Astrology: குரு பகவான் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம்.! இந்த 3 ராசிகள் வாழ்க்கை ஒரே அடியாக மாறப் போகிறது.!

Published : Sep 04, 2025, 02:58 PM IST

ஜோதிட சாஸ்திரங்களின்படி இன்னும் சில தினங்களில் குரு மற்றும் சந்திரன் இணைந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்க உள்ளனர். இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் துவங்க உள்ளது.

PREV
14
கஜகேசரி ராஜயோகம்

வேத நாட்காட்டியின் படி இந்த ஆண்டு பித்ரு பக்ஷம் செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21 ஆம் தேதி முடிவடைகிறது. சந்திர பகவான் செப்டம்பர் 14 ஆம் தேதி மிதுன ராசியில் நுழைய இருக்கிறார். குரு ஏற்கனவே மிதுன ராசியில் பயணித்து வரும் நிலையில், குரு மற்றும் சந்திரனின் இணைவால் கஜகேசரி ராஜயோகம் உருவாக உள்ளது. இதன் காரணமாக சில ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கலாம். சில ராசிகளின் தொழில் பிரகாசிக்கக்கூடும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜ யோகம் நல்ல பலன்களைத் தரவுள்ளது. இந்த ராஜயோகம் கன்னி ராசியின் வணிக ஸ்தானத்தில் உருவாக இருப்பதால் இவர்கள் வணிகம் மற்றும் தொழில் ரீதியாக மிகப்பெரும் வெற்றியை அடைய உள்ளனர். வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு நல்ல இடத்தில் அதிக ஊதியத்துடன் வேலை கிடைக்கும். எழுத்து, ஊடகத்துறையில் இருப்பவர்கள் சிறப்பு நன்மைகளை பெறலாம். ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வு, புதிய வேலை வாய்ப்புகளை பெறலாம். தொழில் காரணமாக பயணங்கள் செல்வீர்கள். இதனால் நிதி ஆதாயம் கிடைக்கும். வணிகத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நிதிநிலை மேம்படுவதால், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

34
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் நல்ல பலன்களை அளிக்க உள்ளது. இந்த யோகம் உங்கள் வருமானம் மற்றும் லாப ஸ்தானத்தில் உருவாக உள்ளது. எனவே உங்கள் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படலாம். மேலும் புதிய வருமான ஆதாரங்கள் மூலம் நீங்கள் எளிதில் பணம் சம்பாதிக்கலாம். வேலையில் பதவி உயர்வு அல்லது புதிய வேலை கிடைக்கலாம். படிக்கும் மாணவர்களுக்கு வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலைக்காக வெளிநாடு செல்லும் கனவில் இருப்பவர்களுக்கு கனவு நிறைவேறும். போட்டியாளர்களை விட வணிகத்தில் நீங்கள் முன்னேறி இரட்டிப்பு லாபத்தை பெறுவீர்கள். முதலீடுகளால் பலன் அடைவீர்கள்.

44
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் உருவாவது மிகுந்த பலன்களை அரிக்கும். இந்த ராஜயோகம் ஜாதகத்தின் இரண்டாவது வீட்டில் உருவாக உள்ளது. இதன் காரணமாக உங்களுக்கு திடீர் பண ஆதாயங்கள் ஏற்படலாம். உங்கள் தொழிலை விரிவாக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். திருமணமானவர்களுக்கு கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உங்கள் பேச்சுத் திறமையால் தொழிலில் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். திட்டமிட்ட வேலைகள் நடைபெறும். கடனாகப் பெற்ற பணங்கள் திரும்ப கிடைக்கலாம். நீங்கள் எங்காவது கடன் வாங்கியிருந்தால் அந்த திருப்பி அடைத்து விடுவீர்கள்.

(குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் ஜோதிட அடிப்படையில் பெறப்பட்டவை மட்டுமே இதன் நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது ஏசியான தமிழ் நிறுவனம் இந்த தகவல்களை சரி பார்க்கவில்லை)

Read more Photos on
click me!

Recommended Stories