Mahalaxmi rajyog: தீபாவளி பண்டிகை அன்று செவ்வாய் சந்திரன் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாக இருக்கிறது. இது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை கொண்டு வரவுள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தீபாவளி சமயத்தில் நடக்கும் கிரகங்களின் பெயர்ச்சிகள் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் அக்டோபர் 20 ஆம் தேதி திங்கட்கிழமை கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் பகவான் மற்றும் மனதின் காரகராக விளங்கும் சந்திரன் ஆகிய இருவரும் இணைந்து மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகின்றனர்.
25
மகாலட்சுமி ராஜயோகம் என்றால் என்ன?
செவ்வாய் மற்றும் சந்திரன் ஆகிய இரு முக்கிய கிரகங்கள் ஒரே ராசியில் இணையும் பொழுது மங்களகரமான மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகமானது செல்வத்தின் கடவுளான மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை பெற்று தரக்கூடியது. தீபாவளி நாளில் இந்த ராஜயோகம் உருவாவது மேலும் சிறப்பானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் மாற்றுகிறது. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் இந்த சக்தி வாய்ந்த யோகம் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் அள்ளித் தரவுள்ளது. அந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
35
துலாம்
தீபாவளி தினத்தில் செவ்வாய் மற்றும் சந்திரன் துலாம் ராசியின் லக்ன வீட்டில் அதாவது முதல் வீட்டில் இணைவதால், மகாலட்சுமி ராஜயோகம் துலாம் ராசியில் உருவாகிறது.
இந்த ராஜயோகம் காரணமாக உங்களின் ஆளுமைத் திறன் மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
இத்தனை நாட்களாக தடைபட்டிருந்த வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
கடன் பிரச்சினைகளில் இருந்து முழுமையாக விடுபடுவீர்கள்.
புதிய வீடு, வாகனம் போன்ற ஆடம்பரமான பொருட்களை வாங்கும் யோகமும் உண்டாகும்.
இதுவரை இல்லாத அளவிற்கு குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.
கடக ராசியின் நான்காவது வீட்டில் இந்த மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது.
ஜாதகத்தில் நான்காவது வீடு என்பது வாகனம், தாய் மகன் உறவு, பொன், பொருள், வீடு வசதியான வாழ்க்கையை குறிக்கிறது.
எனவே இந்தக் காலகட்டத்தில் கடக ராசிக்காரர்கள் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிப்பீர்கள்.
சொத்து சம்பந்தபட்ட முதலீடுகள் நல்ல லாபத்தைக் கொடுக்கும்.
நிலம், வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.
பழைய கடன்களில் இருந்து விடுபடுவீர்கள். நிதிநிலை மேம்படும்.
தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
வேலையில்லாமல் அவதிப்பட்டு வருபவர்களுக்கு நல்ல இடத்தில், அதிக ஊதியத்துடன் வேலை கிடைக்கும்.
ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சம்பள உயர்வு கிடைக்கலாம்.
55
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு பத்தாவது வீடான தொழில் ஸ்தானத்தில்மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது.
இதன் காரணமாக மகர ராசிக்காரர்கள் தீபாவளிக்குப் பின்னர் வேலை மற்றும் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
தொழிலில் இருந்த போட்டியாளர்கள் மற்றும் எதிரிகள் விலகிச் செல்வார்கள்.
இதன் காரணமாக உங்கள் தொழில் சிறக்கும். லாபம் இரட்டிப்பாக வரும்.
புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும்.
முடிக்க முடியாமல் இழுத்தடித்து வந்த வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள்.
சமூகத்தில் மதிப்பும், கௌரவமும் அதிகரிக்கும்.
உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அனைவரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
நிதி நிலைமை மேம்படும். வங்கி இருப்பு கணிசமாக உயரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)