
படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது மிகப்பெரிய கனவாகும். சிலர் எவ்வளவு முயன்றாலும் அரசு வேலை கிடைப்பது சவாலான காரியமாக இருக்கிறது. ஆனால் சிலர் குறைந்த உழைப்பை நல்கி, அரசு வேலையை பெற்று விடுகின்றனர். இதற்கு காரணம் அவர்கள் ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் நிலையாகும். ஒருவருக்கு அரசு வேலை கிடைப்பதற்கு ஜாதகத்தில் குறிப்பிட்ட கிரகங்களின் அமர்வு முக்கியமாக கருதப்படுகிறது. அரசு வேலை யோகத்தை தரும் முக்கிய கிரகங்கள் மற்றும் அவை எந்தெந்த வீடுகளில் அமைந்தால் அரசு வேலை கிடைக்கும் என்பது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் - பிறக்கும் போதே கஜகேசரி ராஜயோகத்துடன் பிறக்கும் ராசிகள் யார்? குருவின் சக்திவாய்ந்த பார்வை இவர்களுக்கு எப்போதும் இருக்குமாம்.!
இதையும் படியுங்கள் - உங்க ஜாதகத்துல குரு பகவான் இந்த வீட்ல இருக்காரா? அப்போ நீங்க கோடீஸ்வரர் ஆவது உறுதி.!
ஜாதகத்தில் உள்ள 12 வீடுகளில் அரசு வேலைக்கு முக்கியமாக பார்க்க வேண்டிய வீடுகள் 1,5,6,10 மற்றும் 11ஆம் தேதிகள் ஆகும்.
இதையும் படியுங்கள் - தனுசு ராசியில் பிறந்தவர்களின் பிறப்பின் தெய்வீக ரகசியம் என்ன தெரியுமா? பாம்பாட்டி சித்தர் கூறிய உண்மைகள்.!
சூரிய பகவான் பத்தாம் வீட்டில் தனித்தோ அல்லது சுப சேர்க்கையோ பெற்றிருந்தால் அரசு வேலை கிடைப்பது ஏறக்குறைய உறுதி. பத்தாம் வீடு சூரியன் திக்பலம் அடையும் வீடாகும். 1,5,6,9 ஆகிய வீடுகளில் சூரியன் இருந்தாலும் சொந்த வீடான சிம்மம் அல்லது உச்ச வீடான மேஷத்திலும் அமைவது மிக சிறப்பு.
இதையும் படியுங்கள் - பூச நட்சத்திரத்தில் அமரும் புதன் பகவான்.! 4 ராசிக்காரர்களுக்கு குபேர ஐஸ்வர்யத்துடன் அடிக்கும் ஜாக்பாட்.!
சனி ஆறாம் வீட்டில் இருப்பது எதிரிகளையும், போட்டிகளையும் வெல்லும் தைரியத்தைத் தரும். பத்தாம் வீட்டில் சனி பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் நிலையான அரசுப் பணி அமையும். சூரிய பகவானும், சனி பகவானும் 6,10,11 ஆகிய வீடுகளோடு சுபமான முறையில் தொடர்பு கொண்டால் (பார்வை அல்லது சேர்க்கை) அரசு வேலை கிடைக்கும் யோகம் உண்டாகும்.
இதையும் படியுங்கள் - இந்த தேதிகளில் பிறந்தவர்களால் பேய், பிசாசு நடமாட்டத்தை உணர முடியும்.! அமானுஷ்ய விஷயங்கள் கண்ணுக்கு தெரியுமாம்.!
செவ்வாய் 6 அல்லது 10-ஆம் வீட்டில் இருப்பது அரசு வேலை உறுதி செய்யும். பத்தாம் வீட்டில் செவ்வாய் பகவான் திக் பலம் பெறுகிறார். மகரத்தில் உச்சம் பெற்று அல்லது மேஷம் அல்லது விருச்சிகம் போன்ற சொந்த வீடுகள், 3,6,10 ஆகிய வீடுகளில் அமர்ந்தால் ராணுவம், காவல் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த அரசு பணிகள் கிடைக்கும்.
இதையும் படியுங்கள் - உங்க கல்யாணம் சீக்கிரம் நடக்குமா? லேட்டா நடக்குமா? பிறந்த தேதியே வச்சே கண்டுபிடிக்கலாம் வாங்க.!
குரு பகவான் பத்தாம் வீட்டில் அமர்ந்தாலோ அல்லது பத்தாம் வீட்டை தனது சுப பார்வையால் பார்த்தாலோ மிக உயர்ந்த பதவிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற வேலைகள் கிடைக்கும் அல்லது பச்சை மையால் கையெழுத்திடும் அளவிற்கு மிக உயர்ந்த அரசு பணிகளில் சேருவீர்கள்.
இதையும் படியுங்கள் - ஜாதகத்தில் சனி பகவான் எந்த வீட்டில் அமர்ந்து இருக்கிறார்னு பாருங்க.! உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்னு நாங்க சொல்றோம்.!
பத்தாம் வீட்டின் அதிபதியும் ஆறாம் வீட்டின் அதிபதியும் ஒன்று கூடினாலோ அல்லது பரிவர்த்தனை பெற்றாலோ அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு மிக அதிகம். சூரியன் மற்றும் புதன் இணைவது புதாதித்ய யோகம் உருவாகும். இந்த யோகம் 1,6,10 ஆகிய வீடுகளில் அமைந்தால் அரசுத் தேர்வுகளில் மிகச்சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைவர். அரசு வேலைக்கான தேர்வுகளை எழுதும் பொழுது ஜாதகருக்கு குரு, செவ்வாய், சூரியன் அல்லது 6,10-ஆம் வீட்டின் அதிபதிகளின் தசா புக்தி நடப்பது மிக மிக முக்கியமாகும்.
இதையும் படியுங்கள் - இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஒழுக்கமாகவும், சுய கட்டுப்பாடோட இருப்பாங்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
சுருக்கமாகச் சொன்னால் உங்கள் ஜாதகத்தில் சூரியனும், பத்தாம் வீடு அல்லது பத்தாம் வீட்டின் அதிபதியும் பலமாக இருந்து, ஆறாம் வீட்டில் சுப தொடர்பும் அமைந்தால் நிச்சயமாக அரசு வேலை கிடைப்பதற்கான யோகம் உண்டு. ஜோதிட சாஸ்திரங்கள் ஒரு வழிகாட்டி மட்டுமே. அரசு வேலை கிடைப்பதற்கு கிரகங்களின் நிலையோடு தொடர் உழைப்பும், கடுமையான முயற்சியும் அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)