
அன்புள்ளம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, இன்று உங்களுக்கான நாள் சிறப்பாக அமையும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். வியாபாரம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். பணவரவு சீராக இருக்கும். பால்ய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவி கரம் நீட்டுவர். சுபச்செய்திகள் காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியம் சீராக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மொத்தத்தில் இன்று உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட உடை: பழப்பு நிற உடை
வழிபட வேண்டிய தெய்வம்: முருகன்
பரிகாரம்: சிவனுக்கு பால் அபிஷேகம் செய்யவும்
அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட ரிஷப ராசி நேயர்களே, இன்று நிதி நிலைமை சீராகும் நாள். குடும்பத்தில் நிலவி வந்த நீண்டநாள் சிக்கல்கள் காணாமல் போகும். தொழிலில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.சிறு சிறு மன அழுத்தம் வரலாம். ஆரோக்கியத்தில் உணவு பழக்கத்தைக் கவனிக்கவும். தொலைபேசி வழியே நல்ல செய்திகள் வந்து சேரும். மற்றவர்களக்கு உதவி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட உடை: வெள்ளை சட்டை
வழிபட வேண்டிய தெய்வம்: லட்சுமி
பரிகாரம்: ஆலயத்தில் மஞ்சள் பூ வைத்து வழிபடுங்கள்
எதையும் திட்டமிட்டு செயல்படுத்தும் திறன் கொண்ட மிதுன ராசி நேயர்களே, இன்று உங்களின் பேச்சுத்திறன் வெற்றியைத் தரும். வியாபாரம் மற்ரும் தொழிலில் புதிய முயற்சிகள் நல்ல பலனை தரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நிலவி வந்த மன கசப்புகள் இனிப்பாக மாறும். பயணத்தில் கவனம் தேவை. ஹெல்மட் அணியவும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. பழைய கடன்கள் வசூலாகம். நீண்ட காலமாக சந்திக்க விரும்பியவரை திடீரென சந்திப்பீரகள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட உடை: ிமஞ்சள் நிற ஆடை
வழிபட வேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்: துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றவும்
எப்போதும் நீதியின் பக்கம் நிற்கும் கடக ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு பணம் வந்து சேரும். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நீண்டநாள் திட்டங்கள் வெற்றியடையும். எதிர்பாராத லாபம் உண்டு. ஆரோக்கியத்தில் சோர்வு வரக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். முதலீடு இருமடங்கு லாபத்தை தரும். ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட உடை: மஞ்சள் சேலை
வழிபட வேண்டிய தெய்வம்: அம்பாள்
பரிகாரம்: தேவாலயத்தில் பால், பழம் அர்ப்பணிக்கவும்
தலைமை குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்து சேரும். வேலை தொடர்பான நல்ல செய்தி தொலைபேசி வழியே வந்து சேரும். புதிய பொறுப்புகள் மற்றும் பதவிகள் உங்களை தேடி வரும். உங்களது கடின உழைப்பின் மூலம் பெயர், புகழ் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிகழ்வு ஏற்படும். திருமண பேச்சுக்கள் முடிவுக்கு வரும்.
அதிர்ஷ்ட எண்: 1
அதிர்ஷ்ட நிறம்: தங்க நிறம்( மஞ்சள்)
அதிர்ஷ்ட உடை: சிவப்பு சட்டை
வழிபட வேண்டிய தெய்வம்: சூரியன்
பரிகாரம்: காலையில் சூரியனுக்கு நீர் அர்ப்பணிக்கவும்
தாயுள்ளம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, இன்று வாழ்வில் முன்னேற்றம் கிட்டும் நாள். குடும்பம் மற்றும் உறவுகளில் நிலவி வந்த பழைய சிக்கல்கள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. உறவினர்கள் உதவிக்கு வருவர். ஹோட்டல் சாப்பாடு உடம்புக்கு ஆகாது. நண்பர்கள் உதவி கேட்டு உங்களை நாடுவர்.
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட உடை: வெள்ளை சட்டை
வழிபட வேண்டிய தெய்வம்: விஷ்ணு
பரிகாரம்: கோவிலில் துளசி மாலை சமர்ப்பிக்கவும்
நேர்மையின் பக்கம் நிற்கும் துலாம் ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு சமூகத்தில் மதிப்பு உயரும். வேலை தொடர்பான திட்டங்களில் முன்னேற்றம் காணப்படும். புதிய நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. பயணத்தில் கவனம் தேவை. புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இக்கட்டான நேரத்தில் நல்லவர்கள் வழிகாட்டுவர்கள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட உடை: பட்டு ஆடை
வழிபட வேண்டிய தெய்வம்: லட்சுமி
பரிகாரம்: கோவிலில் குங்குமம் சமர்ப்பிக்கவும்
எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படும் விருச்சிக ராசி நேயர்களே, புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். தொழிலில் உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் அன்பும் பாசமும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனமாய் இருங்கள். வெளியூர் செல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத்துடன் சென்று வரவும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புகள் உண்டு.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு
அதிர்ஷ்ட உடை: நீல நிற சேலை மற்றும் சட்டை
வழிபட வேண்டிய தெய்வம்: சனீஸ்வரன்
பரிகாரம்: எள்ளெண்ணெய் தீபம் ஏற்றவும்
நல்ல சிந்தனை கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் நம்பிக்கை பலனைத் தரும் நாள். புதிய முதலீடுகள் வெற்றியை தேடி தரும். குடும்பத்தில் நல்ல ஒற்றுமை நிலவும். கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்பட்டு நெருக்கம் அதிகரிக்கும். வெளிநாட்டு தொடர்புகளில் முன்னேற்றம் இருக்கும். பயணத்திற்கு ஏற்ற நாள். தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணத்தை மேற்கொண்டால் அது வெற்றியை தரும்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட உடை: ஆரஞ்சு நிற ஆடை
வழிபட வேண்டிய தெய்வம்: பெருமாள்
பரிகாரம்: அன்னதானம் செய்யவும்
நல்ல சிந்தனை கொண்ட மகர ராசி நேயர்களே, தொழிலில் பதவி உயர்வுக்கு வாய்ப்பு உண்டு. பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சுபசெய்தி வந்து சேரும். திருமணம், நிச்சயதார்த்தம் உள்ளிட்ட விஷயங்களில் சுபம் ஏற்படும். உங்களின் திட்டங்களை நிறைவேற்ற நல்ல நாள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
அதிர்ஷ்ட உடை: கருப்பு சட்டை
வழிபட வேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்: தேங்காய் உடைத்து வழிபடவும்
யார் மீதும் கோவமே கொள்ளாத கும்ப ராசி நேயர்களே, புதிய திட்டங்கள் தொடங்க ஏற்ற நாள். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவு தருவார்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் வசூலாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்து சேரும்.
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட உடை: வெள்ளை உடை
வழிபட வேண்டிய தெய்வம்: ஹனுமான்
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றவும்
இறைவனை முழுமையாக நம்பும் மீன ராசி நேயர்களே, உங்கள் திறமையால் நல்ல பெயர் கிடைக்கும். தொழிலில் வெற்றிகள் உண்டு. குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பால்ய நண்பகளை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் உதவி கேட்டு உங்களை தொடர்பு கொள்வர்.
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட உடை: பச்சை நிற சட்டை, சுடிதார்
வழிபட வேண்டிய தெய்வம்: குருபகவான்
பரிகாரம்: வாழைப்பழம் நைவேத்யம் செய்யவும்