ஆகஸ்ட் 27: கடக ராசிக்கான இன்றைய ராசி பலன்.! நிதானம் தேவைப்படும் நாள்.! கோவத்தை குறைத்தால் கோடிகளை குவிக்கலாம்.!

Published : Aug 27, 2025, 01:23 AM IST

இன்று கடக ராசிக்காரர்களுக்கு சவால்கள் நிறைந்த நாள். தொழில், குடும்பம், பணம் என அனைத்திலும் சிக்கல்கள் வரலாம். ஆனால் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

PREV
14
கடகம் (Cancer): கனவம் தேவை.! கட்டுப்பாடு அவசியம்.!

இன்று கடக ராசிக்காரர்களுக்கு சற்றே சவால்கள் நிறைந்த நாள். மன அமைதி குறையும். தொழிலில் சின்ன சிக்கல்கள் வந்து சற்று அழுத்தம் தரக்கூடும். வீட்டில் அன்புக்குரியவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

24
நண்பர்கள் ஆதரவு தருவார்கள்

பணவியல் ரீதியில், செலவுகள் அதிகரிக்கும் நாள். எதிர்பாராத செலவுகள் மன அழுத்தத்தை உண்டாக்கும். முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளில் அவசரப்பட வேண்டாம். குடும்பத்தில் சிறிய சிக்கல்கள் இருந்தாலும், அதை பெரிய பிரச்சினையாக பார்க்காமல் விட்டுவிட்டால் அமைதி நிலவும். நண்பர்கள் ஆதரவு தருவார்கள். பழைய நண்பர்களை சந்திக்கும் சூழல் உருவாகலாம்.

34
சிறிய கருத்து வேறுபாடுகள் தோன்றலாம்

காதல் வாழ்க்கையில் சிறிய கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். துணையிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். திருமணமாகாதவர்களுக்கு புதிய உறவுகள் உருவாகும். நிதானமாக செயல்பட்டால் இடர்பாடுகளை தவிர்த்து வெற்றி வாகை சூடலாம். அன்பும் அரவனைப்பும் நிம்மதியை கொணடு வந்து தரும். கோவத்தை குறைத்தால் கோடிக்களை குவிக்கலாம்.

44
ஓய்வும் ஆரோக்கியமான உணவும் அவசியம்

உடல்நலம் ரீதியாக சோர்வு, செரிமான கோளாறு போன்றவை வரும். ஆனால் அதிகமாக கவலைப்பட வேண்டாம். ஓய்வும் ஆரோக்கியமான உணவும் அவசியம். விநாயகரை வேண்டினால் நினைத்தது நடக்கும். விநாயகர் பிறந்த நாளில் நிம்மதி கிடைக்கும்.

பரிகாரம்: அன்னபூரணி அம்மனை வழிபடுங்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வழிபட வேண்டிய தெய்வம்: துர்கை அம்மன்

Read more Photos on
click me!

Recommended Stories