இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்.. லாட்டரியில் பணம் கொட்டப்போகுது.. பாபா வங்கா சொன்ன ரகசியம்!

Published : Apr 08, 2026, 06:11 PM IST

Baba Vanga Predictions 2026: பல்கேரியாவின் வான்ஜெலியா பாண்டேவா குஷ்டெரோவாவை உலகம் பாபா வங்கா என்று அழைக்கிறது. அவரது கணிப்புத் திறன் அற்புதமானது மற்றும் கற்பனை செய்ய முடியாதது.

PREV
16
பாபா வங்கா கணிப்பு; 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்

உலகில் இப்போது நடந்து வரும் பல்வேறு நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்த தீர்க்கதரிசி பாபா வங்காவின் கணிப்புபடி 2026ம் ஆண்டில் 4 ராசிகள் உச்சத்துக்கு செல்லப் போகின்றன. இந்த நான்கு ராசிகளின் கல்வி, தொழில், காதல் வாழ்க்கை என அனைத்தும் மிளிரப் போகிறது. லாட்டரியில் பணம் கொட்டப் போகும் அளவுக்கு இந்த நான்கு ராசிகளும் வெற்றி பெறப் போகிறார்கள். இந்த 4 ராசிகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்

26
ரிஷப ராசியினருக்கு பொன்னான காலம்

பாபா வங்கா கணிப்புபடி ரிஷப ராசிக்காரர்களுக்கு பணம் கொட்ட போகிறது. நிதி பாதுகாப்பும் புதிய வாய்ப்புகளும் உங்களை தேடி வரும். நிலம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும். நீண்ட கால முதலீடு இப்போது கை கொடுக்கும். புதிய வருமான வழிகள் உங்களை நோக்கி வரும். புதிய வீடு வாங்க வாய்ப்பு கிடைக்கும். தொழில் வாழ்க்கை உச்சத்தில் செல்ல வேண்டிய நேரம் இது.

36
கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட‌ம் கொட்டும்

2026 ஆம் ஆண்டு கன்னி ராசிகளுக்கு அதிர்ஷ்டமிக்க ஒரு ஆண்டாக அமையும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். நிதி சிக்கல்கள் தீர்ந்து நிதி பலன்கள் கிடைக்கும். தொழில் விருத்தி ஆகும். நிலுவையில் இருந்த பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். வாழ்க்கை துணையிடம் கருத்து வேறுபாடுகள் அகலும்.

46
விருச்சிகம்

2026 ஆம் ஆண்டு விருச்சிக ராசியினருக்கும் சமூகமான ஆண்டாக அமைந்துள்ளது. தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் உருவாகும். பணியிடத்தில் தலைமை பொறுப்புக்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பல நல்ல நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வரும். வெளிநாடு செல்ப‌வர்களுக்கு இது ஒரு சிறந்த ஆண்டாக இருக்கும். புதிய வேலை நிமித்தமாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

56
கும்பம்

கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை கடந்த மூன்று மாதங்கள் கொஞ்சம் கடினமாகத் தான் இருந்தது. ஆனால் இப்போது நிலைமை உங்களுக்கு சாதகமாக மாறி உள்ளன. இனி எல்லாமே சுகமாக நடக்கும். நீங்கள் எடுத்த பணிகளில் வெற்றி காண்பீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வும் நிதி பலன்களும் கிடைப்பதற்கு வலுவான வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு புதிய வீடு மற்றும் புதிய நிலம் வாங்குவதற்கு உண்டான வாய்ப்புகள் கைக்கூடி வரும்.

66
யார் இந்த பாபா வங்கா?

பல்கேரியாவின் வான்ஜெலியா பாண்டேவா குஷ்டெரோவாவை உலகம் பாபா வங்கா என்று அழைக்கிறது. அவரது கணிப்புத் திறன் அற்புதமானது மற்றும் கற்பனை செய்ய முடியாதது. அவர் சிறு வயதிலிருந்தே பார்வையற்றவராக இருந்தார். மேலும் பல்கேரியாவின் பெலாசிகா மலைகளின் ரூபிட் பகுதியில் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை வாழ்ந்தார். திருமணமாகி சில ஆண்டுகள் காணமால் போன அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்துள்ளார்.

பாபா வங்கா 1911 ஜனவரி 31 அன்று பிறந்தார், 1996 ஆகஸ்ட் 11 அன்று இறந்தார். 1970களின் பிற்பகுதியிலும் 1980களிலும் கிழக்கு ஐரோப்பாவில் அவரது தெளிவுத்திறன் மற்றும் முன்னறிவிப்புத் திறன்களுக்காக அவர் பரவலாக அறியப்பட்டார். அவர் பல தசாப்தங்களுக்கு முன்பே கணிப்புகளைச் செய்துள்ளார். பாபா வங்க கணித்த 2001 அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதல், கொரோனோ வைரஸ் ஆகியவை உண்மையில் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories