தீபாவளி முதல் இந்த 3 ராசிகளுக்கு அமோகமான பொற்காலம்.. பண மழை கொட்டப் போகுது.. !

First Published | Oct 28, 2023, 12:41 PM IST

தீபாவளி நாளில் 4 அற்புத ராஜ யோகங்கள் உருவாவதால் சில ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி இந்த ஆண்டு நவம்பர் 12 அன்று கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு தீபாவளி சில ராசிக்காரர்களுக்கு ராஜ யோகத்தை கொடுக்கப் போகிறது. ஜோதிட சாஸ்திரப்படி இந்த ஆண்டு தீபாவளி அன்று 4 ராஜ யோகங்கள் உருவாகப் போகிறது. 500 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ராஜயோகங்கள் உருவாக உள்ளது என்பது தான் கூடுதல் சிறப்பு..

அதன்படி செவ்வாயும் சூரியன் சேர்க்கையால் ஆதித்ய மங்கள யோகம் உருவாகிறது. அதே நேரத்தில் சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் நின்று சஷ ராஜயோகத்தை உருவாக்குகிறார். இது தவிர ஆயுஷ்மான் யோகமும் உருவாகி உள்ளது. மேலும் சூரியன் புதன் சேர்க்கையால் புதாத்ய ராஜ யோகம் உருவாக உள்ளது. இப்படி தீபாவளி நாளில் 4 அற்புத ராஜ யோகங்கள் உருவாவதால் சில ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது. குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கும் லட்சுமி தேவியின் பரிபூரண அருள் கிடைக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்று பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Tap to resize

மகரம்

இந்த 4 ராஜயோகங்களால் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும்.. தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். பணம் சம்பந்தமான விஷயங்களில் சிறப்பான பலன்கள் உண்டாகும். உங்கள் துணையுடனான உறவு மிகவும் வலுவாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். அதன் மூலம் புதிய பொறுப்பு கிடைக்கும். இந்த நேரத்தில், பழைய முதலீடுகளில் இருந்து கூட நல்ல லாபம் கிடைக்கும்.

5 Intriguing Gemini personality traits that you need to know

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு நான்கு ராஜயோகங்கள் அமைவது மிகவும் சாதகமாக அமையும். இந்த நேரம் அதிர்ஷ்டமான நேரம் என்றே சொல்ல வேண்டும்.. இது தவிர, வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான காரணங்களுக்காக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். எனினும் இந்த பயனங்களால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். ந. வேலையில் வெற்றி பெறுவீர்கள். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு இந்தக் காலம் சிறப்பாக இருக்கும். மேலும், இந்த நேரத்தில் நீங்கள் சில சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில புதிய வேலை தொடர்பான ஆலோசனைகளைப் பெறலாம். உங்களின் பொருள் வசதிகள் அதிகரிக்கும்.

சந்திர கிரகணத்துடன் உருவாகும் ராஜயோகம்..இந்த ராசிக்கு பொன்னான நேரம்.. கோடீஸ்வரர் ஆகலாம்!
 

மேஷம் 

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் அமைவது வரப்பிரசாதமாக அமையும். குரு சண்டால யோகம் அக்டோபர் 30-ல் உங்கள் ராசியில் முடிவடையும் என்பதால், சனி உங்கள் ராசியின் வருமான வீடாகச் செல்கிறார். அதனால் இந்த முறை உங்கள் வருமானம் அதிகரிக்கும். வருமானம் கிடைக்க புதிய வழிகள் ஏற்படும். உங்களின் வருமானம், பணவரவு அதிகரிக்கும். இந்த காலக்கட்டத்தில் ஒருபோதும் நிதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாது. மேலும், இந்த நேரத்தில் நீங்கள் பழைய முதலீடுகளிலிருந்து பயனடைவீர்கள். இக்காலத்தில் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். பங்கு முதலீடு, ஊக வணிகம் மற்றும் லாட்டரி மூலம் லாபம் கிடைக்கும்.

Latest Videos

click me!