Published : Aug 08, 2025, 09:17 AM ISTUpdated : Aug 08, 2025, 09:27 AM IST
சில ராசியினர் எதை செய்தாலும் வெற்றியாகி விடும். அதிர்ஷ்டம் மட்டுமல்ல, புத்திசாலித்தனமும், திட்டமிடலும் இவர்களோட வெற்றிக்குக் காரணம். ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ராசிகளுக்கு ஏற்ற தொழில்கள் மற்றும் வெற்றி ரகசியங்களை அறிய தொடர்ந்து படியுங்கள்.
சில பேரு கையில் மண்ணை தொட்டாலே தங்கம் ஆகுது”ன்னு சொல்வாங்க. அந்த மாதிரி, சில ராசி மக்களுக்கு எதை செய்தாலும் அது வெற்றியாகி விடும். பிறவியிலேயே அள்ளிக்கொடுக்கும் அதிர்ஷ்டத்தோடு பிறந்தவர்கள், எங்க கை வைத்தாலும் காசு பொழியும். இப்போ பாருங்க, ரோட்டுல சின்ன டீ கடை போட்டாலும், பெரிய பிராண்டுகளுக்கு டப் கொடுப்பாங்க. ஆன்லைன்ல ஒரு பக்கம் விற்பனை போட்டாலும், மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிப்பாங்க. அதிர்ஷ்டத்தோட சேர்த்து, புத்திசாலித்தனமும், திட்டமிடலும் இவர்களோட வெற்றிக்குக் காரணம்.
26
ரிஷபம் (Taurus)
ரிஷப ராசிக்காரர்கள் “வேலையை மெதுவா பண்ணுவோம், ஆனா சரியா பண்ணுவோம்”ன்னு நம்புறவர்கள். சந்தை நிலையை ஆராய்ந்து, லாபம் வரும் வழியை கண்டுபிடித்து தான் களம் இறங்குவார்கள். அதனால்தான், பால் கடையா இருந்தாலும், பன்னீர் எக்ஸ்போர்ட் பிஸ்னஸா இருந்தாலும், இவர்களுக்கு பிச்சுக்குது. லாபம் கொடுக்கும் பிஸ்னஸ்: டெய்ரி ப்ராடக்ட்ஸ், ரியல் எஸ்டேட், ஜுவல்லரி, பண்ணை சார்ந்த தொழில்.
36
சிம்மம் (Leo)
சிம்ம ராசியினர் பிறவியிலேயே தலைவர்களாக இருப்பார்களாம். யார்கிட்டேயும் போய் வேலை செய்வதுக்குப் பதிலா, தாமே பாஸ் ஆக விரும்புவார்கள். மார்க்கெட்ட்ல யாருக்கும் இல்லாத அட்டகாசமான வாய்ப்பு இவர்களுக்கே இருக்கும். ரோட்டுல ஃபாஸ்ட் ஃபுட் வண்டி போட்டாலும், அது ஒரு வருடத்துக்குள் பிராண்ட் ஆகிடும். லாபம் கொடுக்கும் பிஸ்னஸ்: உணவு & பானம், ஃபேஷன், மீடியா, ஜிம் & ஃபிட்னஸ் சென்டர்.
தனுசு ராசிக்காரர்கள் ரிஸ்க் எடுக்க காத்திருப்பவர்கள். “சாதனை செய்யணும்”ன்னு மனசுல வைத்துக்கிட்டா, அது நடக்காம போகாது. ஆன்லைன் விற்பனை, இறக்குமதி – ஏற்றுமதி, டிராவல் & டூரிசம் – எதிலாவது கால் வைக்குற நேரத்துலவே அதிர்ஷ்டம் வந்து கதவு தட்டும்.லாபம் கொடுக்கும் பிஸ்னஸ்: டிராவல் ஏஜென்சி, இம்போர்ட் – எக்ஸ்போர்ட், ஆன்லைன் ஸ்டோர், மார்க்கெட்டிங் ஏஜென்சி.
56
கும்பம் (Aquarius)
கும்ப ராசிக்காரர்கள் புதுமையை கண்டுபிடிக்கும் குணம் கொண்டவர்கள். மக்கள் எதை தேடுறாங்கன்னு கணக்காகப் பார்த்து, அதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். யாரும் முயற்சி செய்யாத விஷயத்துல கால் வைப்பது இவர்களோட ஹாபி. ஒருமுறை ஹிட்டானா, மீண்டும் திரும்பிப் பார்க்கவே மாட்டாங்க. லாபம் கொடுக்கும் பிஸ்னஸ்: டெக்னாலஜி ஸ்டார்ட்அப்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ஆன்லைன் சர்வீசஸ், கிரியேட்டிவ் பிஸினஸ்கள்.
66
பொதுவான வெற்றி ரகசியம்
இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்குறது உண்மைதான். ஆனா வெற்றி முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்திலேயே அல்ல, திட்டமிடல், நேர்மை, வாடிக்கையாளர் நம்பிக்கை – இவைகள் இருந்தால்தான் அந்த லாபம் நிலைத்து நிற்கும். இந்த நான்கு ராசிக்காரங்க கடை போட்டா, கடை ரெண்டு மாதத்துல “பிராஞ்ச்” ஓபன் ஆகும். பிராஞ்ச் போட்டா, “ஃபிராஞ்சைஸ்” கேட்கும். அப்படி இல்லேன்னா, ரோட்டுல தேங்காய் விற்றாலும் “தேங்காய் குடோன்” ஆகிடும்!