Astrology: வக்ர நிலையை அடைந்த புதன்.! அம்பானி ஆகப் போகும் 3 ராசிகள்.! தொழிலில் கொடிகட்டிப் பறக்கப் போறீங்க.!

Published : Nov 06, 2025, 03:15 PM IST

Budhan Vakra Peyarchi 2025: புதன் பகவான் துலாம் ராசியில் வக்ர நிலையை அடைய இருக்கிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்க உள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
14
புதன் வக்ரப் பெயர்ச்சி 2025

ஜோதிடத்தின்படி கிரகங்கள் சீரான இடைவெளியில் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. சில சமயங்களில் அவை பின்னோக்கியும் நகர்கின்றன. வக்ர நிலை என்பது பூமியிலிருந்து பார்க்கும் பொழுது கிரகங்கள் பின்னோக்கி செல்வது போல தோன்றும் ஒரு நிகழ்வாகும். அந்த வகையில் புதன் பகவான் நவம்பர் 10 ஆம் தேதி துலாம் ராசியில் வக்ரமடைய இருக்கிறார். வணிகம், படிப்பு, பேச்சு, புத்திசாலித்தனம், அறிவு, தகவல் தொடர்பு ஆகியவற்றின் காரகராக விளங்கும் புதன் பகவானின் இந்த பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு புதன் பகவானின் வக்ர பயணம் பல வழிகளில் நன்மையை அளிக்க உள்ளது. புதன் உங்கள் ராசியின் கர்ம ஸ்தானத்தில் வக்ர பாதையில் செல்லப் போகிறார். எனவே இந்த நேரத்தில் நீங்கள் முதலீடுகள் அல்லது வணிக முயற்சிகளில் இருந்து எதிர்பாராத லாபத்தைப் பெறுவீர்கள். உங்கள் தொழில் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் உருவாகும். உங்கள் தொழிலை விரிவாக்கம் அல்லது மறுசீரமைக்க முயற்சி செய்தால் அதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பம் மற்றும் சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். தொழிலதிபர்கள் குறிப்பிடத்தக்க நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள்.

34
கும்பம்

புதனின் வக்ரப் பயணம் கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். கும்ப ராசியின் அதிர்ஷ்ட வீட்டில் புதன் வக்ரமாக சஞ்சரிக்க இருக்கிறார். எனவே அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். உங்கள் நிதி நிலைமை கணிசமாக மேம்படும். முதலீடுகளில் மூலம் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். சொத்துக்களில் இருந்த பிரச்சனை நீங்கி பூர்வீக சொத்துக்கள் உங்கள் வாரிசுகளின் கைகளில் வந்து சேரும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வேலை இடத்தில் உங்கள் திறமைகள் பாராட்டப்படும். இதன் காரணமாக பதவி உயர்வு பெறுவீர்கள். குடும்பத்தினரிடம் இருந்து நல்ல செய்தியைப் பெறுவீர்கள். உள்நாடு அல்லது வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

44
கன்னி

புதனின் வக்ரப் பயணம் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். புதன் பகவான் கன்னி ராசியின் செல்வ வீட்டில் வக்ர நிலையில் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக நீங்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களை அனுபவிக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் பேச்சு மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும். இதன் காரணமாக பலரையும் ஈர்ப்பீர்கள். சந்தைப்படுத்துதல், கல்வி, வங்கி மற்றும் பேச்சு சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு மிகப்பெரும் வெற்றி கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஆர்டர்கள் அல்லது ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். வேலையை மாற்ற விரும்புபவர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். வங்கி இருப்பு உயரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories