
முளைக்கட்டிய தானியத்தின் அடுத்த ஜென்ரேஷன்தான் இந்த மைக்ரோகிரீன்ஸ். ஆரோக்கியத்தை அள்ளித்தரும் உணவான இதனை உற்பத்தி செய்து மாதம் அசால்ட்டாக 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம். மைக்ரோ கிரீன்ஸ் என்பது ஒரு வகையான கீரை, இது காய்கறிகள் மற்றும் மூலிகைகளின் விதைகளிலிருந்து வளர்க்கப்படுகிறது.காய்கறிகள், கீரை வகைகள், எண்ணெய் வித்துகள், பயறு வகைகள், சிறுதானியங்கள் இவற்றின் விதைகளை டிரேக்களில் பிரத்யேக முறையில் விதைப்புச் செய்து, துளிர் நிலையில் அறுவடை செய்து, அவற்றை உணவாகச் சாப்பிடும் முறை தற்போது எல்லா நாடுகளிலும் பரவலாகி வருகிறது. இந்த முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள்கள், மைக்ரோ கிரீன்ஸ் (Micro Greens-நுண் கீரைகள்) என அழைக்கப்படுகிறது. இதில் ஏராளமான நுண் சத்துகள் நிறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் விலை அதிகம் என்றாலும்கூட, இதைச் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது
மைக்ரோ கிரீன்ஸ் என்பது ஒரு வகையான கீரை, இது காய்கறிகள் மற்றும் மூலிகைகளின் விதைகளிலிருந்து வளர்க்கப்படுகிறது. முளைக்கக்கூடிய விதைகளைத் தூவி, அவை முளைத்த பின், முதல் இலைகள் தோன்றும் நிலையில், அவை அறுவடை செய்யப்படுகின்றன. விதைகளைத் தூவி, அவை முளைத்தபின், முதல் இலைகள் தோன்றும் நிலையில் அறுவடை செய்யப்படுகின்றன. இந்த கீரைகளை சிறிய தட்டுகள் அல்லது பெட்டிகளில் வளர்க்கலாம். இந்த முறையில், விதைகளை தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் வளர்க்கலாம். சூரிய வெளிச்சம் நேரடியா, மைக்ரோ கிரீன்ஸ் மேல படக்கூடாது என்பதால் நிழல் வலை அமைச்சு வளர்க்க வேண்டும். 1 கிலோ கோகோ பித் மற்றும் மண்புழு உரத்தை இரண்டையும் ஒண்ணா கலந்து நிரப்பி அதில் விதைகளை இடவேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் விதையோட அளவு மாறுபடும். கேரட் விதைனா, ஒரு டிரேவுக்கு 30 கிராம் இருந்தாலே போதுமானது. பீட்ரூட் விதையாக இருந்தால், ஒரு டிரேவுக்கு 50 கிராம் விதைகள் தேவைப் படும். பாகற்காய் விதையாக இருந்தால் 100 கிராம், வெண்டைக்காய் விதையாக இருந்தால் 150 கிராம் தேவைப்படும்.
விதைகளை 24 மணிநேரம் தண்ணியில ஊற வச்சு, அது முளைக்கட்டிய நிலையில 24 மணிநேரம் தனியா வச்சிருந்து, அதுக்குப் பிறகு விதை களைத் தெளிக்க வேண்டும். பிளாஸ்டிக் டிரேவோட அடிப்பகுதியில சிறு சிறு துளைகள் இருக்கும். அந்த டிரேவுக்குக் கீழ, வேறொரு டிரேவை வச்சு, அதுல தண்ணி நிரப்புவது கட்டாயம் அதனால தாவரங்களோட வளர்ச்சிக்குத் தேவையான ஈரப்பதம் கிடைச்சுடும். விதைகள் தெளிச்ச பிறகு, அதுக்கு மேல ஒரு டிரேவை போட்டு முடி வைக்க வேண்டும். உளுந்து, பச்சைப்பயறு ஆகியவற்றை 5 ஆம் நாள் அறுவடை செய்யலாம். ஒரு டிரேவுக்கு 150-200 கிராம் மகசூல் கிடைக்கும். பீட்ருட், சூரியகாந்தி 7-ம் நாள் அறுவடை தயாராகும். பீட்ருட்ல ஒரு டிரேவுக்கு 30 கிராம் வீதம் மகசூல் கிடைக்கும். சூரியகாந்தியில ஒரு டிரேவுக்கு 150-200 கிராம் மகசூல் கிடைக்கும். கேரட் 14-ம் நாள் அறுவடைக்கு வரும் ஒரு டிரேவுக்கு 20 கிராம் மகசூல் கிடைக்கும். சிவப்பு தண்டுக்கீரை 15-ம் நாள் அறுவடை செய்யலாம்
உளுந்து, பச்சைப்பயறு, எள், கொண்டைக் கடலை உள்ளிட்டவை 1 கிலோ மைக்ரோ கீரீன்ஸ் 1,500 ரூபாய்னு விலைபோகிறது. சிவப்பு தண்டுக்கீரை, பீட்ரூட் வகை 1 கிலோ 3,500 ரூபாய்க்கும், கேரட்ல உற்பத்தி செய்ற மைக்ரோ கிரீன்ஸ் 1 கிலோ 5,000 ரூபாய்க்கும் விலை போகிறது.டிரேக்கள்ல மண்புழு உரம் நிரப்புறது, விதை களைத் தண்ணியில ஊற வச்சு, விதைப்புச் செய்றது, அறுவடை, பேக்கிங் உள்ளிட்ட பணிகளை இவங்கதான் செய்றாங்க. இவங்களுக்கான ஊதியம், விதைகள், கோகோ பித், மண்புழு உரம் உள்ளிட்டவைக்கான எல்லாச் செலவுகளும் போக, ஒரு மாசத்துக்கு 50,000 ரூபாய் லாபம் கிடைக்கும். மைக்ரோகிரீன்ஸ் அறுவடை செய்தவுடன் குளிர்பதன பெட்டியில் வைத்துவிட்டால் ஒருவாரம் வரையிலும் தரம் இழக்காது. தெர்மாகோல் பாக்ஸ்களில் ஐஸ்கட்டிகள் நிரப்பி, அதில் மைக்ரோ கிரீன்ஸ்களை வைத்து நன்கு பேக் செய்து, பேருந்துகள் மூலமாக வெளிமாநிலங்களுக்கு அனுப்பலாம்.சூப்பர் மார்க்கெட், இயற்கை அங்காடிகள், ஸ்டார் ஹோட்டல்கள், யோகா சென்டர்களில் முன்கூட்டியே ஆர்டர் பிடித்தால் கூடுதல் லாபம் கிடைக்கும்.
மைக்ரோ கிரீன்ஸைப் பொறுத்தவரையில் முளைகட்டிய பயிரைவிட 4 முதல் 40 பங்கு கூடுதல் ஊட்டச்சத்துகள் உள்ளது. கீரை வகைகளில் அமராந்தஸ், தண்டுக்கீரை, முளைக்கீரை, அரைக்கீரை என்று பலவகையான கீரை வகைகளையும் வளர்க்கலாம். கோதுமையையும்கூட மைக்ரோ கிரீன்ஸ் முறையில் வளர்த்துச் சாப்பிடலாம்.தண்டு, இலை, வேர் என அனைத்தையும் உட்கொள்ளலாம். வெளிநாடுகளில் சாலட் என்ற பெயரில் பச்சை இலைகள், காய்கறிகளைச் சாப்பிடும் வழக்கம் பிரபல மாக உள்ளது. இந்தியாவிலும் சாலட் உணவு சாப்பிடும் வழக்கம் பரவலாக அதிகரித்து வருகிறது. இதற்கு மைக்ரோ கிரீன்ஸ் முறையில் வளர்க்கப்படும் இலைகள் (நுண் கீரைகள்) அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதைப் பெரிய அளவில் ஒரு தொழிலாகச் செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. நகர்ப் புறங்களில் இருப்பவர்கள் மாடித்தோட்டம் மற்றும் வீட்டுத்தோட்டங்களில் இதை எளிதாக வளர்க்கலாம். வேலைக்குச் செல்பவர்கள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை விதைத்தால் அடுத்த ஒரு வாரத்தில் அறுவடைக்குத் தயாராகிவிடும். இம்முறையில் விதைக்க ரசாயன கலப்பு இல்லாத விதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
சமையலறையில் கிடைக்கும் வெந்தயம், கடுகு, உளுந்து, காராமணி, பச்சைப் பயறு வகைகளைக்கூட பயன்படுத்தலாம். இளம் பயிர் (கீரை) என்பதால், கவனமாக அறுவடை செய்ய வேண்டும். இதற்கெனத் தனிக் கத்தரிக்கோல் வைத்துக்கொள்வது நல்லது. இம்முறையில் வளர்க்கப்படும் கீரைகளுக்கு ரசாயன உரங்கள் எதுவும் பயன்படுத்த வேண்டியதில்லை என்பது கூடுதல் சிறப்பு. அறுவடை செய்த கீரை விரைவில் வாடிவிடும் என்பதால் ஒரு சில மணிநேரத்தில் விற்பனை செய்து விட வேண்டும். அல்லது உணவுக்குப் பயன்படுத்திவிட வேண்டும்.
புதிதாக இதனை தொடங்குபவர்கள் 100 கிராம் பச்சைப்பயறை 15 ரூபாய்க்கு வாங்கி விதைத்து அதிலிருந்து 150 ரூபாய் வரை லாபம் பெறலாம். விதைத்த முதல் 3 நாள்களுக்குச் சூரிய ஒளி தேவையில்லை. பிறகு, தினமும் 6 மணி நேரம் வெயில் கிடைத்தால் கீரையின் வளர்ச்சி நன்றாக இருக்கும். போதுமான அளவு காற்றோட்டமும் ஈரப்பதமும் அவசியம். தண்ணீர் தேங்கி நிற்கக் கூடாது. கீரையாகப் பயன்படுத்துவதுடன் மட்டு மல்லாமல் அதைப் பொடியாக்கி பாலில் கலந்து குடிக்கலாம்.
விதைகள் வாங்குவதற்கு 2 ஆயிரம் ரூபாய், அதனை வாங்கும் தட்டுகள் வாங்குவதற்கு 2 ஆயிரம் மற்றும் இதர செலவுகள் என மொத்தம் 6 ஆயிரம் ரூபாய் செலவில் இதனை தொடங்கினால் நமது விற்பனை யுத்தியை பொறுத்து மாதம் 20 ஆயிரம் ரூபாய் வரையிலும், முதலீடுகளை அதிகப்படுத்தினால் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் லாபம் ஈட்டலாம் என்றின்றனர் இத்துறை வல்லுணர்கள்.