என்ன நடந்தாலும்...இதை மட்டும் விடவே மாட்டேன்...இந்த விஷயத்தில் உறுதியாய் இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...

Anija Kannan   | Asianet News
Published : May 21, 2022, 10:27 AM IST
என்ன நடந்தாலும்...இதை மட்டும் விடவே மாட்டேன்...இந்த விஷயத்தில் உறுதியாய் இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...

சுருக்கம்

Aishwarya Rajinikanth Post: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது. 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது. 

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா:

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் கடந்த 2004ஆம் ஆண்டு பிரபல நடிகர் தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ் -  ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் தங்களின் 18 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

தனுஷ் -ஐஸ்வர்யா தம்பதியினர்:

இதையடுத்து, தனுஷ் -ஐஸ்வர்யா தம்பதியினர் இருவரும் அவரவர் பணிகளில் பிஸியாக உள்ளனர். தனுஷ் படங்களிலில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோன்று, 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா டைரக்ஷனில் பயணி என்ற மியூசிக் வீடியோவை மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ரஜினியின் தீவிர ரசிகரான லாரன்ஸ் நடிப்பில் புதிய படம் ஒன்றை ஐஸ்வர்யா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

 மேலும் படிக்க...Dhanush Case: கொலை முயற்சியா..? 10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வேண்டும்...மதுரை தம்பதிக்கு நடிகர் தனுஷ் நோட்டீஸ்..

ஐஸ்வர்யா வொர்க் அவுட் செய்யும் வீடியோ:

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும், ஐஸ்வர்யா தொடர்ந்து தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். தற்போது மீண்டும் தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். ''எதையொட்டியும் தான் வொர்க் அவுட் செய்வதை விட மாட்டேன் என்று கேப்ஷனில்'' தெரிவித்துள்ளார்.  ஐஸ்வர்யாவின் இந்த வொர்க் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பார்த்து அவரின் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?