லாபத்தை அள்ளிக்கொடுக்கும் முருங்கை! - ஆண்டுக்கு ரூ.5000 கோடிக்கு ஏற்றுமதி!

Published : Jun 07, 2025, 12:48 PM IST

முருங்கை சாகுபடி மூலம் அதிக மகசூல் மற்றும் வருமானம் ஈட்டலாம். முருங்கை இலைகள், காய்கள் மற்றும் பிசின்களை ஏற்றுமதி செய்து லாபம் ஈட்டலாம். தமிழகத்தில் முருங்கை சாகுபடி மற்றும் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.

PREV
19
வீட்டு வீடு முருங்கை மரம்

தமிழகத்தில் முருங்கை மரம் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உள்ளது. வீட்டின் அருகே ஒரு முருங்கை போத்தை நட்டு வைத்தால் அது ஆண்டு முழுவதும் பலன் கொடுக்கும். அதேபோல் விவசாயி ஒருவர் முருங்கை சாகுபடியை தொடங்கினால் அது வழிவழியாக அவரது பரம்பரையையே வாழவைக்கும் என்கின்றனர் வேளாண் நிபுணர்கள்.

29
80 சதவீதத்தை பூர்த்தி செய்யும் இந்தியா

உலகளவில் முருங்கைக்கான சந்தை தேவையில் இந்தியா 80 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. தமிழகத்தில் 20,741 ஹெக்டர் பரப்பில் முருங்கைகாய் சாகுபடி செய்யப்பட்டு 8 லட்சத்து 41,807 டன் உற்பத்தியுடன் இந்தியளவில் தமிழகம் முதன்மையாக திகழ்கிறது. தமிழகத்தில் இருந்து முருங்கை ஏற்றுமதியை அதிகரிக்கவும், அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் மதுரையில் செயல்பட்டு வருகிறது.

39
720 டன் முருங்கை இலை பவுடர் ஏற்றுமதி

தமிழகத்தில் 35 ஏற்றுமதி நிறுவனங்கள் மூலம் சுமார் 600 முதல் 800 ஏக்கர் பரப்பில் முருங்கை இலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதனுடன், ஆண்டுக்கு சுமார் 720 டன் கொள்ளளவு கொண்ட முருங்கை இலைப் பொடிகள் தயாரிக்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை தமிழகம் கொண்டுள்ளது.

49
முருங்கையில் இத்தனை அயிட்டங்களா?

முருங்கை இலையை மூலப்பொருளாக வைத்து எவ்வாறு முருங்கை பவுடர், முருங்கை காப்சூல், தேநீர் , முருங்கை சூப் மிக்ஸ் மற்றும் ரைஸ் மிக்ஸ், முருங்கை லட்டு போன்ற மதிப்பு கூட்டல் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. முருங்கை இலையை நன்றாக காய வைத்து பொடியாக்காமல் கட் லீவ்ஸ் (cut leaves) மாதிரி எடுத்துக்கொண்டு அதனை டிப் டீ (dip tea) போன்றவற்றை தயாரிக்கலாம்.

59
முருங்கை கீரை தேவையா? இப்படி நடவு செய்ய வேண்டும்

முருங்கையில் இலை உற்பத்திக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நடவு செய்யும் முறை தான் அடர் நடவு முறை. இதில் சாகுபடி செய்யும் நிலத்தினை 60 செ.மீ. ஆழத்திற்கு ரோட்டரி கலப்பையைக் கொண்டு உழவு மேற்கொள்ள வேண்டும். இதனால் அதிக வேர் வளர்ச்சி உண்டாவது மட்டுமின்றி, நீர் வடியும் தன்மையும் அதிகரிக்கும். பின்னர் 45×45 செ.மீ. இடைவெளி விட்டு முருங்கை நாற்றுகளை நட வேண்டும். மேலும் இதற்குத் தேவையான உரங்களையும் இட வேண்டும். முருங்கைச் செடிகள் சுமார் 50 செ.மீ. உயரத்திற்கு வளர்ந்ததும், நிலத்திலிருந்து 15 முதல் 20 செ.மீ. வரை இலைகளை கவாத்து முறையில் வெட்டி விட வேண்டியது கட்டாயம். நடவு செய்த பிறகு முதல் ஆண்டில் 30 சதவீதம் வரையிலான நாற்றுகள் சேதமடைய வாய்ப்புண்டு. ஆண்டிற்கு 9 முறை அறுவடை செய்து முருங்கை இலைகளை விற்கலாம். ஆண்டுக்கு ஒரு ஹெக்டேருக்கு 650 டன் முருங்கை இலையை நம்மால் உற்பத்தி செய்ய முடியும்.

69
முருங்கை காய் தேவையா? இப்படி செய்யுங்கள்

அதேபோல் காய்களுக்காக வளர்க்கப்படும் முருங்கையை பொருத்தவரை செடி மற்றும் மரம் என இரண்டு வகைகள் உள்ளன. இரு வகைகளும் இந்த பகுதியில் சாகுபடி செய்யப்படுகின்றன. முருங்கைக்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானது. பெரிய முதலீடு தேவையில்லை.முதல் ஆண்டில் மட்டும் விதை நடவு, சொட்டுநீர் பாசனம் அமைத்தல், கூலி, மருந்து, உரம் என ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வரை செலவாகும். அடுத்த ஆண்டில் இருந்து பராமரிப்புக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை செலவு செய்தால் போதும். ஒரு முறை செடி வைத்தால் 2 ஆண்டுகள் தான் பலன் தரும் என கூறுவார்கள். ஆனால், முறையாக பராமரித்தால் 10 ஆண்டுகள் வரை பலன் பெறலாம்.

79
ஏக்கருக்கு 15 ஆயிரம் கிலோ மகசூல்

ஒரு ஏக்கருக்கு 7 டன் முதல் 15 டன் வரை மகசூல் கிடைக்கும். ஆண்டுக்கு 2 பருவங்களில் முருங்கை காய்க்கும். இதில் ஒரு பருவத்தில் விலை குறைந்தாலும், மற்றொரு பருவத்தில் விலை நன்றாக இருக்கும். இதனால் பெரியளவில் நஷ்டம் ஏற்படாது.

89
ரூ.5 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி

இந்தியாவில் இருந்து 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு முருங்கை இலைகள் மற்றும் முருங்கை காய்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், அதில் 80 சதவீதத்தை தமிழகம் பூர்த்தி செய்வதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு விவசாயிகளுக்கு முங்கை சாகுபடி கைகொடுக்கும் எனவும் முருங்கை காய்களை உள்ளூர் சந்தையில் விற்றும் அதன் இலைகள் மற்றும் பிசின்களை ஏற்றுமதி செய்தும் அதிக வருமானம் ஈட்டலாம் எனவும் வேளாண் பல்கலைகழம் தெரிவித்துள்ளது.

99
விவசாயிகளுக்கு பயிற்சி

முருங்கை சாகுபடியில் விருப்பமுள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், விவசாய ஆர்வலர்கள், தனியார் பதப்படுத்தும் நிறுவனங்கள் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் சென்னை அலுவலகத்தை md.tnapex@tn.gov.in மற்றும் முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையத்தின் மதுரை அலுவலகத்தை mefcmdu.tnapex@tn.gov.in, என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories