பனாமாவில் தேனிலவு கொண்டாடும் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் அங்கு அந்நாட்டு அதிபரை சந்தித்தனர். தேன்நிலவின் இடையே நடந்த இந்த சந்திப்பின்போது அனந்த் அம்பானி சற்று சோர்வாக காணப்பட்டார்.
உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சண்ட் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. தம்பதி தங்கள் தேனிலவில் பிஸியாக பொழுதை கழித்து வருகின்றனர். அனந்த்-ராதிகாவின் தேனிலவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களும் தனித்துவமானது தான்.
அனைவரும் தேன்நிலவுக்கு மாலத்தீவு, சுவிட்சர்லாந்து, தென் அமெரிக்க நாடுகளுக்கு செல்லும் நிலையில், ஆனந்த்-ராதிகா தம்பதி சென்றுள்ள இடம் பனாமா. இந்த ஜோடி தேனிலவு மற்றும் வணிக சந்திப்பிற்காகவும் இவ்விடத்தை தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.
தேனிலவின் இடையே, பனாமாவில் அந்நாட்டு அதிபரை இருவரும் சந்தித்து விருந்து உபசரிப்பு நடத்தியுள்ளனர். விருந்தில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் பனாமா அதிபர் ஜோஸ் ரவுல் முலினோ மற்றும் அவரது மனைவி மரிசெல் கோஹென் டி முலினோ ஆகியோர் மட்டும் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பு புகைப்படம் இன்ஸ்டாவில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
இந்த விருந்து உபரிப்பில் ராதிகா மெர்ச்சண்ட் சுறுசுறுப்பாகவும் ரொம்பவே கலகலப்பாக காணப்பட்டார். அவர், கருப்பு சரிகை எம்பிராய்டரி ஆடைஅணிந்து வந்து அசத்தினார். ஆனால் ஆனந்த் ஆம்பானியோ சற்று சோர்வாக காணப்பட்டார். பனாமா அதிபர் ஜோஸ் ரவுல் முலினோ அதிபருக்கே உண்டான தோரனையில் காணப்பட்டார்.
அனந்த் அம்பானி, ஒரு ஆஸ்துமா நோயாளி ஆகையால் அதற்கு இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையிலும் ராதிகா ஆனந்துக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். 2017-ல் ஒரு நேர்காணலில், நீதா அம்பானி தனது மகன் ஆனந்த் கடுமையான ஆஸ்துமா காரணமாக குறிப்பிடத்தக்க உடல்நல சவால்களை எதிர்கொண்டு வருதாக தெரிவித்திருந்தார்.
ஹனி மூன் கொண்டாட்டம்.. Costa Ricaவில் ஆனந்த் ராதிகா ஜோடி - தங்கியுள்ள Resortன் ஒரு நாள் வாடகை என்ன தெரியுமா?
ஆனந்த் அம்பானி நீண்டகாலமாக ஸ்டீராய்டு எடுத்துகொண்டதன் விளைவாக உடலில் கணிசமாக அதிகரித்து சுமார் 208 கிலோவை எட்டியது. தொடர் மருத்துவ சிகிச்சைகளால் அவர் சற்ற முன்னேறி வருகிறார். அம்பானி குடும்பத்தில் சவாலான விசயங்களில் இதுவும் ஒன்று.
சமந்தாவை காப்பி அடித்த ஆனந்த் அம்பானியின் மனைவி ராதிகா மெர்ச்சண்ட்.. வைரலாகும் போட்டோ..