ஆகஸ்ட் 8 , இன்றைய ராசி பலன்கள் : அட இவர்களுக்கெல்லாம் இன்று அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம்.!

Published : Aug 08, 2025, 08:17 AM IST

இன்றைய ராசி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் பல்வேறு பலன்களை குறிப்பிடுகின்றன. வேலை, பணம், குடும்பம், உடல்நலம் என பல விஷயங்கள் பற்றிய கணிப்புகளையும், அதிர்ஷ்ட எண், நிறம், வழிபட வேண்டிய தெய்வம் போன்றவற்றையும் இங்கே காணலாம்.

PREV
13
இவர்களுக்கு இன்று தொட்டதெல்லாம் துலங்கும்.!

மேஷம் இன்று உங்களின் முயற்சிகள் பலிக்கும் நாள். வேலைப்பகுதியில் புதிய வாய்ப்புகள் வரும். பணவரவு சிறிது அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வழிபட வேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

ரிஷபம் நிதி நிலை மெல்ல மேம்படும். பழைய கடன் தீர்க்கும் வாய்ப்பு. உடல்நலத்தில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்கள் தவிர்க்கவும்.இவர்களுக்கு இன்று தொட்டதெல்லாம் துலங்கும் அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறம்: பச்சை வழிபட வேண்டிய தெய்வம்: பரமசிவன்

மிதுனம் புதிய தொடர்புகள் உங்களுக்கு நன்மை தரும். வணிகத்தில் லாபம் காணலாம். நண்பர்களுடன் நேரம் செலவிட நல்ல நாள். நினைத்தவை நிறைவேறும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் வழிபட வேண்டிய தெய்வம்: விஷ்ணு

கடகம் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்றுங்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வழிபட வேண்டிய தெய்வம்: அம்பிகை

23
இவர்களுக்கு இன்று அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம்.!

சிம்மம் துணிச்சலுடன் செயல்படும் நாள். வேலைப்பகுதியில் உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கலாம். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: தங்க நிறம் வழிபட வேண்டிய தெய்வம்: சூரியநாராயணன்

கன்னி புதிய திட்டங்கள் வெற்றி பெறும். உறவினர்களுடன் சுமுகம் காண்பீர்கள். முதலீட்டில் எச்சரிக்கை அவசியம். ஆனால் அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறம்: நீலம் வழிபட வேண்டிய தெய்வம்: தர்மசாஸ்தா

துலாம் பெரிய முதலீடுகளைத் தவிர்க்க வேண்டிய நாள். குடும்ப செலவுகள் அதிகரிக்கலாம். லக் உங்களுக்கு சாதகமாக இருக்கும் மனஅமைதிக்காக தியானம் உதவும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு வழிபட வேண்டிய தெய்வம்: லட்சுமி

விருச்சிகம் புதிய சவால்களை எதிர்கொள்வீர்கள். தொழிலில் சிறு தடைகள் வரும். கடின உழைப்பால் வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு வழிபட வேண்டிய தெய்வம்: சனீஸ்வரன்

33
இவர்களுக்கு இன்று பண வேட்டை.!

தனுசு உறவில் வாக்குவாதம் தவிர்க்கவும். தொழிலில் மிதமான முன்னேற்றம். பயணச் செலவுகள் கூடும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு வழிபட வேண்டிய தெய்வம்: பெருமாள்

மகரம் வேலைப்பகுதியில் பொறுப்பு கூடும். புது வேலை வாய்ப்பு கிடைக்கலாம். பணவரவு அதிகரிக்கும்.உடல்நலம் சாதாரணமாக இருக்கும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு வழிபட வேண்டிய தெய்வம்: அனுமன்

கும்பம் நிதிநிலை குறையக்கூடும். தேவையற்ற செலவுகள் தவிர்க்கவும். குடும்பத்தில் சின்ன சண்டைகள் ஏற்படலாம். செல்வம் சேரும்அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: ஊதா வழிபட வேண்டிய தெய்வம்: துர்கை

மீனம் குடும்பத்துடன் இனிய தருணங்கள். பழைய நண்பரை சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியத்திற்கு யோகா பயனாகும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம்: நீலச்சாயம் வழிபட வேண்டிய தெய்வம்: குருவாயூரப்பன்

Read more Photos on
click me!

Recommended Stories