தற்போது வெளியாகியுள்ள பாக்கியலட்சுமி சீரியல் டீம் ஜெயிலர் படம் பார்க்க போனபோது எடுத்த படத்தில் ரித்திகா இல்லை. இதனால் ரித்திகா எங்கே என்று அவரது தீவிர ரசிகர்கள் ஏங்கத் தொடங்கிவிட்டனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற பாத்திரத்தில் நடிப்பவர் நடிகை ரித்திகா. தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் அவர் திடீரென்று சீரியலை விட்டு நீக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீரியல் நடிப்பவர்களின் குரூப் போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. அதில் ரித்திகாவைக் காணவில்லை என்பதால் இனிமேல் பாக்கியலட்சுமி சீரியலில் அவரைப் பார்த்து ரசிக்க முடியாதா என்று அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ஏற்கெனவே ராஜா ராணி தொடரில் ஹீரோவின் தங்கையாக நடத்தில் மனதில் இடம் பிடித்தவர் ரித்திகா. பின் தொடர்ந்து விஜய் டிவியில் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துக்கொண்டு தனது ரசிகர்களை வசியம் செய்து வைத்திருக்கிறார். இனிமையான குரலில் பாடும் திறமையும் உள்ளவர் என்பதை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் காட்டினார் ரித்தி.
21 வயது இளையவர்... இருந்தாலும் ரஜினி உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன்?
சில மாதங்களுக்கு முன் ரித்திகாவுக்குத் திருமணம் முடிந்த நிலையில், அவர் பாக்கியலட்சுமி சீரியலில் விடாமல் தொடர்ந்து தோன்றி வந்தார். திருமணம் முடிந்த பின்பும் நடிப்பில் கவனம் செலுத்துவதால் ரித்திகா ரசிகர்கள் குஷி ஆனார்கள். ஆனால், தற்போது வெளியாகியுள்ள பாக்கியலட்சுமி சீரியல் டீம் ஜெயிலர் படம் பார்க்க போனபோது எடுத்த படத்தில் ரித்திகா இல்லை. இதனால் ரித்திகா எங்கே என்று அவரது தீவிர ரசிகர்கள் ஏங்கத் தொடங்கிவிட்டனர்.
இச்சூழலில் ரித்திகா ரசிகர்கள் மனதை உடைக்கும் விதமாக, ரித்திகா பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்ற தகவல் வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது. ரித்திகாவுக்கு பதிலாக நடிகை அன்ஷிதா தான் இனி பாக்கியலட்சுமி சீரியலில் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.
அன்ஷிதாவும் தனக்கென்று ரசிகர்களைச் சேர்ந்திருப்பவர். காற்றுக்கென்ன வேலி தொடரில் அபி பாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை அள்ளி வருகிறார்.