இன்று உருவாகும் புதாதித்ய ராஜயோகம்.! தொழிலில் அம்பானியாக மாறப்போகும் 4 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?

Published : Mar 07, 2026, 12:12 PM IST

மார்ச் 7, 2026 கும்ப ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம் பற்றியும், இந்த ராஜயோகத்தால் பலன் பெறும் ராசிகள் பற்றியும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
15
Budhaditya Rajyog 2026 Lucky Zodiac Signs

ஜோதிடத்தின்படி மார்ச் 7, 2026 கும்ப ராசியில் சூரியனும் புதனும் இணைவதன் மூலம் சக்தி வாய்ந்த புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. ஜோதிடத்தில் சூரியன் ஆற்றல் மற்றும் அதிகாரத்தின் காரகராகவும், புதன் பகவான் புத்திசாலித்தனம், அறிவு, பேச்சு, வணிகம் ஆகியவற்றின் காரகராகவும் விளங்குகின்றனர். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு அமோகப் பலன்களையும், அதிரடி மாற்றங்களையும் தர இருக்கிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் பற்றி இங்கு விரிவாகக் காணலாம்.

25
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு புதாதித்ய ராஜயோகம் 11-வது வீடான லாப ஸ்தானத்தில் நடக்க இருக்கிறது. இதன் காரணமாக நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். கடன் உதவிக்காக எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு தேவையான நேரத்தில் பண உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையில் இருப்பவர்கள் மீண்டும் எழுவார்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். சகோதரர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும்.

35
மிதுனம்

மிதுன ராசியின் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தந்தை வழியில் சொத்துக்கள் சேரும். ஆன்மீகம் சார்ந்த பயணங்கள் செல்ல நேரிடலாம். வேலைக்காக வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் கைகூடும். வேலையில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களின் நன் மதிப்பு உயரும். சக ஊழியர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும்.

45
சிம்மம்

சிம்ம ராசியின் களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த வீடானது திருமண மற்றும் கூட்டாண்மைகளை குறிக்கும் வீடாகும். பார்ட்னர்ஷிப் தொழிலில் இருப்பவர்கள் நல்ல லாபம் ஈட்டுவீர்கள். தம்பதிகளுக்கு இடையே இருந்த கசப்புணர்வுகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். அரசுத்தேர்வுகள் அல்லது போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. வேலையில்லாமல் இருந்து வருபவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் இருந்து நேர்காணலுக்கான அழைப்புகள் வரக்கூடும்.

55
கும்பம்

கும்ப ராசியிலேயே இந்த ராஜயோகம் உருவாவதால் அடுத்த சில வாரங்களுக்கு உங்களுக்கு நடக்கும் அனைத்தும் நல்லதாகவே நடக்கும். முடங்கி கிடந்த காரியங்கள் வேகம் எடுக்கும். உங்கள் பேச்சுக்கு பிறர் மதிப்பு கொடுப்பார்கள். நீண்ட கால உடல் உபாதைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் இருந்து வருமானம் வரத் தொடங்கும். மேலும் கும்ப ராசியில் சனி பகவானில் ஆதிக்கமும் கலந்திருப்பதால் நேர்மையான வழியில் உழைப்பவர்களுக்கு மட்டுமே இந்த ராஜயோகம் சுப பலன்களைத் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories