Numerology : இந்த தேதிகளில் பிறந்த பெண்களை திருமணம் செய்தால் கணவருக்கு ராஜயோகம்.! பத்து விரலிலும் மோதிரம் மின்னும்.!

Published : Sep 11, 2025, 01:48 PM IST

அதிர்ஷ்ட பெண்கள்: எண் கணிதத்தில் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. நியூமராலஜி படி ஒருவர் பிறந்த தேதியைப் பொறுத்து அவர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அமைகிறது. எந்த தேதிகளில் பிறந்த பெண்ணை மணந்தால் நல்லது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

PREV
15
ராஜயோகம் காத்திருக்கு.!

எண் கணிதம் அல்லது நியூமராலஜி என்பது பலருக்கும் நம்பிக்கையான ஒரு விஷயம். எண் கணிதத்தின் படி, ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு தனித்துவமான பண்பு உண்டு. அது அந்த நபரின் வாழ்க்கையையும், ஆளுமையையும், எதிர்காலத்தையும் கூட பாதிக்கிறது. ஒரு நபர் பிறந்த தேதியை வைத்து அவரது மூல எண்ணை தீர்மானிக்கலாம். மூல எண் எப்போதும் ஒன்று முதல் ஒன்பது வரை இருக்கும். ஒவ்வொரு மூல எண்ணுக்கும் ஒரு கிரகம் அதிபதியாக இருக்கும். அந்த கிரகத்தைப் பொறுத்து அந்த நபரின் வாழ்க்கையும் மாறுகிறது. குறிப்பாக எந்த தேதிகளில் பெண்கள் பிறந்தால் அவர்களின் கணவருக்கு ராஜயோகம் கிடைக்குமோ அதை இங்கே நாம் பார்க்கலாம்.

25
இவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.!

ஒவ்வொரு மாதமும் 6, 15 அல்லது 24 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர்களின் மூல எண் ஆறாக இருக்கும். இந்த ஆறு எண்ணை ஆளுவது சுக்கிரன். சுக்கிரன் அழகு, காதல், ஈர்ப்புக்கு அடையாளமாகக் கூறப்படுகிறது.

35
தேவைகளை பூர்த்தி செய்யும் தேவைதள்.!

இப்படி ஆறு மூல எண்ணாக உள்ள பெண்கள் தங்கள் கணவருக்கு அதிர்ஷ்டத்தைத் தேடித் தருகிறார்கள். அவர்களால் அவர்களின் கணவருக்கு நன்மையே நடக்கும். இவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை மனதார நேசிக்கிறார்கள். எந்த சூழ்நிலையிலும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கணவரின் தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்துகொள்வார்கள். கணவர்களிடம் மென்மையாக நடந்துகொள்வார்கள்.

45
வேலையில் வெற்றி கிடைக்கும்.!

எண் கணிதத்தின் படி, கணவருக்கு எந்த வேலையிலும் ஒத்துழைக்கும் குணம் இந்தப் பெண்களுக்கு இருக்கும். இதனால் வேலையில் வெற்றியும் கிடைக்கும். மேலும் கணவருக்கு உயர் பதவி கிடைக்கும். எனவே கணவர் வாழ்க்கையில் ராஜயோகம் வேண்டுமென்றால் மூல எண் ஆறாக உள்ள பெண்களை மணப்பது நல்லது.

55
அழகான அற்புத ராணிகள்.!

அதுமட்டுமல்லாமல், ஆறு மூல எண் கொண்ட பெண்கள் அழகாக இருப்பார்கள். அனைவரிடமும் எளிதில் பழகுவார்கள். அவர்கள் குடும்பத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்களை அற்புதமான இல்லத்தரசிகள் என்று சொல்லலாம். குடும்பத்திற்கு அதிர்ஷ்டம் தேடித் தருபவர்களாக இவர்களைப் பாராட்டலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories