கனவில் முன்னோர்கள் தோன்றினால் அது ராகு-கேது பாவ நிலையை சொல்வதாகும். அவர்கள் பால், நெய், இனிப்பு போன்றவற்றைக் கேட்டால் அதிர்ஷ்டம் வந்து சேரும். ஆனால் அழுவது, சிரிப்பது போன்ற காட்சிகள் எச்சரிக்கையாகக் கொள்ளப்பட வேண்டும். தினமும் குலதெய்வத்துக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள், பசுவுக்கு அகத்திக்கீரை கொடுத்தால் பாதிப்பு விலகும்.
பறவை, விலங்குகள் சொல்லும் சேதி
கனவில் காக்கை, கழுகு, ஒட்டகம் போன்றவற்றைக் காண்பது அசுபம். கருடபகவானை மனதார வணங்குவது சிறப்பு. ஓடுவது, பாம்பு இறங்குவது, மிருகம் துரத்துவது போன்ற கனவுகள் வீண் விரயத்தைச் சுட்டும். இதற்கு பிள்ளையாருக்கு பாலபிஷேகம் செய்யலாம்.