Animals in Dreams Meaning : கனவுகளின் சாஸ்திரத்தின்படி, சில விலங்குகள் கனவில் தோன்றுவது செல்வம், மங்களம் மற்றும் புதிய வாய்ப்புகளின் தொடக்கத்தின் அடையாளம் என்று கூறப்படுகிறது. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
கனவு சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கனவிற்கும் ஒரு அர்த்தம் உண்டு. இந்து கலாச்சாரத்தில் கனவுகளுக்கு சிறப்பு இடம் உண்டு. சில விலங்குகள் கனவில் வருவது மகாலட்சுமியின் அருளைக் குறிக்கும். குறிப்பாக சில விலங்குகள் கனவில் வருவது என்பது செல்வம், சுபம் மற்றும் புதிய வாய்ப்புகளின் தொடக்கத்தைக் குறிக்கிறது. எந்தெந்த விலங்குகள் கனவில் வந்தால் நல்லது என்று இங்கே பார்ப்போம்.
26
வெள்ளைப் பசு/யானை கனவில் வந்தால்
கனவில் பசு மற்றும் யானையைக் காண்பது மிகவும் மங்களகரமானது. வெள்ளைப் பசு பண வரவையும், யானை ராஜயோகத்தையும் குறிக்கிறது. யானை நீரில் குளிப்பது போல கனவு வந்தால் நிதி சிக்கல்கள் நீங்கும், கடன் பிரச்சினைகள் குறையும் என்பது அர்த்தம். ஒரு வெள்ளைப் பசு உங்கள் வீட்டில் சுற்றித் திரிவது போலவோ அல்லது வீட்டின் வாயில் நிற்பது போலவோ கனவு கண்டால் உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கப்போவதாக அர்த்தம்.
36
பாம்பு கனவில் வந்தால்
பலர் பாம்பு கனவில் வருவதை கண்டு பயந்தாலும், கனவு சாஸ்திரத்தின் படி பாம்புகள் எப்போதும் கெட்ட சகுனம் அல்ல. ஒரு அமைதியான பாம்பு கனவில் வந்தால் புதையல் அல்லது திடீர் பண வரவைக் குறிக்கும். பாம்பு தீங்கு செய்யாமல் சென்றால், வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கும் என்பதாக அர்த்தம்.
கனவு சாஸ்திரத்தின் படி மீன்கள் மகாலெட்சுமியின் அம்சமாக கருதப்படுகின்றன. நீரில் நீந்தும் மீன்கள் கனவில் வந்தால் வியாபாரத்தில் லாபம், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். இரண்டு மீன்கள் ஒன்றாக வந்தால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், குடும்பத்தில் செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை.
56
வெள்ளைக் குதிரை கனவில் வந்தால்
வெள்ளைக் குதிரையில் சவாரி செய்வது போல் கனவு கண்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் விரைவாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. வெள்ளைப் புறா அல்லது அன்னம் கனவில் வந்தால் வாழ்வில் அமைதி கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
66
சிங்கம், புலி கனவில் வந்தால்
சிங்கம், புலி கனவில் வருவது பயமாகத் தோன்றலாம். ஆனால் இது தலைமைப் பண்பைக் குறிக்கும். அதிகாரமிக்க பதவிகள் உங்களைத் தேடி வருவதை இது குறிக்கிறது. மயில் தோகை விரித்து ஆடினால் அதிர்ஷ்டக் கதவுகள் திறக்கும் என கனவு சாஸ்திரம் கூறுகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)