உங்கள் மனைவிக்கு இந்த குணங்கள் இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் ஒரு பாக்கியசாலி.! சாணக்கியர் கூறும் ரகசியம்

Published : Jan 08, 2026, 12:56 PM IST

Chanakya's advice on husband wife relationships: சில குணங்களை கொண்ட பெண்கள் வீட்டுக்கு மருமகளாக வந்தால் அந்த வீடு அதிர்ஷ்டத்தால் நிறையும் என்று சாணக்கியர் கூறுகிறார். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
15
Chanakya's advice on husband wife relationships:

சாணக்கியரின் நீதிபடி ஒரு ஆணின் வாழ்க்கை சொர்க்கமாக மாறுவதும், நரகமாக மாறுவதும் அவனின் வாழ்க்கைத் துணையின் குணங்களைப் பொறுத்து அமைகிறது. ஒரு ஆண் எத்தகைய குணங்களைக் கொண்ட பெண்ணை மனைவியாக பெற்றால் அதிர்ஷ்டசாலி என்று சாணக்கியர் கூறுகிறார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
புத்திசாலித்தனம்

ஒரு பெண் அழகாக இருப்பதைவிட புத்திசாலியாக இருப்பது முக்கியம் என்று சாணக்கியர் கூறுகிறார். அறிவு என்பது கல்வியை பற்றியது மட்டுமல்ல வாழ்க்கையை புரிந்து கொள்வதும், சிறந்த முறையில் நடந்து கொள்வதும் பற்றியது. அத்தகைய குணங்கள் கொண்ட மனைவி எப்போதும் தனது கணவரை புரிந்து கொள்வாள். அழகு தற்காலிகமானது, ஆனால் புத்திசாலித்தனம் நிலையானது என்கிறார் சாணக்கியர். கடினமான சூழலில் சரியாக முடிவெடுக்கத் தெரிந்த அறிவுக் கூர்மை கொண்ட மனைவி கிடைத்தால் அந்த ஆணின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது என்று சாணக்கியர் கூறுகிறார்.

35
கணவன் வெற்றியில் மகிழும் பெண்

சாணக்கியரின் கூற்றுப்படி ஒரு ஆணின் வெற்றியில் மனைவி அக்கறை கொண்டிருந்தால் அவன் தான் உண்மையான அதிர்ஷ்டசாலி என்று சாணக்கியர் கூறுகிறார். ஒரு பெண் தன் கணவரின் கனவுகள் மற்றும் இலக்குகளை ஆதரித்து அந்த பயணத்தில் உடன் இருந்தால் அந்த ஆண் எளிதில் வெற்றியைப் பெறுவார் என்று சாணக்கியர் கூறுகிறார். இத்தகைய குணங்களைக் கொண்ட மனைவி கணவருக்கு எப்போதும் ஊக்கத்தை அளித்து அவரது தன்னம்பிக்கையை இரட்டிப்பாக்குவார் என்று சாணக்கியர் கூறுகிறார்.

45
அமைதியான இயல்பு

சாணக்கியரின் கூற்றுப்படி அமைதியான இயல்புடைய பெண் மகாலட்சுமியின் வடிவமாக கருதப்படுகிறார். கணவர் கோபப்படும் நேரங்களில் அல்லது குடும்பத்தில் சவால்கள் வரும் பொழுது அதை பொறுமையுடன் கையாளும் பெண்ணால் அந்த வீட்டில் எப்போது மகிழ்ச்சி நிலைத்திருக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார். அதே போல் கடுமையான சொற்களை பேசாமல் கனிவாகவும், எளிமையாகவும் பேசும் பெண்களை பெற்றப் ஆண் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கூறுகிறார். இந்தப் பெண்கள் குடும்ப உறுப்பினர்களிடையே பிணைப்பை ஏற்படுத்துவதோடு சமூகத்திலும் கணவருக்கு நற்பெயரை பெற்று தருவார்கள்.

55
சிக்கனம், ஆன்மீக நாட்டம்

பணத்தை வீணாக்காமல் குடும்பத்தின் எதிர்காலத்திற்காக சேமிக்கும் பழக்கம் கொண்ட பெண் குடும்பத்தின் முதுகெலும்பாக திகழ்கிறார். இவர் பொருளாதார நெருக்கடி ஏற்படும் சமயத்தில் கணவனுக்கு பெரும் துணையாக இருப்பார். உண்மையான அன்பும், விசுவாசத்துடனும் இருக்கும் பெண்கள் அமைப்பது மிகப்பெரிய பாக்கியம். இத்தகைய பெண்கள் எத்தகைய சோதனையிலும் கணவனை விட்டுக் கொடுக்காமல் உறுதுணையாக இருப்பார்கள். நல்ல ஒழுக்கமும், ஆன்மீகத்தில் நம்பிக்கையும் கொண்ட பெண்கள் குழந்தைகளுக்கு சிறந்த நற்பண்புகளை கற்றுக் கொடுப்பார்கள். இதனால் அடுத்த தலைமுறையும் சிறப்பானதாக அமையும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories