
இன்று 8 நவம்பர் 2025. கிரகம், நக்ஷத்திரங்களின் நிலைப்பாட்டினால் சிலருக்கு புதிய தொடக்கமும், சிலருக்கு சோதனையும் தரக்கூடிய நாள். ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்கள் நாளை எப்படிச் சரிவரக் கையாளலாம்? நல்லவை என்ன? கவனிக்க வேண்டியவை என்ன? ஒவ்வொரு ராசியையும் தனித்தனியாகப் பார்க்கலாம்.
இந்த ராசிக்காரர்களுக்கு வேலை தொடர்பான சுப செய்தி வந்து சேரும். நீண்டநாள் வேலை தேடுபவர்களுக்கு இன்று நல்ல வாய்ப்பு உண்டு. திருமணமாகாதவர்களுக்கு வரன் பற்றிய பேச்சுகள் வரக்கூடும். தாயின் உடல்நிலை குறித்து கவலை இருந்தாலும், அது விரைவில் நல்லபடியாகும். அசையாச் சொத்துக்களால் லாபம் கிடைக்கலாம். காதல் வாழ்க்கை இனிமையாகும்.
பொதுவாக ரிஷப ராசிக்காரர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால் இன்று சொல்வதை விளைவாகப் பார்க்கவும். உடல்நலத்தில் கவனக்குறைவு பெரிய பிரச்சினையைக் கொடுக்கலாம். லாப வாய்ப்புகள் இருந்தாலும், பெரும் ரிஸ்க் எடுக்க வேண்டாம். காதல் விஷயங்களில் சண்டை வர வாய்ப்பு உள்ளது.
இன்று உங்களால் தவறாக எடுக்கப்படும் முடிவுகள், நஷ்டத்தை உண்டாக்கலாம். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம் என்று ஜோதிடம் அறிவுறுத்துகிறது. வேலையில் சற்று தடங்கல்கள் ஏற்படலாம். குளிர், காய்ச்சல் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது.கவனம்தேவை. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும்.
காதல் வாழ்க்கையில் இன்று நிறைவான நிம்மதியும், புரிதலும் இருக்கும். வீட்டில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கு இடமானாலும், குணமடைவார்கள். இன்று உங்கள் மனதுக்கு நிம்தியும் சந்தோஷமும் கிடைக்கும். ஆலயம் சென்றல் நல்லது. பயணம் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் தரும். நீண்ட கால நண்பர்கள் உங்களை தேடி வருவார்கள். பணம் வரும் யோகம் உண்டு.
பழைய பண விவகாரங்கள் இன்று தீர்வுகாணலாம். தொலைந்த பொருள் கிடைத்தால், அதிசயப்பட வேண்டாம். கணவன்-மனைவி இடையே அன்பும், புரிதலும் அதிகரிக்கும். வேலையில் புதிய பொறுப்புகளும், பதவி உயர்வும் எதிர்பார்க்கலாம்.
வியாபார சம்பந்தமாக வெளிநாடு அல்லது தூரபயணம் ஏற்படலாம். மேலதிகாரிகள் உங்களின் செயல்திறனை பாராட்டுவார்கள். முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்தில் பங்கு கிடைக்கும். குழந்தைகள் சாதனை படைப்பார்கள் குடும்பத்திற்கு பெருமை தரும்.
சட்ட ரீதியான பிரச்சனைகள் வரலாம். வீட்டில் பரபரப்பு அதிகரிக்கலாம். பணம் வஷயத்தில் கவனம் தேவை. பங்குச் சந்தையில் தவறான முடிவுகளை எடுக்காதீர்கள்! வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. மெதுவாக மட்டுமே ஓட்டவும்.
பணம் கைகூடாததால் கவலை வரும்! துணிவோடு செயல்பட்டால் இலக்கை அடையலாம். இன்று நிதி நெருக்கடிகள் இருக்கும், திட்மடிட்டால் சாதிக்கலாம். ஆனால் மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். காதல் விஷயத்தில் புரிதல் இல்லாமை சண்டை வரவழைக்கும். பருவ நோய்களில் சிக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
இன்று எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கலாம். அச்சம், ஐயம் ஆகியவை மனதை தாக்கலாம். முதலீடு செய்வதில் கவனம் தேவை. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு இந்த நாள் அன்பான வாழ்த்துகள் கொண்டு வரும்.
இன்று உஙகளின் கனவு நனவாகும் நாள்! நிதி லாபம் அதிகரிக்கும். இளைஞர்களுக்கு தொழில் நல்ல முன்னேற்றம் தரும். வீட்டு சூழலில் கலகலப்பு, புதுப்பிள்ளை வரவு கூட இருக்கலாம். உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். புதிய முதலீடுகள் லாபத்தை தரும். பணவரவு இருக்கும் என்பதால் அதனை சேமித்து வைத்தால் எதிர்காலம் சிறக்கும்.
இன்று அரசியல் தொடர்புடையவர்களுக்கு பெரிய ஆதரவு கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபமும் இருக்கும். வீடு வாங்கும் யோசனை நிறைவேறும். குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து வெளியூர் பயண் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது.
வேலை, வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். மாமியார் வீடு அல்லது அயல்மாநிலத்திலிருந்து பண வரவு கிடைக்கும். பங்குச் சந்தை மூலம் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஆட்சி செய்யும்.