October month graha peyarchigal: அக்டோபர் மாதத்தில் பல கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றி பெயர்ச்சி அடைய உள்ளன. இதன் காரணமாக சில ராசிகளின் தலைவிதியே மாறவுள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. கிரகங்களின் இந்த பெயர்ச்சி மனித வாழ்க்கையில் எதிரொலிக்கின்றன. கிரகங்கள் தங்களது நிலையை மாற்றும் பொழுது 12 ராசிக்காரர்களுக்கும் சாதகமான அல்லது பாதகமான மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் 6 கிரகங்கள் தங்களது நிலையை மாற்றுகின்றன. இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் சிறப்பான நன்மைகளை பெற உள்ளனர். அந்த ராசிகள் என்ன? கிரகங்களில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
25
அக்டோபரில் ஏற்படும் கிரக மாற்றங்கள்
அக்டோபர் 3, 2025 வெள்ளிக்கிழமை - புதன் துலாம் ராசிக்குள் நுழைவார்.
அக்டோபர் 9, 2025 வியாழக்கிழமை - சுக்கிரன் கன்னி ராசிக்குள் நுழைவார்.
அக்டோபர் 17, 2025 வெள்ளிக்கிழமை - சூரியன் துலாம் ராசிக்குள் நுழைவார்.
அக்டோபர் 18, 2025 சனிக்கிழமை - குரு பகவான் கடக ராசிக்குள் நுழைவார்.
அக்டோபர் 24, 2025 வெள்ளிக்கிழமை - புதன் துலாம் ராசியில் இருந்து வெளியேறி விருச்சிக ராசிக்குள் நுழைவார்.
அக்டோபர் 27, 2025 திங்கட்கிழமை - செவ்வாய் விருச்சிக ராசிக்குள் நுழைவார்.
35
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் சிறப்பான மாதமாக இருக்கும். இந்த மாதம் அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கவுள்ளது. உங்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகள் திறக்கப்படும். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கலாம். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும்.
சிம்ம ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் தொழிலில் நல்ல லாபத்தை காண்பார்கள். வருமானம் இரட்டிப்பாகும். வேலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. நீண்ட காலமாக சிக்கி இருந்த பணம் மீண்டும் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும்.
55
கும்பம்
கும்ப ராசியில் சனிபகவான் வக்ர நிலையில் இருக்கிறார். இதன் காரணமாக அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நிலுவையில் இருந்த பணிகள் நிறைவடையும். எதிர்பாராத பண வரவால் செல்வம் பெருகும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, பணம் கைக்கு வந்து சேரும். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த மாதம் சாதகமாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)