2026 FIFA உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற நாடு! வீரர்களுக்கு சொகுசு கார்களை பரிசளித்த அரசு!

Published : Jun 15, 2025, 10:32 PM IST
Uzbekistan Football Team

சுருக்கம்

கத்தாரை வீழ்த்தி 2026 FIFA உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற உஸ்பெகிஸ்தான் வீரர்களுக்கு BYD சொகுசு கார்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

Uzbekistan Players Who Qualified 2026 FIFA World Cup Given Cars As Gifts: 2026 FIFA உலகக் கோப்பை ஆசிய தகுதிச் சுற்றில் கத்தாருக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, உஸ்பெகிஸ்தான் தேசிய கால்பந்து அணியின் அனைத்து வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் அந்நாட்டு அரசு கார்களை பரிசளித்து கவுரவித்துள்ளது. தாஷ்கண்டில் நடந்த இந்த போட்டியில் உஸ்பெகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

2026 FIFA உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற உஸ்பெகிஸ்தான்

இந்த இறுதிப்போட்டியில் துருக்கிய கிளப் சிவாஸ்போருக்காக விளையாடும் உஸ்பெகிஸ்தான் வீரர் விங்கர் அஜிஸ்பெக் துர்கன்போவ் முதல் கோல் அடித்தார். 85வது நிமிடத்தில் சீரி ஏ கிளப் ஏஎஸ் ரோமாவின் முன்கள வீரரான எல்டோர் ஷோமுரோடோவ் 2வது கோல் அடித்து அசத்தினார். கூடுதல் நேரத்தின் 2வது நிமிடத்தில், கஜகஸ்தானின் அக்டோப் மற்றும் டோபோலுக்காக முன்பு விளையாடிய உள்ளூர் கிளப் பக்தகோர் வீரரான இகோர் செர்கீவ் 3வது கோல் அடித்து மாஸ் காட்டினார்.

அனைத்து வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் கார்கள் பரிசு

இந்த தகுதிச்சுற்றில் உஸ்பெகிஸ்தான் குழுவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதே குழுவில் உள்ள ஈரானும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அடுத்த தகுதிச் சுற்றில் உலகக் கோப்பை இடத்திற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் அணிகள் தொடர்ந்து போராட உள்ளன. இந்த வெற்றியை உஸ்பெகிஸ்தான் மக்கள் கொண்டாடி வரும் நிலையில், உஸ்பெகிஸ்தான் அணியின் அனைத்து வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் 40 BYD கார்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி உத்தரவு

இந்த போட்டியின் முடிவில் 40 BYD கார்கள் மைதானத்துக்குள் கொண்டு வரப்பட்டு அனைத்து வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்களிடம் அதற்கான சாவிகள் வழங்கப்பட்டன. உஸ்பெகிஸ்தான் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கௌரவப் பட்டங்களை வழங்கவும், பதக்கங்கள் வழங்கவும் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ் உத்தரவிட்டுள்ளார்.

2026 FIFA உலகக் கோப்பை எப்போது நடைபெறும்?

2026 FIFA உலகக் கோப்பை ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவால் நடத்தப்பட உள்ளது. ஆறு பிரிகளில் இருந்து 48 தேசிய அணிகள் 2026 FIFA உலகக் கோப்பையில் விளையாட உள்ளன. இவ்வளவு அணிகள் FIFA உலகக் கோப்பையில் விளையாடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

SAFF U17 Championship: கிரிக்கெட்டில் மட்டுமல்ல; கால்பந்திலும் பாகிஸ்தானை ஊதித் தள்ளிய இந்திய அணி!
செம! பிரதமர் மோடிக்கு ஸ்பெஷல் பிறந்த நாள் கிப்ட் கொடுத்த லியோனல் மெஸ்ஸி! என்ன தெரியுமா?