தென்மேற்கு துருக்கியில் உள்ள பாமுக்கலே என்ற இடத்தில் அனல் நீருற்ற பகுதி உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக உள்ளது. அங்கிருந்து பல்லவி சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சினிமாவிலும் பல இசை நிகழ்ச்சிகளிலும் நாட்டுப்புற பாடல்களைப் பாடி உலக அளவில் புகழ்பெற்றவர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி. நாட்டுப்புற பாடல்களையே தங்கள் அடையாளமாகக் மாற்றிக்கொண்ட இந்தத் தம்பதி ஜோடியாக பாடி பல பாடல்கள் ஹிட் ஆகியுள்ளன.
சினிமாவில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவதுடன் நிறுத்திவிடாமல், பக்திப் பரவசமான பாடல்களையும் நிறைய பாடியுள்ளனர். இதனால் பக்தர்கள் மத்தியிலும் நல்மதிப்பைப் பெற்றுள்ளனர்.
புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். பல்லவி, மேகா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகள் பல்லவி ஶ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் படிக்கிறார். இன்ஸ்டாகிராமில் அவர் அடிக்கடி தனது படங்களை வெளியிட்டு வருகிறார்.
டாக்டர் பல்லவி வெளியிடும் இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு நிறைய ரசிகர்களும் இருக்கிறார்கள். அவரது பதிவுகள் ஒவ்வொன்றும் லைக்குகளை அள்ளுகின்றன. இப்போது பல்லவி துருக்கியில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
தென்மேற்கு துருக்கியில் உள்ள பாமுக்கலே என்ற இடத்தில் அனல் நீருற்ற பகுதி உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக உள்ளது. அங்கிருந்து பல்லவி சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவைப் பார்த்த ஃபாலோயர்கள் பலர் எந்த இடம் என்று கேட்டு கமெண்ட் செய்துள்ளனர். கியூட், பியூட்டி என்று பல்லவியின் அழகை வர்ணித்துள்ளனர்.
வங்கி சர்வரை ஹேக் செய்து ரூ.16 கோடி அபேஸ்! சைபர் கிரிமினல்கள் கைவரிசை!