
அனைத்து பெண்களுமே தான் பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் ராணி போல வாழ வேண்டும் என்று ஆசை கொள்கின்றனர். ஆனால் இந்த ஆசை அனைத்து பெண்களுக்கும் நிறைவேறி விடுவதில்லை. சில பெண்களுக்கு மட்டுமே இந்த யோகம் கிடைக்கிறது. ஜோதிடத்தின் படி சில பெண்கள் பிறந்த ராசி, நட்சத்திரம் அல்லது மாதம் இதற்கு காரணமாக இருக்கிறது. ராணி போல என்றால் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், அவர்கள் சுதந்திரமாக இருப்பது, உரிமையுடன் இருப்பது, அவர்களின் விருப்பங்களில் குறிக்கீடு இல்லாமல் இருப்பது போன்றவையும் அடங்கும். எந்த மாதத்தில் பிறந்த பெண்கள் ராணி மாதிரி வாழ்வார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜனவரி மாதத்தில் பிறந்த பெண் பெண்கள் சூரியனின் ஆதிக்கத்தின் கீழ் வருபவர்கள். அவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்கள், பொறுமைசாலிகள், மற்றும் நீண்டகால வெற்றியை அடையும் திறமையைக் கொண்டுள்ளனர். அவர்கள் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் வலிமையான ஆளுமையும், சக்தி வாய்ந்த மன வலிமையையும் கொண்டுள்ளனர். இவர்கள் தங்கள் மன உறுதி மூலமாக தங்கள் குடும்பத்தினரையும் பிறரையும் வழிநடத்தும் குணத்தை பெற்றுள்ளனர். ஞானத்தில் சிறந்த விளங்கும் இவர்கள், சிறந்த வழிகாட்டிகளாகவும், தலைவர்களாகவும் விளங்குகின்றனர் இவர்கள் ஒரு அரசியல் போல தங்கள் குடும்பத்தையும் சமூகத்தையும் வழிநடத்துகின்றனர். இவர்களின் புன்னகையும், அன்பான அணுகுமுறையும் எப்போதும் மற்றவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது.
ஏப்ரல் மாதத்தில் பிறந்த பெண்கள் தைரியமும், தன்னம்பிக்கையும் நிறைந்தவர்கள். இவர்கள் எந்த ஒரு சவாலையும் ஒரு கை பார்த்து விடலாம் என்கிற மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களில் உறுதியான மனப்பான்மை மற்றும் நேர்மையான அணுகுமுறை இவர்களை ஒரு ராணியை போல மாற்றுகிறது. இவர்கள் தங்கள் கருத்துக்களை தைரியமாக வெளிப்படுத்துவதுடன் மற்றவர்களுக்கு உத்வேகமாகவும் திகழ்கின்றனர். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் தெளிவான இலக்குகளை வைத்துள்ளனர். புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களின் கம்பீரமான தோற்றமும் நம்பிக்கையான பேச்சும் அவர்களை மற்றவர்களிடமிருந்து தனித்து காட்டுகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே அரசப் பண்புகள் கொண்டவர்கள். இவர்கள் தங்கள் ஆளுமையாலும், தன்னம்பிக்கையாலும் எப்போதும் மற்றவர்களை ஈர்க்கின்றனர். இவர்களின் தலைமைத்துவம் மற்றும் மக்களை ஒருங்கிணைக்கும் ஆற்றல் இவர்களை உண்மையான தலைவராக மாற்றுகிறது. இவர்கள் வாழ்க்கையில் எப்போதும் உயர்ந்த இலக்குகளை நோக்கி நடப்பார்கள். தங்கள் முடிவுகளில் உறுதியாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருப்பார்கள். இவர்களின் கம்பீரமான நடை, உடை, பாவனை ஆகியவை ஒரு அரசியல் போல தோற்றம் அளிக்க செய்யும். இவர்கள் தங்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள்.
நவம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் ஆழமான புத்திசாலித்தனமும், ஆளுமையும் கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களில் மனதை எளிதில் புரிந்து கொள்ளும் திறன் பெற்றவர்கள். இவர்களில் உள்ளுணர்வு மற்றும் பகுத்தறிவு அவர்களை சிறந்த முடிவு எடுப்பவராக மாற்றுகிறது. இதன் காரணமாக அவர்கள் குடும்பத்தினரின் மனதை சரியாக புரிந்து கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருப்பார்கள். எனவேதான் குடும்ப உறுப்பினர்கள் இந்த மாதத்தில் பிறந்த பெண்களை உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கின்றனர். இவர்கள் அமைதியான அதேசமயம் கம்பீரமான ஆளுமையுடன் திகழ்வது மட்டுமல்லாமல் தன்னுடைய தனித்துவமான பாணியாலும், அறிவுத்திறனாலும் குடும்பத்தில் தனக்கென ஒரு உயர்ந்த இடத்தை பிடிக்கின்றனர்.
டிசம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் உற்சாகமும், ஆர்வமும் நிறைந்தவர்கள். இவர்கள் எப்போதும் தங்கள் இலக்குகளை அடைய உத்வேகத்துடன் செயல்படுகிறார்கள். எந்த சூழலிலும் தங்கள் தகவமைத்துக் கொள்ளும் திறன் படைத்து விளங்குகின்றனர். இவர்கள் தங்களது குடும்பத்தையும், நண்பர்களையும் ஒரு தலைவர்கள் போல இறந்து வழிநடத்துகின்றனர். தங்கள் குரலை உயர்த்தாமலேயே மற்றவர்களை எப்படி சொல்படி நடக்க வைக்க வேண்டும் என்ற வித்தையை அறிந்திருக்கிறார்கள். இவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை எந்தவித பயமும் இன்றி பாதுகாக்கின்றனர். முடிவுகளை எடுக்கும் பொழுது புத்திசாலித்தனமாக எடுக்கின்றனர். இவர்களின் ஞானம் வீட்டை ஆட்சி செய்யும் அளவிற்கு சக்தி வாய்ந்த பெண்களாக மாற்றுகிறது.