Lord Krishna Favourite Zodiac Signs : பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த ராசிகள்.! இவர்களுக்கு ஒரு துளி கஷ்டம் கூட வர விடமாட்டாராம்.!

Published : Sep 11, 2025, 01:52 PM IST

Lord Krishna Favourite Zodiac Signs : ஜோதிட சாஸ்திரங்களின்படி பகவான் கிருஷ்ணருக்கு பிடித்தமான ராசிகள் சில உள்ளன. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
16
Lord Krishna Favourite Zodiac Signs

கிருஷ்ண பகவான் இந்து மதத்தில் முக்கியமான தெய்வங்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவர் விஷ்ணுவின் அவதாரமாக வணங்கப்படுகிறார். கிருஷ்ணரின் ஆளுமை என்பது பன்முகத்தன்மை கொண்டது. அவர் காதலர், ஞானி, வழிகாட்டி, யோகி மற்றும் கர்ம யோகியாக விளங்குகிறார். அவரது குணங்களை சிலர் ராசிகளுடன் தொடர்புபடுத்தி பார்க்கலாம். சில ராசிகளின் இயல்புகள் கிருஷ்ணரின் போதனைகளுடன் ஆழமாக பொருந்திப் போகின்றன. அவர் நமக்கு போதித்த பகவத் கீதையில் ஒருவரின் பக்தி, தர்மம், அன்பு மற்றும் நல்ல செயல்களே மனிதனுக்கு முக்கியம் என்று வலியுறுத்துகிறார். இந்த நற்குணங்களை கொண்ட சில ராசிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

26
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் உறுதியான மனமும், பொறுமையும் கொண்டவர்கள். இந்த குணங்கள் பகவான் கிருஷ்ணரின் மீது அசைக்க முடியாத பக்தியை வளர்க்க உதவுகின்றன. ரிஷப ராசிக்காரர்கள் கிருஷ்ணர் மீது அளவு கடந்த பக்தியை காட்டுகின்றனர். கோகுலத்தில் இருந்த ரிஷப ராசியை சேர்ந்த மக்களும் கிருஷ்ணரிடம் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இருந்தனர். எனவே ரிஷப ராசி கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த ராசிகளில் ஒன்றாக இருக்கிறது.

36
துலாம்

துலாம் ராசி அழகு, சமநிலை மற்றும் நீதியை பிரதிபலிக்கும் ராசியாகும். எனவே கிருஷ்ணர் இந்த ராசிக்காரர்களை மிகவும் விரும்புகிறார். துலாம் ராசியின் கலைத்திறன் மற்றும் உறவுகளில் சமநிலை ஆகியவை கிருஷ்ணரின் பண்புகளுடன் ஒத்துப் போகிறது. மேலும் பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு அளித்த நீதியான ஆலோசனைகள் துலாம் ராசியின் நீதி மற்றும் சமநிலை குணங்களை எதிரொலிக்கின்றன. எனவே துலாம் ராசியும் பகவான் கிருஷ்ணருக்கு விருப்பமான ராசிகளில் ஒன்றாக விளங்குகிறது.

46
தனுசு

தனுசு ராசிக்காரர்கள் உயர்ந்த அறிவு, தத்துவம் மற்றும் சுதந்திரத்தை விரும்பும் குணம் கொண்டவர்கள். பகவான் கிருஷ்ணரும் தத்துவஞானியாகவும், ஆன்மீக வழிகாட்டியாகவும் விளங்குகிறார். அவரது சுதந்திரமான மனோபாவம் குறும்புத்தனமான செயல்கள் மற்றும் உலகை ஆளும் தலைமைப் பண்பு தனுசு ராசியின் குணங்களுடன் ஒத்துப் போகிறது. பகவத் கீதையின் சாரமே தர்மத்தை நிலை நாட்டுவது தான். எனவே தர்மத்தை விரும்பும் தனுசு ராசிக்காரர்கள் பகவான் கிருஷ்ணரின் விருப்பமான ராசிகளில் ஒன்றாகும்.

56
மீனம்

மீன ராசிக்காரர்கள் ஆன்மீகம், இரக்கம் மற்றும் மாயத்தன்மையுடன் தொடர்புடையவர்கள். பகவான் கிருஷ்ணரின் ஆன்மீக ஞானம், பகவத் கீதையில் அவர் வெளிப்படுத்திய யோக மார்க்கங்கள் மற்றும் அவரது அன்பு மற்றும் இரக்கம் ஆகியவை மீன ராசியின் குணங்களுடன் ஒத்துப் போகின்றன. கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனம் மீன ராசியின் மாயை மற்றும் பிரபஞ்ச ஒருமை உணர்வை பிரதிபலிப்பாக உள்ளது. மீன ராசியின் சுயநலமற்ற அன்பு, தியாக உணர்வு போன்ற குணங்கள் கிருஷ்ணருக்கு இந்த ராசிக்காரர்கள் மீது அதிகப் பிரியத்தை ஏற்படுத்துகின்றன.

66
உண்மையான பக்தியே இறைவனை அடையும் வழி

இந்த ராசிகளின் குணங்கள், கிருஷ்ணரின் போதனைகள் மற்றும் அவரது இயல்புடன் ஒத்துப்போனாலும் உண்மையான பக்தியும், தூய மனமும் உள்ளவர்கள் எந்த ராசியில் பிறந்திருந்தாலும் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமானவர்களே. ஒருவர் தன் வாழ்க்கையில் தர்மத்தையும் அன்பையும் கடைப்பிடிப்பாரேயானால் அவர்கள் கிருஷ்ணரின் உண்மையான அன்புக்குரியவர்களாக மாறுகின்றனர். கிருஷ்ணர் தெய்வமாக இருப்பதால் அவருக்கு ராசிகளுடன் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இருக்க வாய்ப்பில்லை. கிருஷ்ணர் குறிப்பிட்ட ராசியை மட்டும் விரும்புவார் என்ற கருதுவது அவரது பரந்த ஆளுமையை குறுக்குவதாக அமையும். கிருஷ்ணரின் அன்பு மற்றும் ஞானம் அனைத்து மனிதர்களுக்கும், அனைத்து ராசிகளுக்கும் உரியவை.

Read more Photos on
click me!

Recommended Stories