
சவால்களில் ஒன்றுதான் எதிர்ப்புகளும் எதிரிகளும். வேத ஜோதிடத்தின் படி, ஒருவருடைய லக்னம் அல்லது ராசிக்கு ஆறாம் வீடு என்பது 'சத்ரு ஸ்தானம்' அல்லது எதிரிகளைக் குறிக்கும் இடமாகும். பொதுவாகவே, நவகிரகங்களின் சேர்க்கை மற்றும் ராசிகளின் குணாதிசயங்களின் அடிப்படையில் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு மற்றவர்களை விட மறைமுக அல்லது நேர்முக எதிரிகள் அதிகமாக உருவாகும் வாய்ப்பு இயற்கையிலேயே அமைகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, குணாதிசயங்களின் அடிப்படையில் சில ராசிக்காரர்களுக்கு மற்றவர்களை விட நேர்முக எதிரிகள் அல்லது மறைமுக எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். இதற்கு காரணம் அவர்களின் கோபம், பிடிவாதம் அல்லது அதீத புத்திசாலித்தனம் மற்றவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்துவதுதான். 12 ராசிக்காரர்களில் யார் யாருக்கு எதிரிகள் அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் - Sani Peyarchi 2026: கொட்டி கொடுக்கப் போகும் சனி பகவான்.! 2026 இறுதி தொடங்கி, உச்சத்துக்கு செல்லப்போகும் 5 ராசிகள்.!
செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு நேரடி எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். செவ்வாய் பகவான் ஆக்ரோஷம், தைரியம், துணிச்சல், வீரம் ஆகியவற்றின் காரகராவார். இவர்களிடம் கோபமும், அவசரமும், எதையும் முகத்திற்கு நேராக பேசும் குணமும் இருக்கும். தவறைக் கண்டால் அதை தயங்காமல் தட்டிக் கேட்பார்கள். இவர்களின் இந்த வெளிப்படையான பேச்சு பலருக்கு பிடிக்காமல் போய் இவர்களுக்கு எதிரிகளாக மாறிவிடுவார்கள். ஆனால் இவர்கள் எதிரிகளை நேருக்கு நேர் சந்திக்க அஞ்ச மாட்டார்கள்.
இதையும் படியுங்கள் - Aadi Month 2026: ஆடி மாதம் அம்மனை வீட்டுக்கு அழைப்பது எப்படி? தேச மங்கையர்கரசி கூறும் ரகசியம்.!
புதனின் ஆதிக்கம் பெற்ற மிதுன ராசிக்காரர்கள் தங்களின் வார்த்தைகள் மூலமாகவே எதிரிகளை கொண்டு வருவார்கள். புதனின் ஆதிக்கம் பெற்ற மற்றொரு ராசியான கன்னி ராசிக்கும் இதே பிரச்சனை தான். மிதுன ராசிக்காரர்களுக்கு இரட்டைத் தன்மை இருக்கும். இவர்கள் ரகசியங்களை தாமே தங்கள் வாயால் உளறி எதிரிகளை தேடிக்கொள்வார்கள். கன்னி ராசிக்காரர்கள் எதிலும் குறை கண்டுபிடிப்பதிலும், வேலை வாங்குவதிலும் வல்லவர்கள். மற்றவர்களை கடுமையாக விமர்சிப்பதால் இவர்களுக்கு பணியிடங்களில் எதிரிகள் அதிகம் உருவாவார்கள்.
இதையும் படியுங்கள் - Astrology Predictions: எமன் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளின் தலைவிதியே மாறும்.! பணம் மூட்டை மூட்டையாய் சேரப்போகுது.!
சிம்ம ராசியை சூரிய பகவான் ஆட்சி செய்கிறார். இவர்களுக்கு இயல்பாகவே கிடைக்கும் தலைமைப் பண்புகள், பொறுப்புகள் காரணமாக பொறாமையினால் எதிரிகள் உருவாவார்கள். இவர்களிடம் இயல்பாகவே தலைமைப் பண்பும், கம்பீரமும் இருக்கும். எப்போதும் தாங்கள்தான் முதன்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களின் இந்த பந்தாவான குணமும், சமூகத்தில் இவர்களுக்கு கிடைக்கும் புகழ்ச்சியும் மற்றவர்களுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். இதனால் இவர்களின் வளர்ச்சியை தடுப்பதற்காக பலர் எதிரிகளாக மாறுவார்கள்.
இதையும் படியுங்கள் - Name Numerology: இந்த தேதிகள்ல பிறந்தவங்களுக்கு சின்ன வயசுலயே பெரிய நோய்கள் வர வாய்ப்பு அதிகமாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
12 ராசிகளிலேயே அதிகமாக மறைமுக எதிரிகளை சம்பாதிக்கும் ராசி விருச்சிக ராசி தான். இவர்கள் எதையும் வெளிப்படையாக பேசமாட்டார்கள். ரகசியம் அதிகம் உள்ள இவர்களிடம் அசாத்திய புத்திசாலித்தனமும், எதையும் சாதிக்கும் பிடிவாதமும் மற்றவர்களுக்கு பயத்தையும் பொறாமையும் ஏற்படுத்தும். யாராவது துரோகம் செய்தால் அதை இவர்கள் எளிதில் மறக்க மாட்டார்கள். இவர்களிடம் பழிவாங்கும் குணமும் அதிகமாக இருக்கும். இவர்கள் இதனால் இவர்களுக்கு தெரியாமலேயே பின்னால் நின்று குழி பறிக்கும் எதிரிகள் அதிகமாக உருவாவார்கள்.
இதையும் படியுங்கள் - Numerology: இந்த எண்களில் பிறந்தவர்களுக்கு தாமதமாகத் திருமணம் நடந்தாலும், கடவுள் போன்ற துணையைப் பெறுவார்களாம்.!
ஜோதிட சாஸ்திரத்தின்படி குணாதிசயங்களால் எதிரிகள் உருவாவது ஒருபுறமிருந்தாலும், உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தில் 6-ஆம் வீடு (சத்ரு ஸ்தானம்) மற்றும் 12-ஆம் வீடு (மறைமுக எதிரி ஸ்தானம்) பலவீனமாக இருக்கும்போதுதான் நிஜ வாழ்க்கையில் எதிரிகளால் பெரிய பாதிப்புகள் ஏற்படும். லக்னாதிபதி வலுவாக இருந்தால் எந்த எதிர்ப்பையும் உங்களால் எளிதில் முறியடிக்க முடியும். உங்கள் ராசி இதில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், கோபத்தைக் குறைத்து, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் தேவையற்ற எதிர்ப்புகளைத் தவிர்த்து வாழ்வில் நிம்மதியைக் காணலாம்.
பொறுப்புத் துறப்பு (Disclaimer): இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான ஜோதிட விதிகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. தனிநபரின் துல்லியமான பலன்களுக்கு அவர்களின் பிறப்பு ஜாதகத்தை முதன்மைக் கோள்களின் திசா புத்திகளோடு ஒப்பிட்டு ஆராய்வது அவசியமாகும்.