திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சென்றால் மட்டுமே அந்த உறவு மகிழ்ச்சியாக இருக்கும். ஒருவேளை இருவரில் ஒருவர் மற்றொருவர் மீது ஆதிக்கம் செலுத்தினால் அந்த உறவு சிதைந்து விடும். ஆனால் எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த ஆண்கள் தங்கள் மனைவியை ஆட்டிப் படைப்பார்கள் தெரியுமா? அவர்கள் தங்கள் மனைவி மீது ஆதிக்கம் செலுத்துவது மட்டுமல்லாமல், வீட்டு விஷயங்கள் என அனைத்திலும் அவர்கள்தான் முடிவு எடுப்பார்களாம். அவர்களின் இந்த குணத்திற்கு அவர்கள் பிறந்த தேதி காரணமாக இருக்கலாம் என்று ஜோதிடம் கூறுகிறது. சரி இப்போது அது எந்தெந்த தேதிகளில் என்று இந்த பதிவில் காணலாம்.
24
எண் 4
எண் கணிதத்தின் படி, 4, 13, 22 மற்றும் 31 ஆகிய எண்கள் எண் 5ன் கீழ் வரும். இந்த நான்கு தேதிகளில் பிறந்த ஆண்கள் சனியால் ஆளப்படுவார்கள். எனவே இந்த தேதிகளில் பிறந்த ஆண்கள் பெரும்பாலும் தங்கள் குடும்பத்தை நல்வழிப்படுத்த பொறுப்பேற்றுக் கொள்வார்கள். செய்யும் ஒவ்வொரு விஷயங்களையும் எவ்வாறு செய்ய வேண்டும் என்று உறுதியாக அணுகுமுறை கொண்டிருப்பார்கள். இவர்கள் அன்பாகவும் பொறுப்பாகவும் இருந்தாலும் சில சமயங்களில் அதிகாரம் செலுத்துவார்கள்.
34
எண் 8
எண் கணிதத்தின் படி, 8, 17 மற்றும் 26 ஆகிய மூன்று எண்கள் எண் 8ன் கீழ் வரும். ஆகவே எந்த மாதத்திலும் இந்த மூன்று தேதிகளில் பிறந்த ஆண்கள் சூரியனின் அதிகாரம் செலுத்தும் ஆற்றலை கொண்டிருப்பதால், அவர்கள் எப்போதுமே தலைமைத்துவம் மற்றும் முடிவெடுப்பவராக இருப்பார்கள். இவர்கள் தங்கள் குடும்பங்களை சீராக வழி நடத்துவதற்கு ரொம்பவே பொறுப்பாக இருப்பார்கள். ஆனாலும் இவர்கள் கொஞ்சம் அதிகமாகவே வலுவான பொறுப்புணர்வுள்ளவர்களாக இருப்பார்கள்.
எண் கணிதத்தின் படி, 9, 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 9ன் கீழ் வருவார்கள். ஆகையால் எந்த மாதத்திலும் இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுவதால் அவர்கள் எல்லா விஷயங்களையும் பொறுப்பேற்று நல்லபடி நடத்த விரும்புவார்கள். ஆனாலும் அவர்கள் நினைத்த காரியம் நடக்கவில்லை என்றால் அதை நிறைவேற்றும் வரை மற்றவர்களை ரொம்பவே வற்புறுத்துவார்கள். செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் இவர்கள் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருப்பார்கள் மற்றும் அதிகமாக பொசசிவ் படுவார்கள். இவர்களின் இந்த இயல்பு அவர்களை ஆதிக்கம் செலுத்துபவராக மாற்றும்.