Nov 08 Today Rasi Palan: மேஷ ராசி நேயர்களே, இன்று உங்களது பொற்காலம் தொடங்குது.! வெற்றியோடு பணமும் சேரும் நாள்!

Published : Nov 08, 2025, 06:30 AM IST

இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் நீண்டகாலமாக எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பணவரவு கூடும், அரசு தொடர்பான வேலைகள் சாதகமாக அமையும். குடும்ப வாழ்வில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வரலாம், உடல்நலத்தில் கவனம் தேவை.

PREV
12
வெற்றியின் வாசல் திறக்கும் நாள்.!

இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு வெற்றியின் வாசல் திறக்கும் நாள். கடந்த சில நாட்களாக நீங்கள் சந்தித்த சிரமங்கள் இன்று மெல்ல மாறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீண்டகாலமாக எதிர்பார்த்த ஒரு நல்ல செய்தி வரக்கூடும். குறிப்பாக அதிகாரப் பதவியில் உள்ளவர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கும். பணவரவு கூடும். அரசு தொடர்பான வேலைகள் இன்று சிறப்பாக நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

கல்வி தொடர்பான செயலில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் புதிய உந்துதலோடு செயல்படுவார்கள். ஆராய்ச்சி அல்லது படைப்புத் திறனை வெளிப்படுத்தும் துறைகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு மதிப்பு, பாராட்டு கிடைக்கும். போட்டித் தேர்வு எழுதுபவர்கள் அதிக கவனம் செலுத்தி உழைத்தால் வெற்றி நிச்சயம்.

22
முன்னேற்றமும், வெற்றியும் அளிக்கும் ஒரு நல்ல நாள்!

குடும்ப வாழ்க்கையில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும், அவை உடனடியாக சரியாகிவிடும். வாழ்க்கைத் துணையுடன் பேசும் போது கவனம் தேவை. பொருளாதார ரீதியில் மிதமான வளர்ச்சி காணப்படும். முதலீடு செய்ய விரும்புபவர்கள் சிறிது யோசித்து செயல்படுவது நல்லது. வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான யோசனை இருந்தால், இன்று தொடங்கலாம்.

உடல்நலத்தில் சற்று களைப்பு, தலைவலி போன்றவை தோன்றலாம். ஓய்வுக்கான நேரத்தை வழங்கிக் கொள்ளுங்கள். யோகா, தியானம் போன்றவை மன நிம்மதியை தரக்கூடியவை.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட உடை: சிவப்பு கலர் ஷர்ட் அல்லது குர்த்தா வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ முருகன் பரிகாரம்: இன்றைய தினம் சிவப்பு நிற மலர் கொண்டு முருகன் கோவிலில் வழிபாடு செய்வது நல்லது.

ஒட்டுமொத்தத்தில், இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு முன்னேற்றமும், வெற்றியும் அளிக்கும் ஒரு நல்ல நாள்!

Read more Photos on
click me!

Recommended Stories