செயல்களைக் குறைப்பதன் மூலம் நல்எண்ணங்கள் பெருகும். இந்த நேர்மறை எண்ணங்களின் தாக்கம் கிரகங்களின் கெட்ட விளைவுகளைக் குறைக்கும்.

முயன்று பாருங்கள், நிச்சயம் வெற்றி கிட்டும்!

Read more Photos on
click me!

Recommended Stories