Astrology: ஆக்டோபர் 09, இன்றைய ராசி பலன்கள்.! பணமழை கொட்டப்போகும் போகும் ராசிகள்.! புதிய வாய்ப்புகள் கைகூடும்.!

Published : Oct 09, 2025, 07:24 AM IST

இந்த தினசரி ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் இன்றைய கணிப்புகளை வழங்குகிறது. வேலை, நிதி, குடும்பம், மற்றும் உடல்நலம் குறித்த ஆலோசனைகளுடன், ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட நிறம், எண் மற்றும் பரிகாரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
112
மேஷம் (Aries) - விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்!

மேஷ ராசி நேயர்களே,  இன்று உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். வேலைவாய்ப்பு அல்லது ஒரு புதிய திட்டம் துவங்குவதில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். ஆனால் பிறருடன் நெகிழ்வாக இருக்க வேண்டியது அவசியம். விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.  திடீரென  சில அதிரடி செலவுகள் தோன்றலாம். குடும்பத்தில் விவாதங்கள் தோன்ற வாய்ப்புள்ளது. விட்டுக்கொடுத்து சென்றால் அமைதி நிலவும். உடல் நலத்தில் அக்கரை தேவை. 

பரிகாரம்:  சூரியனை வணங்குங்கள்

அதிர்ஷ்ட நிறம் — சிவப்பு

அதிர்ஷ்ட எண் — 9

வழிபட வேண்டிய தெய்வம் — மார்த்தாண்ட சூரியன்.

212
ரிஷபம் (Taurus) - புதிய முயற்சிகளை துவங்க சிறந்த நாள்

ரிஷப ராசி நேயர்களே, நிதானமான சிந்தனை இன்று உங்களை முன்னேற்றும். புதிய முயற்சிகளை துவங்க சிறந்த நாள். வியாபாரம் மற்றும் தொழிலில்  சிறிய லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் பழைய பிரச்சினை ஒன்று முழுமையாக தீரும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். காதலில் நம்பிக்கை அதிகரிக்கும். உடல்நலனில் அக்கரை தேவை. சிறிய சளி அல்லது காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளது கவனமாக இருங்கள். 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

அதிர்ஷ்ட எண்: 6 

பரிகாரம்: விநாயகரை வணங்குங்கள்

 தெய்வம்: பெரியபெருமாள்

312
மிதுனம் (Gemini) - அதிர்ஷ்டம் கதவை தட்டும்.!

மிதுன ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு தொடர்புகளால் அதிர்ஷ்ட பலன்கள் வரும் நாள். நண்பர்கள் அல்லது சக பணியாளர்களின் உதவி கிடைக்கும். பணம் பற்றிய சின்ன சிக்கல் விரைவில் தீரும். திடீர் பயணம் வாய்ப்பு ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவு கரம் நீட்டுவார்கள். உடல்நலத்தில் அக்கரை தேவை. தலைவலி, தூக்கக்குறைவுக்கு தீர்வு காணுங்கள். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. உடற்பயிற்சி மற்றும் யோகா மனதிற்கு நிம்மதி தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 5 

பரிகாரம்: விநாயகர் வழிபாடு 

தெய்வம்: அய்யனார்

412
கடகம் (Cancer) - காத்திருந்த நல்ல செய்தி வந்து சேரும்!

கடக ராசி நேயர்களே,  இன்று குடும்ப உறவுகள் பலப்படும் நாள். நீண்ட நாளாக காத்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். திடீர் பண வரவு நிம்மதி தரும். முதலீடுகளில் லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.பெண்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும், அதனை சரியாக பயன்படுத்தி கொள்வது சிறப்பு. காதலில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண முயற்சிகள் முடிவக்கு வரும். கெட்டி மேளம் கொட்டுவதற்கு நாள் குறிக்கப்படும். உறவினர்கள் நல்ல செய்தி கொண்டு வருவர்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம் 

அதிர்ஷ்ட எண்: 2 

பரிகாரம்: மாரியம்மனை வணங்குங்கள் 

தெய்வம்: அம்மன்

512
சிம்மம் (Leo) - புதிய பொறுப்பு கையிக்கு வரும்

சிம்ம ராசி நேயர்களே, உங்கள் முயற்சிக்கு இன்று பாராட்டும் புகழும் கிடைக்கும். பணியில் புதிய பொறுப்பு கையிக்கு வரும். தொழில் மற்றும் முதலீட்டில் வெற்றி வாய்ப்பு உண்டு. காதலில் உங்கள் அன்பு புரிந்துகொள்ளப்படும். குடும்பத்தில் அன்பான பேச்சால் மதிப்பு பெறுவீர்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: தங்க மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 1 

பரிகாரம்: சூரியனை வணங்குங்கள் 

தெய்வம்: முருகன்

612
கன்னி (Virgo) - உங்கள் திட்டமிடல் வெற்றியளிக்கும்.!

கன்னி ராசி நேயர்களே, இன்று உங்கள் நீண்ட கால முயற்சி மற்றும் திட்டமிடல் வெற்றியளிக்கும். சிறு சிறு சிக்கல்கள் இருந்தாலும் நிதானமாக கையாளுவீர்கள். வியாபாரம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் காணலாம். பணம் சேமிப்பது எதிர்கால திட்டங்களுக்கு நல்ல பலன் தரும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை உங்களை வழிநடத்தும். உடல்நலம் நன்றாக இருக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு 

அதிர்ஷ்ட எண்: 5 

பரிகாரம்: விஷ்ணுவை வணங்குங்கள் 

தெய்வம்: பெருமாள்

712
துலாம் (Libra) - சமநிலை, அமைதி இன்றைக்கு மிக முக்கியம்.!

துலாம் ராசி நேயர்களே, சமநிலை, அமைதி இன்றைக்கு மிக முக்கியம். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு வரலாம். எல்ல விஷயங்களையும் அமைதியாக அணுகுங்கள். பணம் வரவிலும் சிறிய தாமதம் இருக்கும். காதல் உறவில் புரிதல் தேவை. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம். வார்த்தைகளில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 7 

பரிகாரம்: குருவை வணங்குங்கள் 

தெய்வம்: லட்சுமி

812
விருச்சிகம் (Scorpio) - வேலைப்பிரச்னைகள் தீரும்.!

விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு இன்று உங்களின் ஆழமான சிந்தனை மற்றும் நம்பிக்கை வெற்றியளிக்கும் நாள். நீண்ட காலமாக நிலவி வந்த வேலைப்பிரச்னைகள் தீரும். பால்ய நண்பர்களின் உதவி கிடைக்கும். காதல் உறவில் உண்மையுடன் நடந்தால் கிடைக்கும் நிம்மதி தொடரும். வியாபாரம் மற்றும் தொழிலில் சிறிய லாபம் வரும். கோபத்தை கட்டுப்படுத்து பல விஷயங்களில் வெற்றியை தேடித்தரும்.

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 4 

பரிகாரம்: கார்த்திகேயனை வணங்குங்கள் 

தெய்வம்: பைரவர்

912
தனுசு (Sagittarius) - பெண்கள் வழியே நல்ல செய்தி கிடைக்கும்.!

தனுசு ராசி நேயர்களே, பயணம், புதிய முயற்சி, நம்பிக்கை  ஆகியவை இன்று உங்களுக்கு பலமாக இருக்கும். தொழிலில் புதிய திட்டம் உருவாகும். பண வரவு நிம்மதி தரும். காதல் மற்றும் குடும்ப வாழ்க்கையில் நெருக்கம் ஏற்படும். உடல்நலம்  நல்ல நிலையில் இருக்கும். அன்பானவர்களின் ஆலோசனை பல வெற்றிகளை உங்கள் காலடியில் கொண்டு வரும். பணியிடத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பெண்கள் வழியே நல்ல செய்தி கிடைக்கும். எந்த செயலை தொடங்கினாலும் இறை வழிபாட்டிற்கு பிறகு தொடங்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம் 

அதிர்ஷ்ட எண்: 3 

பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்குங்கள் 

தெய்வம்: ஹனுமான்

1012
மகரம் (Capricorn) - உழைப்பிற்கு முழு பலன் கிடைக்கும்

மகர ராசி நேயர்களே, இன்று உழைப்பிற்கு முழு பலன் கிடைக்கும். புதிய பொறுப்பு வந்தாலும் அதை திறமையாக கையாளுவீர்கள். குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் நிலவும். பணத்தை சேமிக்க வாய்ப்பு கிடைக்கும். பண வரவு திருப்தி அளிக்கும். காதலில் புரிதல் ஏற்பட்டு அதனால் உறுதி ஏற்படும். 

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் 

அதிர்ஷ்ட எண்: 8 

பரிகாரம்: சிவபெருமானை வணங்குங்கள் 

தெய்வம்: ஈசன்

1112
கும்பம் (Aquarius) - பொறுமை அவசியம், நிதானம் தேவை.!

கும்ப ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். குழு வேலைகள் வெற்றியளிக்கும். பணத்தை செலவிடுவதில் நிதானம் தேவை. காதலில் சிறு பிரச்சினை வரலாம், பொறுமை அவசியம், விட்டுக்கொடுத்து செல்லவும். உடல்நலம் சீராக இருக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: ஊதா 

அதிர்ஷ்ட எண்: 11 

பரிகாரம்: துர்கையம்மனை வணங்குங்கள் 

தெய்வம்: சக்தி

1212
மீனம் (Pisces) - சந்தோஷம் மிகுந்த நாள்.!

மீன ராசி நேயர்களே,  இன்று உணர்ச்சி நிறைந்த நாள். கலை, கல்வி, ஆன்மீகம் ஆகிய துறைகளில் முன்னேற்றம் காணப்படும். பணம் வரவில் திருப்தி ஏற்படும். குடும்ப வாழ்வில் சந்தோஷம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். உறவினர்கள் தானாக முன்வந்து உதவி செய்வர். காதலில் மகிழ்ச்சி ஏற்படும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: நீலம் 

அதிர்ஷ்ட எண்: 2 

பரிகாரம்: நாராயணனை வணங்குங்கள் 

தெய்வம்: விஷ்ணு

Read more Photos on
click me!

Recommended Stories