தவறுதலா கூட குழந்தைங்க தூங்கும் இடத்தில் வைக்கக் கூடாத '4' பொருட்கள்.. யாருக்கும் தெரியாத வாஸ்து!

Published : Feb 19, 2025, 09:05 PM IST

Vastu Tips For Kids Bedroom : வாஸ்து சாஸ்திரத்தின் படி குழந்தைகள் தூங்கும் அறையில் வைக்க கூடாத சில பொருட்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

PREV
16
தவறுதலா கூட குழந்தைங்க தூங்கும் இடத்தில் வைக்கக் கூடாத '4' பொருட்கள்.. யாருக்கும் தெரியாத வாஸ்து!
தவறுதலா கூட குழந்தைங்க தூங்கும் இடத்தில் வைக்கக் கூடாத '4' பொருட்கள்.. யாருக்கும் தெரியாத வாஸ்து!

இந்து மதத்தில் வாஸ்துவிற்கு தனி ஸ் முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு விஷயத்திற்கும் வாஸ்து விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். அது வீட்டின் மூளையாக இருந்தாலும் சரி, குழந்தைகள் தூங்கும் அறியாக இருந்தாலும் சரி ஒவ்வொரு இடத்திற்கும் சில விதிகள் உள்ளன. அவற்றை பின்பற்றுவது ரொம்பவே முக்கியம். இல்லையெனில் அதனால் பிரச்சனைகளை தான் சந்திக்க நேரிடும். அந்த வகையில், நீங்கள் உங்களது வீட்டில் உங்கள் குழந்தை தூங்குவதற்கென தனி அறையை அமைக்கிறீர்கள் என்றால், தவறுதலாக கூட சில பொருட்களை உங்கள் குழந்தையின் அறையில் வைக்க வேண்டாம். அப்படி ஒரு வேலை வைத்தால் அதனால் குழந்தைகள்தான் பாதிக்கப்படுவார்கள். எனவே வாஸ்து சாஸ்திரத்தின் படி குழந்தைகள் தூங்கும் அறையில் எந்த மாதிரியான பொருட்களை வைக்கக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவை தெரிந்து கொள்ளலாம்.

26
செடிகள்:

வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் குழந்தை தூங்கும் அறையில் செடிகளை ஒருபோதும் வைக்க வேண்டாம். அது குழந்தைகளுக்கு ஆபத்தை தான் விளைவிக்கும். அதனால் தான் செடிகளை குழந்தைகள் அறையில் வைக்க கூடாது. மேலும் கூர்மையான அல்லது ஒவ்வாமை ஏற்படுத்தும் தாவரங்களை ஒருபோதும் குழந்தைகள் தூங்கும் அறையில் வைக்காதீர்கள்.

36
எலக்ட்ரிக் பொருட்கள்:

குழந்தைகள் தூங்கும் அறையில் டிவி போன்ற பிற மின்னணு பொருட்களை ஒருபோதும் வைக்க வேண்டாம். ஒருவேளை உங்களது குழந்தையின் அறையில் நீங்கள் டிவி வைத்திருந்தால் அதை உடனே அகற்றி விடுங்கள். ஏனெனில் அறையில் டிவி இருந்தால் குழந்தையின் கவனம் பெரும்பாலான நேரம் டிவியில் தான் இருக்கும். அதுபோல அவர்கள் தூங்கும் போது அவர்களது அறையில் இருந்து லேப்டாப்கள் மற்றும் மொபைல் போன்களை அகற்றி விடுங்கள்.

46
கண்ணாடி:

வாஸ்து சாஸ்திரத்தின் படி குழந்தைகள் தூங்கும் அருகில் கண்ணாடிகளை ஒருபோதும் வைக்கக் கூடாது. ஒருவேளை உங்கள் குழந்தையின் அருகில் கண்ணாடி இருந்தால் அதை உடனே அகற்றி விடுங்கள். ஏனெனில் கண்ணாடி எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க:  வீட்டில் 'இந்த' இடங்களில் மயில் இறகுகளை வைங்க; குடும்பம் செழிப்பாக இருக்கும்!

56
சண்டைகளை சித்தரிக்கும் படங்கள்:

குழந்தையின் அறையில் சண்டைகளை சித்தரிக்கும் படங்கள் இருந்தால் அவற்றை உடனே அகற்றி விடுங்கள். ஏனெனில் இது போன்ற படங்கள் குழந்தைகள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க:  என்னது பெட் ரூம்ல செடி வைக்கணுமா? கணவன் மனைவி கட்டாயம் படிங்க..!!

66
குறிப்பு :

- குழந்தைகள் அருகில் எப்போதும் படிப்பு தொடர்பான விஷயங்களை மட்டுமே வைக்க வேண்டும்.

- அதுபோல குழந்தைகள் அறையில் வெளிநிறத்தில் தான் பெயின்ட் அடிக்க வேண்டும்.

- முக்கியமாக குழந்தைகள் தூங்கும் வரை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். எனவே, அறையை சுத்தமாக வைக்க அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories