Vastu Tips: கட்டில் அடியில் 'இந்த' பொருட்கள் இருந்தால் கடன் தீரவே தீராது! உடனே அப்புறப்படுத்துங்க!

Published : Aug 20, 2026, 04:20 PM IST

Vastu Tips: படுக்கையறை வாஸ்துப்படி கட்டிலுக்கு அடியில் பழைய இரும்பு உள்ளிட்ட பொருட்களை வைக்கக்கூடாது. இவை எதிர்மறை ஆற்றலை பரப்பி தூக்கமின்மை, பண இழப்பு, குடும்பப் பிரச்சனைகளை உண்டாக்கும். இது குறித்து விரிவாக பார்ப்போம்.

PREV
17
கட்டில் அடியில் 'இந்த' பொருட்கள் இருந்தால் கடன் தீரவே தீராது

நமது படுக்கை என்பது சாதாரணமாக உடலைச் சாய்க்கும் மரப்பலகை மட்டுமல்ல; அது வீட்டின் சுபிட்சத்தையும் நேர்மறை அதிர்வுகளையும் தக்கவைக்கும் முதன்மை இடம். நாம் உறங்கும் இடத்தை சுற்றியுள்ள தூய்மையும் அமைப்பும் தான் நமது தூக்கம், மன நிம்மதி மற்றும் உடலின் புத்துணர்ச்சியைத் தீர்மானிக்கின்றன.

இன்றைய வீடுகளில் இடம் போதவில்லை என்பதற்காக கட்டிலின் கீழ் பகுதியைச் சேமிப்பறையாக மாற்றுவது பலரின் வழக்கம். ஆனால், வாஸ்து ரீதியாகப் பார்க்கும் போது, படுக்கைக்கு அடியில் சில பொருட்களை அடுக்கவது குடும்பத்தில் நிம்மதியைக் குலைத்து, கடுமையான எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

இதையும் படிங்க: புதன் பெயர்ச்சி அலர்ட்: 3 ராசிகளுக்கு பண இழப்பு, குழப்பம்.. தப்பிக்க எளிய பரிகாரங்கள்!

27
முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் 5 பொருட்கள்

மொபைல் சார்ஜர்கள், எலக்ட்ரானிக் வயர்கள் அல்லது பழைய பேட்டரிகளை கட்டிலுக்கு அடியில் ஒருபோதும் வைக்காதீர்கள். வாஸ்துப்படி இவை அசுபமானதாகக் கருதப்படுகிறது. இவை மனதை அமைதியற்றதாக மாற்றுவதோடு, உங்கள் தூக்கத்தின் தரத்தைக் கெடுத்து மன அழுத்தத்திற்கும் காரணமாகலாம்.

இதையும் படிங்க: செவ்வாய் - ராகு சேர்க்கை: அங்காரக யோகத்தால் அடிமேல் அடி வாங்கப்போகும் 4 ராசிகள்.. தப்பிக்க எளிய பரிகாரங்கள்!

37
பழைய காகிதங்கள் மற்றும் ரசீதுகள்
நிறைய பேர் பழைய செய்தித்தாள்கள், பயனற்ற ரசீதுகள் அல்லது காகிதங்களை கட்டிலுக்கு அடியில் குவித்து வைப்பார்கள். இவை எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும். உங்கள் கட்டிலுக்கு அடியில் இதுபோன்ற பொருட்கள் இருந்தால், உடனடியாக அவற்றை அப்புறப்படுத்துங்கள். பயனுள்ள ஆவணங்களை மட்டும் வேறு எங்காவது நேர்த்தியாக வைக்கவும்.
47
பழைய மற்றும் கிழிந்த ஆடைகள்
பழைய அல்லது கிழிந்த துணிகளை கட்டிலுக்கு அடியில் பதுக்கி வைக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், இன்றே அதை விட்டுவிடுங்கள். இப்படிச் செய்வதால், வீட்டுச் சூழல் 'பாரமாக' உணரப்படும். மேலும், உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றப் பாதையில் தேவையற்ற தடைகள் உருவாகும் என்று நம்பப்படுகிறது.
57
கூர்மையான பொருட்கள்

கத்தரிக்கோல், கத்தி, ஊசி அல்லது பின் போன்ற கூர்மையான பொருட்களை மறந்தும் கட்டிலுக்கு அடியில் வைக்காதீர்கள். வாஸ்து சாஸ்திரத்தின்படி, இது வீட்டில் அதிகப்படியான மன அழுத்தத்தை உருவாக்குகிறது. குடும்ப உறுப்பினர்களிடையே சின்ன விஷயங்களுக்குக் கூட வாக்குவாதங்கள் அல்லது சண்டைகள் தொடங்க இது காரணமாகலாம்.

67
மருந்துகளை வைக்காதீர்கள்
இரவு நேரத்திலோ அல்லது அவசர காலத்திலோ எளிதாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காக பலர் மருந்துகளை கட்டிலுக்கு அடியில் வைப்பார்கள். ஆனால் வாஸ்துப்படி இது மிகவும் தவறான பழக்கம். இது உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தி, நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.
77
தேவையற்ற பொருட்கள் வேண்டாம்
உங்கள் கட்டிலுக்கு அடியில் எந்தத் தேவையற்ற பொருட்களும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கட்டிலுக்கு அடியில் உள்ள இடம் எவ்வளவு காலியாகவும் சுத்தமாகவும் இருக்கிறதோ, அந்த அளவுக்கு நேர்மறை ஆற்றல் உங்களைச் சுற்றி எளிதாகப் பரவும். இது உங்களுக்கு அமைதியான தூக்கத்தையும் வாழ்க்கையில் வெற்றியையும் தரும்.
Read more Photos on
click me!

Recommended Stories