Astrology: இந்த 5 ராசிகளுக்கு சொந்த வீடு, சொத்துக்கள் வாங்கும் யோகம் இருக்காம்.! உங்க ராசி இருக்கா?

Published : Oct 03, 2025, 11:09 AM IST

5 zodiac signs that are likely to buy their own house: ஜோதிடத்தின்படி சில ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே சொந்த வீடு, சொத்துக்கள் வாங்கும் யோகம் இருக்கிறதாம். அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
16
சொந்த வீடு வாங்கும் யோகம்

ஜோதிட சாஸ்திரங்களின் படி ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான இயல்பு, குணங்கள் உள்ளன. சில ராசிகளுக்கு கிரகங்களின் செல்வாக்கு காரணமாக வாழ்க்கையில் வெற்றி, செல்வம் மற்றும் சொத்து சேர்க்கும் யோகங்கள் கிடைக்கின்றன. சில ராசிகள் இயல்பாகவே சொந்த வீடு வாங்குவதற்கான யோகத்தை பெறுகின்றன. இந்த யோகம் அவர்களை ஆளும் கிரகங்களின் ஆதரவால் உருவாகிறது. இந்த கட்டுரையில் சொந்த வீடு வாங்குவதற்கு இயல்பாக யோகம் பெற்றிருக்கும் ஐந்து ராசிகளைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

26
1.ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிர பகவானால் ஆளப்படுபவர்கள். சுக்கிர பகவான் அழகு, செல்வம், ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றிற்கு காரகராக விளங்குகிறார். எனவே ரிஷப ராசியினருக்கு இயல்பாகவே பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படுகிறது. மேலும் இவர்கள் சேமிப்பு பழக்கத்தை கொண்டவர்கள். தங்களது கடின உழைப்பால் பணத்தை சேமித்து நீண்ட கால முதலீடுகள் செய்ய ஆர்வம் காட்டுவார்கள்.

ரிஷப ராசியின் நான்காவது இடம் (வீடு மற்றும் சொத்துக்களை குறிக்கும் ஸ்தானம்) பொதுவாகவே வலுவாக இருக்கும். சுக்கிரனின் ஆதரவால் இவர்கள் சொந்தமாக வீடு அல்லது சொத்துக்கள் வாங்குவதற்கு தேவையான பொருளாதாரத்தைப் பெறுகிறார்கள்.

36
2.கடகம்

கடக ராசிக்காரர்கள் சந்திர பகவானால் ஆளப்படுபவர்கள். சந்திர பகவான் உணர்ச்சி, பாதுகாப்பு, வீட்டு சூழலுடன் தொடர்புடையவர். மேலும் கடக ராசிக்காரர்கள் தங்களது குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தங்கள் குடும்பத்திற்காக பாதுகாப்பான, அன்பான இடத்தை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். கடக ராசியின் நான்காவது வீட்டிற்கு சந்திரனின் செல்வாக்கு நேரடியாக இருப்பதால் இவர்கள் இயல்பாகவே வீடு, நிலம் போன்ற சொத்துக்களை சேர்க்கும் வாய்ப்புகளை பெறுகின்றனர்.

இவர்கள் சொந்தமாக வீடு வாங்கி விட வேண்டும் என்பதை தங்கள் வாழ்க்கையில் லட்சியமாக வைத்திருக்கிறார்கள். சந்திரனின் சாதகமான அமைப்பு காரணமாக இவர்களுக்கு குடும்ப ஆதரவு அல்லது மூதாதையர் சொத்து மூலமாக சொத்துக்கள் வாங்கும் யோகம் கிடைக்கிறது.

46
3.சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிய கனவுகளையும், ஆடம்பரமான வாழ்க்கையும் விரும்புபவர்கள். இவர்கள் தலைமைத்துவம், தன்னம்பிக்கை, செல்வாக்கை அளிக்கும் சூரிய பகவான் ஆள்கிறார். சிம்ம ராசியினர் தங்கள் சொந்த வீட்டை ஒரு அந்தஸ்தின் அடையாளமாகவே கருதுகின்றனர். சூரிய பகவான் சிம்ம ராசியினருக்கு பொருளாதார வெற்றியையும், சமூக அந்தஸ்தையும் அளிக்கிறார். 

இவர்கள் பெரும்பாலும் உயர்ந்த பதவிகளில் இருப்பதால் வீடு வாங்குவதற்கு தேவையான நிதி ஆதாரங்களை எளிதில் பெறுகின்றனர். மேலும் இவர்களின் தன்னம்பிக்கை மற்றும் முடிவெடுக்கும் திறன் காரணமாக எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கி விடுகின்றனர்.

56
4. விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் உறுதியான மனவலிமை கொண்டவர்கள். இவர்களை செவ்வாய் பகவான் ஆள்கிறார். செவ்வாய் பகவான் இவர்களுக்கு உழைப்பு, உறுதி மற்றும் ஆற்றலை வழங்குகிறார். விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் இலக்குகளை அடைவதற்காக எந்த தடையையும் தாண்டுகின்றனர். விருச்சக ராசிக்காரர்களின் நான்காம் வீட்டில் செவ்வாயின் செல்வாக்கு இருப்பதால் இவர்கள் நிலம், வீடு போன்ற சொத்துக்களை வாங்குவதில் வெற்றி பெறுகின்றனர். 

மேலும் இவர்கள் முதலீடு மற்றும் நிதி திட்டமிடலில் சிறந்து விளங்குகின்றனர். இவர்களுக்கு எதிர்பாராத வகையில் பணம் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. பணத்தை வீணடிக்காமல் அதை சேமித்து வைப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். விருச்சிக ராசியினரின் இந்த பழக்கம் சொந்தமாக வீடு வாங்குவதற்கு மிகவும் உறுதியாக இருக்கும்.

66
5.மகரம்

மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் நீண்ட கால இலக்குகளுக்கு பெயர் பெற்றவர்கள். இவர்களை ஆளும் கிரகமான சனி பகவான் இவர்களுக்கு பொறுப்பு, நிதி மேலாண்மை மற்றும் ஸ்திரத்தன்மையை அளிக்கிறார். மகர ராசிக்காரர்கள் தங்களது கடின உழைப்பால் சொத்துக்களை சேர்க்க விரும்புகின்றனர். மகர ராசியினருக்கு சளியின் செல்வாக்கு நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மையை அளிக்கிறது.

இவர்கள் மிகவும் திட்டமிட்டு பொறுமையாக பணத்தை சேமித்து, சரியான நேரத்தில் வீடு வாங்குவார்கள். சனிபகவானின் ஆதரவு இருப்பதால் இவர்களுக்கு மூதாதையர் சொத்து அல்லது குடும்ப ஆதரவு மூலமாகவும் சொத்துக்கள் கிடைக்கலாம்.

மேற்குறிப்பிட்ட ராசிகள் இயல்பாகவே சொந்த வீடு வாங்குவதற்கான யோகத்தை பெற்றிருக்கின்றன. இந்த ராசிகளுக்கு அவற்றை ஆளும் கிரகங்களின் செல்வாக்கு, நிதி மேலாண்மை, உறுதியான மனநிலை ஆகியவை இலக்கை அடைய உதவுகின்றன. இருப்பினும் சொந்த வீடு கனவு என்பது கடினமான உழைப்பு, சரியான திட்டமிடல், முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றைப் பொறுத்தது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories