
மிதுன ராசிக்காரர்களுக்கு எதிலும் வெற்றி வாகை சூடும் ஆண்டாக ஆண்டு அமைய இருக்கிறது. 2026 ஆம் ஆண்டு உங்கள் உழைப்பிற்கான உன்னத பலன்கள் கிடைக்கும் ஆண்டாக இருக்கும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கும். உங்களுக்குள் மறைந்து இருந்த திறமைகளை இந்த வருடம் உணரப்போகிறீர்கள். பெயர் மற்றும் புகழுடன் வாழும் அமைப்பு ஏற்படும். பணம், புகழ், கௌரவம், அந்தஸ்து ஆகிய அனைத்தும் கிடைக்கும் ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும்.
ஜூன் 2, 2026 அன்று குரு பகவான் உங்கள் ராசியில் இருந்து விலகி இரண்டாம் வீடான கடக ராசிக்கு உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். இது உங்கள் நிதி நிலையில் பெரும் புரட்சியை ஏற்படுத்த உள்ளது. உங்கள் பொருளாதாரம் உச்சநிலையை அடையும்.
நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். சொத்து விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். பண வரவு அபரிமிதமாக இருப்பதால், குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பண பலத்தால் விரும்பியதை சாதிப்பீர்கள்.
பங்குச்சந்தை, வர்த்தகம் ஆகியவற்றில் இருப்பவர்களுக்கு மிகவும் சாதகமான காலமாகும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அல்லது பணி மாற்றம் கிடைக்கலாம். சிலருக்கு பணிக்காலம் முடிந்த பின்னரும் நீட்டிப்பு ஏற்படலாம். கௌரவ பதவிகள் தேடி வரும்.
பகைமை பாராட்டிய உறவுகள் மீண்டும் இணையும். கணவன் மனைவி இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களிடையே நிலவிய மனக்கசப்புகள் மாறும். பழைய வீட்டில் இருந்து புதிய வீட்டிற்கு செல்வீர்கள். பிள்ளைகளுக்கு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மார்ச் 29, 2026 அன்று சனி பகவான் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் இருந்து, பத்தாம் இடமான கர்ம ஸ்தானத்திற்கு சஞ்சாரம் செய்கிறார். ஆண்டு முழுவதும் அவர் தொழில் ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
புதிய வாய்ப்புகளால் வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றம் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக பண உதவிகள், வங்கி கடன்கள் ஆகியவை எளிதில் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் உருவாகும். புதிய வேலைக்காக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும், அரசு வேலை தொடர்பான முயற்சிகளும் கைகூடும்.
வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். ஜூன் மாதத்திற்குப் பின்னர் வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு ஜூன் மாதம் வரை சில சவால்கள் இருக்கலாம். ஆனால் லாபம் இரட்டிப்பாக கிடைக்கும்.
புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். குடும்ப உறவுகளில் நல்லிணக்கம் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் அனுசரணையால் அனைத்து பிரச்சனைகளும் மாறும். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட இடையூறுகள் குறையும். சிலரது காதல் பிரிவில் முடியலாம். முன்னோர்களின் ஆசி முழுமையாகக் கிடைக்கும்.
2026 ஆம் ஆண்டு முழுவதும் ராகு பகவான் பாக்கிய ஸ்தனமான ஒன்பதாவது வீட்டிலும், கேது பகவான் மூன்றாவது வீட்டிலும் சஞ்சரிக்க இருக்கின்றனர். டிசம்பர் 5, 2026 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ராகு எட்டாம் வீட்டிற்கும், கேது இரண்டாம் வீட்டிற்கு மாற இருக்கின்றனர். ராகு மற்றும் கேது பகவானின் பெயர்ச்சியால் ஒரே நேரத்தில் பல வாய்ப்புகள் கிடைக்கலாம்.
பெரியவர்களின் ஆலோசனையுடன் முடிவுகளை எடுப்பது நல்லது. சொத்து விவகாரங்களில் தந்தையின் உடன் பிறந்தவர்கள் மற்றும் மூத்த சகோதரர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் முடிவிற்கு வரும். தந்தையுடன் உறவு சுமுகமாக இருக்கும். குழந்தை பாக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும். பிள்ளைகளின் திருமணம், குழந்தை பாக்கியம், உத்தியோகம், தொழில் என அனைத்தும் மனதிற்கு நிம்மதியை தரும்.
சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகலாம். சிலர் வீடு, நிலம் போன்ற சொத்து சேர்க்கையில் ஈடுபடுவீர்கள். கை, கால், மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு விடுதலை கிடைக்கும். குறுக்கு வழியில் அதிர்ஷ்டத்தை தேடி அலைபவர்களுக்கு பின்னடைவு ஏற்படலாம். சமூக அந்தஸ்தை நிலைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
அனைத்து செயல்களிலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் எந்த ஒரு பெரிய முதலீட்டையும் யோசித்து செய்யுங்கள். தொழில் சார்ந்த திட்டங்களை வெளியில் பகிர்வதை தவிர்க்கவும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உறவுகளை பலப்படுத்தும்.
மதுரை மீனாட்சி அம்மனை வழிபடுவது ஏற்றத்தைத் தரும். ஸ்ரீராமரை வழிபடுவது மேன்மையை உண்டாக்கும். குலதெய்வ வேண்டுதல் சுப பலன்களை அளிக்கும். முன்னோர்கள் வழிபாட்டில் மூலம் மன நிம்மதியை பெறுவீர்கள். இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உதவி புரிவது, வசதி இல்லாத மாணவர்களின் கல்விக்கு உதவி செய்வது புண்ணியத்தைத் தரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)