சூரியன் (அக்டோபர் 17 - நவம்பர் 16): சூரியனின் பெயர்ச்சியை வைத்தே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. அந்த வகையில் அக்டோபர் 17ஆம் தேதி சூரிய பகவான் துலாம் ராசியில் பெயர்ச்சி ஆக இருக்கிறார். இதன் காரணமாக ஐப்பசி மாதம் பிறக்க இருக்கிறது. இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றன.
குரு (அக்டோபர் 18): ஐப்பசி மாதத்தின் தொடக்கத்தில் அக்டோபர் 18 ஆம் தேதி குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்க இருக்கிறார். குருவின் வலிமையான இந்த நிலையானது பல ராசிகளுக்கு நன்மை தரக்கூடும். குறிப்பாக அவரது பார்வை பெறும் ராசிகள், நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர்.
சுக்கிரன் (நவம்பர் 2 - நவம்பர் 26): சுக்கிர பகவான் நவம்பர் 2 ஆம் தேதி அன்று தனது சொந்த வீடான துலாம் ராசிக்கு சென்று ஆட்சி பலம் பெறுகிறார். சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவது கலை, அழகு, காதல், ஆடம்பர விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும். மேலும் சுக்கிரனுடன் சூரியன் சேர்ந்து சுக்ராதித்ய யோகம் உருவாவது பல ராசிகளுக்கு எதிர்பாராத நன்மைகளைத் தரும்.
செவ்வாய் (அக்டோபர் 27 - டிசம்பர் 7): செவ்வாய் பகவான் அக்டோபர் 27 ஆம் தேதி தனது சொந்த வீடான விருச்சிக ராசிக்கு சென்று ஆட்சி பலம் பெறுகிறார். செவ்வாய் பகவான் ஆட்சி பலம் பெறுவது தைரியம், துணிச்சல், நிலம், சகோதர உறவுகள் ஆகியவற்றில் வலு சேர்க்கும்.
புதன் (அக்டோபர் 24 - நவம்பர் 23): புதன் பகவான் அக்டோபர் 24 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு செல்கிறார்.
சனி மற்றும் ராகு: சனிபகவான் வக்கிர இயக்கத்தில் பயணிக்கிறார். லாப ஸ்தானத்தில் கும்ப ராசியில் ராகுவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். சனியும் ராகவும் நீண்ட நாட்களாக இதே நிலையில் இருப்பதால் சில ராசிக்காரர்களுக்கு குழப்பம், தாமதம் ஆகியவை ஏற்படலாம்.