Aug 4 - Aug 10 Rasi palan: ஆகஸ்ட் முதல் வாரத்தில் 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.! உங்க ராசி இருக்கா?

Published : Aug 04, 2025, 11:25 AM IST

ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் சில ராசிகள் நல்ல பலன்களை பெற உள்ளன. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

PREV
15
Zodiac Signs

அனைவருக்கும் ஒவ்வொரு வாரமும் சிறப்பாக அமைவது கிடையாது. சிலருக்கு ஒரு வாரம் நல்ல வாரமாகவும், சிலருக்கு சோதனை நிரம்பியதாகவும் இருக்கலாம். அதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசி. ஒவ்வொரு வாரமும் மேஷம் முதல் மீன வரை 12 ராசிக்காரர்களும் தங்களது ராசியில் ஏற்படும் மாற்றத்தை அறிந்து கொள்ள விரும்புகின்றனர். கிரகங்களின் நிலை, கிரகங்கள் சேர்க்கையால் உருவாகும் யோகங்கள் ஆகியவற்றின் காரணமாக சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களையும், சில ராசிக்காரர்கள் பாதகமான பலன்களையும் பெறுகின்றனர். இதன் காரணமாக குடும்பம், உடல் நலம், நிதி, தொழில் என அனைத்திலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் பலன்களைப் பெற உள்ள நான்கு ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
மேஷம்

ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி வரையிலான ஏழு நாட்கள் மேஷ ராசியினருக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துகிறது. சந்திர ராசியின் படி ராகு, ஏழாவது வீட்டில் இருக்கும் பொழுது நிதி வாழ்க்கையில் புதிய மற்றும் உற்சாகமான மாற்றங்கள் ஏற்படும். நல்ல நிதி நன்மைகளை தருவது மட்டுமில்லாமல் நிதி நிலைமை முன்பை விட வலுவாக மாறும். உங்கள் வீட்டில் முன்பு இழந்த சில மதிப்புமிக்க பொருட்களை காணலாம். அதன் மூலம் வீட்டில் சூழல் நன்றாக மாறும். அதிகப்படியான வேலை உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். இருப்பினும் மற்றவர்களுக்கு முன்பாக வேலையை முடித்து அனைத்திலும் தயாராக இருப்பீர்கள். மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு இந்த வாரம்்புதிய உற்சாகத்துடன் பயணத்தை தொடங்குவீர்கள். குரு மூன்றாவது வீட்டில் இருப்பதால் இந்த வாரம் ஏதோ ஒரு காரணத்திற்காக திடீர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். முடிந்தால் இந்த பயணங்களை ஒத்தி வைப்பது நல்லது. கடன் பிரச்சனைகள் தீர்ந்து, உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். இந்த வாரம் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

35
சிம்மம்

குரு பதினோராவது வீட்டில் இருப்பதால் இந்த வாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்த வாரத்தில் பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருக்காது. நேர்மறையான சூழல் நிலவும். இந்த வாரம் பண ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளை தீர்த்து மன அமைதி கிடைக்கும். குடும்பத்தில் அமைதியின்மை நிலவும் பட்சத்தில் உங்கள் பரபரப்பான வேலையில் இருந்து சிறிது நேரம் ஒதுக்கி பிரச்சினைகளை தீர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கலாம். இந்த வாரம் உங்கள் இலக்குகளை அடைவதற்கு நீங்கள் முன்பை விட சற்று கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களின் உழைப்பு மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். நீங்கள் செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். இது சிறப்பான எதிர்காலத்திற்கு ஆரம்ப புள்ளியாக அமையும். இந்த வாரம் யாருக்கும் கடனாக பணத்தை கொடுக்கவோ அல்லது யாரிடமும் இருந்து கடன் வாங்குவோ கூடாது.

45
தனுசு

இந்த வாரம் உங்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படும் என்பதை கிரகங்களின் இருப்பு குறிக்கிறது. இருப்பினும் வருமானத்தில் தொடர்ச்சியான அதிகரிப்பு காரணமாக இந்த செலவுகளின் விளைவு வாழ்க்கையில் தெரியாது. இந்த வாரத்தில் வேறு எந்த மெனக்கிடலும் இல்லாமல் மற்றவர்களின் கவனத்தை எளிதாக ஈர்ப்பீர்கள். இந்த வாரம் அனைத்தையும் பொறுமையாக கேட்டு சரியாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்படுவீர்கள். வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகள் தகர்ந்து இந்த வாரம் வெற்றி வாரமாக அமையும். இத்தனை நாட்களாக நீங்கள் எதிர்கொண்ட தோல்விகள் உங்களை தன்னம்பிக்கை மிக்கவர்களாக மாற்றும். நிதி மற்றும் முதலீடுகள் சார்ந்த விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கி உடலும் மனதும் புத்துணர்ச்சி பெறும். குடும்பம் மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலும் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். அனைத்து நிதி நெருக்கடிகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.

55
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் நான்கு தொடங்கி 10 ஆம் தேதி வரையிலான ஏழு நாட்கள் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த உள்ளது. ஆறாவது வீட்டில் கேது இருப்பதால் ஆரோக்கியத்தில் பல நல்ல மாற்றங்கள் கிடைக்கும். வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இந்த வாரம் விரும்பிய வேலை கிடைக்கும் வாய்ப்பு நெருங்கியுள்ளது. மோசமான நிதி நிலையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் நிலுவையில் இருந்த கடனை திருப்பி செலுத்தும் காலம் நெருங்கி உள்ளது. உங்களது அன்பான நடத்தை உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு குறிப்பாக குடும்ப உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். பெற்றோரிடம் இருந்து அன்பும், பாசமும் கிடைக்கும். இத்தனை நாட்களாக உங்களை எதிரியாக நினைத்தவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். நீங்கள் செய்யும் நல்ல செயல்களால் முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். இந்த வாரம் சற்று சோர்வாக உணரலாம். இருப்பினும் அனைவருடனும் தரமான நேரத்தை செலவழிப்பதால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையுடனும் நேர்மையுடனும் கையாண்டு அதில் வெற்றியையும் காண்பீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஜோதிடப் பலன்கள் பொதுவானவை. இதன் நம்பகத்தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. ஒவ்வொருவரின் ஜாதகமும் தனித்துவமானது. ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலை, தசா புத்தி ஆகியவற்றை பொறுத்து பலன்கள் மாறுபடும் என்பதால் அனுபவம் மிக்க ஜோதிடரை அணுகி கலந்தாலோசிப்பது நல்லது)

Read more Photos on
click me!

Recommended Stories