இந்த தீபாவளிக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கப்போகும் ராசிகள் இவை தான்.. உங்க வாழ்க்கையே மாற போகுது

First Published | Nov 1, 2023, 4:35 PM IST

இந்த தீபாவளி பண்டிகைக்கு மகாலட்சுமியின் அருளால் எந்தெந்த ராசிகளுக்கு யோகம் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

mars and ketu conjunction

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. வரும் 12-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளியில் சில ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி அருள் கிடைக்க போகிறது. ஜோதிட சாஸ்திரப்படி ஒன்றரை வருடங்கள் கழித்து அக்டோபர் 30-ம் தேதி கேது வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த கிரகம் துலாம் ராசியில்  இருந்து விலகி கன்னி ராசியில் வக்ர பெயர்ச்சியில் நுழைந்துள்ளது.

Ketu Gochar 2023

கேது பெயர்ச்சிக்கு முன் செவ்வாயும் கேதுவும் துலாம் ராசியில் இணைந்திருந்தனர். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை ஒரு அசுப யோகத்தை உருவாக்கியது. ஆனால் தற்போது கேதுவின் சஞ்சாரத்தால் இந்த தோஷ யோகம் முறிந்தது. இந்த தீபாவளி பண்டிகையில் எந்தெந்த ராசிகளுக்கு யோகம் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
 

Tap to resize

மேஷம் : தீபாவளி அன்று மேஷ ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மியின் கருணை இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் உருவாகும். இதனால். மேஷ ராசிக்காரர்கள் லக்ஷ்மியின் அருளால் பொருளாதார ரீதியாக பலன் அடைவார்கள். பண வரவு சிறப்பாக இருக்கும். திட்டமிடப்பட்ட முதலீடு பெரும் லாபத்தை தரும்..

ரிஷபம் : கேது மற்றும் செவ்வாயின் அசுப சேர்க்கை முறிந்ததால், ரிஷப ராசிக்காரர்கள் வாழ்வில் பொன்னான ஆச்சரியங்களைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட வேலைகளை இனி முடிக்க முடியும். இந்த நேரத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்கும், ஆனால் வருமானத்தின் அளவு அதிகரிக்கும். மாணவர்களின் ங்கள் கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்கும். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

Gemini daily horoscope

மிதுனம் : மிதுன ராசிக்காரர்களின் வீட்டில் தீபாவளியன்று தாயார் லட்சுமி நுழைவார். இதன் விளைவாக, மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நிதி ஆதாயம் ஆகியவை அவர்களின் வாழ்க்கையில் பல மடங்கு அதிகரிக்கும். இது வரை பணப் பற்றாக்குறை இருந்தாலும், இனி அந்த நிலை இருக்காது. பண வரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவீர்கள். மிதுன ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் சேமிப்பை அதிகரிக்கலாம்.

தீபாவளி அன்று தவறுதலாக கூட செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்க இதை படிங்க..
 

Libra and Aquarius

துலாம்- செவ்வாய் மற்றும் கேதுவின் தோஷ சேர்க்கை கடந்து செல்வதால், தீபாவளிக்கு துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும். இந்த நேரத்தில் தொழிலில் புதிய வெற்றியை அடைவீர்கள். பெரிய நிறுவனத்தில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், உடல்நிலை சற்று மோசமடையக்கூடும். எனவே துலாம் ராசிக்காரர்கள் தங்கள் உடலில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

விருச்சிகம் : இந்த தீபாவளிக்கு மகாலட்சுமியின் அருள் விருச்சிக ராசியில் விழும். தொழில் வாழ்க்கையில் சில சிறந்த வாய்ப்புகளைப் பெறப் போகிறீர்கள். ஆனால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏதேனும் விசேஷ காரணங்களால் செலவு கூடும். ஆனால் படிப்படியாக இந்த நிலை கடந்து போகும். விருச்சிக ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் பொருளாதார ரீதியாக பலன் அடைவார்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.

Latest Videos

click me!