Astrology: ஒரே ராசியில் சந்திக்கும் 4 கிரகங்கள்.! இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் புயல் வீசப் போகுது.!

Published : Oct 02, 2025, 12:35 PM IST

Chaturgrahi Yog 2025: அக்டோபர் மாதத்தில் ஒரே ராசியில் நான்கு கிரகங்கள் சந்திப்பதால் சதுர் கிரக யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்கள் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
14
சதுர் கிரக யோகம் 2025

ஜோதிட ரீதியாக அக்டோபர் மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் செவ்வாய், புதன், சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய நான்கு கிரகங்களும் துலாம் ராசியில் சந்திக்க இருக்கின்றன. இதன் காரணமாக உருவாகும் சதுர் கிரக யோகம் மூன்று ராசிக்காரர்களுக்கு எதிர்மறை விளைவுகளைத் தரும் என்று கூறப்படுகிறது. அந்த ராசிகள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.

24
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சதுர் கிரக யோகம் உருவாவது எதிர்மறை பலன்களைத் தரலாம். நிதி ரீதியாக அவர்கள் நெருக்கடிகளை சந்திக்க நேரிடலாம். அவர்களின் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்காமல் போகலாம். பணத்தின் தேவைகள் அதிகமாக இருப்பதால் கடன் வாங்க வேண்டிய சூழலும் ஏற்படலாம். அலுவலகத்தில் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். பனிச்சுமை அதிகரிக்கலாம். திருமண வாழ்க்கையிலும் சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்.

34
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சதுர் கிரக யோகம் துரதிர்ஷ்டமான பலன்களை வழங்கும். இந்த காலக்கட்டத்தில் கடுமையான பொருளாதார சிக்கல்கள் ஏற்படும். வணிகத்தில் ஈடுபடுபவர்கள் நஷ்டங்களை சந்திக்கலாம். குடும்பத்தில் பதற்றமான சூழல் ஏற்படலாம். சொத்து தொடர்பாக இருந்த சிக்கல்கள் மேலும் அதிகரிக்கலாம். நிதி இழப்புகள், நம்பிக்கை துரோகங்கள் மற்றும் உறவில் விரிசல்கள் ஆகியவற்றை சந்திக்கலாம். ஒட்டுமொத்த மன அழுத்தம் அதிகரிக்கலாம்.

44
மீனம்

மீன ராசியின் எட்டாவது வீட்டில் சதுர் கிரக யோகம் உருவாக இருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் பல சவால்களை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக சதித்திட்டங்கள் தீட்டலாம். சதி வேலை காரணமாக நீங்கள் வேலையை இழக்கும் சூழலும் ஏற்படலாம். முதலீடுகளில் இருந்தும் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். விபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் பயணங்களை தவிர்க்கவும். வாகனம் ஓட்டும் போது அதிக கவனம் தேவை. ஆரோக்கியத்திலும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories