ஆகஸ்ட் 27: தனுசு ராசிக்கான இன்றைய ராசி பலன்.! பயணத்தால் வெற்றி உண்டு.! போகும் இடமெல்லாம் மாலை மரியாதை கிடைக்கும்.!

Published : Aug 27, 2025, 01:42 AM IST

இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு பயணம், தொழில் முன்னேற்றம், கல்வியில் சாதனை, வருமான அதிகரிப்பு, குடும்பத்தில் மகிழ்ச்சி, காதல் வாழ்க்கையில் இனிமை என அனைத்தும் சிறப்பாக இருக்கும். 

PREV
14
தனுசு (Sagittarius): ஊர் சுற்றலாம் நீங்க.!

இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். கல்வி, கலை, அறிவியல் துறைகளில் சாதனை நிகழும். பள்ளி, கல்லூரி செல்பவர்களுக்கு புதிய அங்கிகாரம் கிடைக்கும். படிப்பில் சாதனை படைப்பீர்கள். புதிய தொழில் தொடங்கினால் அதிர்ஷ்டம் கூட வரும். வருமானம் அதிகரிக்கும் சூழல் உருவாகும். புதிய நண்பர்கள் ஆதரவு தருவார்கள்.

24
நல்ல வருமானம் கிடைக்கும்.!

பணவியல் ரீதியில் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய முதலீடுகள் செய்யலாம். பழைய கடன்கள் அடைக்கப்படும். நீண்ட நாட்களாக திட்டமிட்டு இருந்த நல்ல விஷயங்களை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் வராமல் இருந்த பாக்கிகள் வசூலாகி மகிழ்ச்சியை கொடுக்கும். செலவு அதிகரித்தாலும் அது மனதிற்கு நிம்மதியை தரும்.

34
மகிழ்ச்சியான சூழல் நிலவும்.!

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உறவினர்கள் ஆதரவு தருவார்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான தருணங்கள் நிகழும்.காதல் வாழ்க்கையில் துணையுடன் இனிமையான தருணங்கள் உங்களை காத்திருக்கின்றன. புதிய உறவுகள் தோன்றும் வாய்ப்பு உண்டு.

44
ஹனுமான் வழிபாடு நல்ல பலனைத் தரும்.!

உடல்நலம் சீராக இருக்கும். சிறிய சோர்வு வரலாம். ஹனுமான் வழிபாடு நல்ல பலனைத் தரும். பரிகாரம்: அஞ்சநேயரை வழிபடுங்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் வழிபட வேண்டிய தெய்வம்: ஹனுமான்

Read more Photos on
click me!

Recommended Stories