Labh Drishti Yoga : 50 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் அதிசயம்.! செப்.12 முதல் 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கப் போகுது.!

Published : Sep 11, 2025, 03:10 PM IST

Labh Drishti Yoga : செப்டம்பர் 12 ஆம் தேதி குரு மற்றும் சூரிய பகவான் இருவரும் இணைந்து லாப திருஷ்டி யோகத்தை உருவாக்க உள்ளனர். 50 ஆண்டுகளுக்குப் பின்னர் உண்டாகும் இந்த அதிர்ஷ்ட யோகத்தால் சில ராசிகள் நல்ல பலன்களை பெற உள்ளனர்.

PREV
15
Labh Drishti Yoga

வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது தங்கள் நிலையை மாற்றுகின்றன. அப்போது பிற கிரகங்களுடன் இணைந்தோ அல்லது பிற கிரகங்களுடன் குறிப்பிட்ட தொலைவில் அமைந்தோ சில யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 60 டிகிரி கோணத்தில் அமையும் பொழுது உருவாகும் ஒரு யோகம் தான் லாப திருஷ்டி யோகம். இந்த யோகம் வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதி உருவாக இருக்கிறது. சூரிய பகவான் மற்றும் குரு பகவான் இருவரும் 60 டிகிரி கோணத்தில் சந்திப்பதால் இந்த யோகம் உருவாக இருக்கிறது. இதன் காரணமாக நான்கு ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெற உள்ளனர்.

25
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு லாப திருஷ்டி யோகம் தொழில் வாழ்க்கையில் எதிர்பாராத, பல நேர்மறையான மாற்றங்களை கொண்டு வர உள்ளது. நீங்கள் தொழில் செய்து வருபவர்களாக இருந்தால் உங்கள் லாபம் இரட்டிப்பாவதோடு வருமானம் பன்மடங்காக பெருகவுள்ளது. வேலை மாறுதலுக்காக காத்திருப்பவர்கள், புதிய வேலை தேடி கொண்டிருப்பவர்கள், அரசாங்க உத்தியோகத்திற்காக காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்து பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றை பெறுவீர்கள். நிலம் சார்ந்த விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். வியாபாரம் சிறக்கும். நிதி நிலைமை மேம்படும்.

35
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு லாப திருஷ்டி யோகம் அதிர்ஷ்டத்தை வழங்க உள்ளது. சிறிய அளவில் தொழில் செய்து வருபவர்களுக்கு தொழிலை விரிவாக்கம் வாய்ப்பை இந்த யோகம் கொண்டு வருகிறது. உங்கள் வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் திறக்கப்படும். தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மீள முடியாமல் இருந்த கடன் பிரச்சனைகள் நீங்கி மன அமைதி உண்டாகும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் பெறுவீர்கள். உங்களின் அந்தஸ்து உயரும். திருமணமாகாத நபர்கள் உறவினர்கள் வழியே நல்ல வரன்களைப் பெறுவீர்கள். விரைவில் நல்ல இடத்தில் வரன் அமையும்.

45
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு லாப திருஷ்டி யோகம் பல வழிகளில் நன்மைகளை தரவுள்ளது. உங்களுக்கு திடீர் பண ஆதாயங்கள் கிடைக்கலாம். ஐடி போன்ற அலுவலக வேலை பார்ப்பவர்களுக்கு குழுவைத் தலைமை தாங்கும் பொறுப்புகள் வழங்கப்படலாம். பணியிடத்தில் உங்கள் பணிகள் பாராட்டப்படும். கூட்டாக தொழில் செய்து வருபவர்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு காலம் கைகூடும். வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு எளிதில் கடன் கிடைக்கும். குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்கு தேவையான திட்டங்களை தொடங்குவீர்கள். நிலம், தங்கம் போன்ற விஷயங்களில் முதலீடுகள் செய்வீர்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.

55
தனுசு

தனுசு ராசிக்காரர்களின் நிதி நிலைமையை மேம்படுத்த இந்த யோகம் உதவுகிறது. இவர்களுக்கு லாப திருஷ்டி யோகத்தால் திடீர் வருமானம் ஏற்படும். பங்குச்சந்தை அல்லது பிற முதலீடுகள் வழியே திடீர் பணவரவு ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபடுபவர்கள் தொழிலுக்கான அங்கீகாரத்தை பெறுவதோடு, உங்கள் தொழிலை பிற நாடுகளுக்கு விரிவுப்படுத்தும் வாய்ப்புகளும் கிடைக்கும். சிறிய தொழில் நடத்தி வருபவர்கள் அரசு ஒப்பந்தங்கள், புதிய டெண்டர்கள் மூலம் பெரிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை கணிசமாக மேம்படும். சமூகத்தில் நற்பெயர் உண்டாகும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். இந்த காலத்தில் பணத்தை சேமிப்பதிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் ஜோதிட கருத்துக்கள் மற்றும் மத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவை தகவல்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன் ஏசியாநெட் தமிழ் நிறுவனம் அதை சரிபார்க்கவில்லை. இதன் நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories