Chandran Peyarchi 2025: ராகு பகவான் வீட்டில் நுழைந்த சந்திரன்.! இந்த ராசிகளுக்கு நல்ல காலம் தொடங்கியாச்சு.!

Published : Dec 26, 2025, 12:41 PM IST

Chandran Peyarchi Palangal in Tamil: மனதின் காரகராக விளங்கும் சந்திர பகவான் ராகுவின் சொந்த நட்சத்திரமான சதய நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதன் காரணமாக மூன்று ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
14
சந்திரன் சதய நட்சத்திரப் பெயர்ச்சி 2025

வேத ஜோதிடத்தில் சந்திரன் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் இரண்டரை நாட்களுக்கு ஒரு முறை ராசியை மாற்றுகிறார். அதே போல் குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது நட்சத்திரத்தை மாற்றுகிறார். இந்த நிலையில் டிசம்பர் 25, 2025 காலை 8:00 மணியளவில் அவர் சதய நட்சத்திரத்திற்குள் நுழைந்திருக்கிறார். சதய நட்சத்திரத்தின் அதிபதியாக ராகு பகவான் விளங்கி வருகிறார். நட்சத்திரப் பெயர்ச்சி 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கும் என்றாலும், மூன்று ராசிகளின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட உள்ளது. அது குறித்து இங்கு காணலாம்.

24
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திர பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி நேர்மறையான மாற்றங்களை அளிக்க உள்ளது. வாழ்க்கையில் இதுவரை நிலவி வந்த பல பிரச்சனைகள் தற்காலிகமாக நீங்கும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் பணியிடத்தில் புதிய மாற்றங்களை அனுபவிப்பார்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். தொழில் செய்து வருபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் அல்லது ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரலாம். அடுத்த சில மாதங்களுக்கு எந்த ஒரு நிதி நெருக்கடியையும் எதிர்கொள்ள மாட்டீர்கள்.

34
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சந்திரனின் பெயர்ச்சி புதிய செல்வாக்கை கொண்டு வரும். வாழ்க்கையில் புதிய ஸ்திரத்தன்மை ஏற்படும். மனக்கஷ்டங்கள் நீங்கி அமைதியை உணர்வீர்கள். உங்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறக்கூடும். வேலையிடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரி செய்யப்படும். உங்கள் இலக்குகளை நோக்கிய பயணம் மேலும் எளிதாகும். இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு எதிர்பாராத பரிசுகள் கிடைக்கலாம். தொழில் செய்து வருபவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அரசு ஒப்பந்தங்கள் அல்லது புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். 2026 ஆம் ஆண்டு தொடக்கத்திற்கு முன்னர் நிலம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் இறுதியாகும். சொத்துக்கள் வாங்கும் யோகம் கிடைக்கும்.

44
துலாம்

துலாம் ராசிக்காரர்கள் அடுத்த சில தினங்களுக்கு மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிக்க இருக்கின்றனர். மாணவர்கள் கல்வியில் சிறப்பான வெற்றிகளைப் பெறுவார்கள். வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். தாயார் வழி உறவு மேம்படும். தந்தை மற்றும் தாயின் ஆரோக்கியம் மேம்படும். உடல்நலப் பிரச்சனைகள் நீங்கி, மன அமைதி ஏற்படும். வாழ்க்கையின் அனைத்து கட்டத்திலும் வெற்றியைப் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றியில் முடியும். நிதி நிலைமை வலுப்படும். உங்கள் ஆரோக்கியத்திலும் நேர்மறையான முன்னேற்றங்களைக் காண்பீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories