
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமென்று ஆசை கொண்டிருப்பார்கள். ஆனால் இது அனைவருக்கும் சாத்தியமில்லை. ஜோதிடத்தின்படி ஒருவரின் பிறந்த மாதம் அவர்களின் ஆயுள், ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றில் செல்வாக்கு செலுத்த கூடும் என்று நம்பப்படுகிறது. குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் நீண்ட காலம் வாழ்வதற்கான வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இந்த மாதங்களில் பிறந்தவர்கள் பொதுவாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும், நீண்ட ஆயுளையும் பெறுவதாக கருதப்படுகிறது. இந்த கட்டுரையில் எந்தெந்த மாதங்களில் பிறந்தவர்கள் நீண்ட ஆயுளைப் பெறுகிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் சுக்கிர பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் உணர்ச்சிகளால் பிணைக்கப்பட்டவர்கள். பொதுவாக அமைதியான மனநிலையும், மன அழுத்தத்தை சமாளிக்கும் திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதோடு உடல் நலத்தை பராமரிக்கும் பழக்கங்களையும் மேற்கொள்கின்றனர். தங்கள் உடல்நலனில் இவர்கள் கொள்ளும் அக்கறை அவர்கள் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தங்கள் வேலைக்கும், ஓய்வுக்கும் இடையே சரியான சமநிலையை கடைபிடிக்கின்றனர். மேலும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைக்கின்றனர். இதுவே இவர்களுக்கு நீண்ட ஆயுளை வழங்குகிறது.
செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் செவ்வாயால் ஆளப்படுகின்றனர். ஒழுக்கமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதில் வல்லவர்கள். இவர்கள் மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காக மனதை ரிலாக்ஸ் செய்யும் பழக்கங்களை மேற்கொள்கின்றனர். மேலும் உணவு முறையிலும் கவனமாக இருக்கின்றனர். தங்கள் புத்திக் கூர்மையால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துகின்றனர். தங்கள் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் அதிக அக்கறையுடன் இருக்கின்றனர். கடுமையான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி முறைகளை பின்பற்றுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணுகின்றனர். உடலில் ஏதேனும் சிறு பிரச்சனை ஏற்பட்டால் கூட மருத்துவரை சந்தித்து ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்கின்றனர். இது அவர்களின் நீண்ட ஆயுளுக்கு வழி வகுக்கிறது.
அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் சூரிய பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் தங்கள் சக்தி வாய்ந்த ஆளுமைக்கு பெயர் பெற்றவர்கள். வாழ்க்கையின் மீதான ஆர்வம் இவர்களுக்கு அதிகமாக உண்டு. சூரிய பகவானின் அருள் இருப்பதால் வாழ்க்கையில் எந்த விதமான சிக்கல் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் திறனைப் பெற்றுள்ளனர். அவர்கள் எப்போதும் சோம்பலாக இருப்பதை விரும்பவில்லை. எப்போதும் சுறுசுறுப்பாகவும் மற்றவர்களை முந்திச் செல்லும் ஆர்வமும் கொண்டுள்ளனர். சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை விரைவாக மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டுள்ளனர். அவர்களில் மன உறுதி, எதையும் தாங்கும் வலிமை மற்றும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருத்தல் போன்றவை அவர்களின் நீண்ட ஆயுளுக்கு பங்களிக்கிறது.
டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் குரு பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்களுக்கு இயல்பிலேயே ஆரோக்கியம் மீதான அக்கறை உண்டு. ஒழுக்கமான வாழ்க்கை முறையை பின்பற்றுகின்றனர். உற்சாகமான மனநிலையும் நேர்மறையான எண்ணமும் கொண்டவர்கள். இவர்கள் குருவின் அருளால் ஞானத்தையும், முதிர்ச்சியையும் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்கள் உடல் நலனில் அதீத அக்கறையுடன் விளங்குவார்கள். உடலில் ஏதேனும் சிறு மாற்றம் ஏற்பட்டால் கூட அதை முறையாக கண்டறிந்து மருத்துவ ஆலோசனைகளை பெற்று தங்களை மேம்படுத்திக் கொள்வார்கள். மேலும் இவர்களில் ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள், தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை தவிர்த்தல் ஆகியவற்றின் காரணமாக அவர்களின் ஆயுள் அதிகரிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள் மற்றும் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் அடிப்படையில் பெறப்பட்டவை மட்டுமே. இந்த தகவல்களை ஏசியாநெட் தமிழ் நிறுவனம். சரி பார்க்கவில்லை. இதன் விளைவுகள் மற்றும் நம்பகத்தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)