ஹனி மூன் கொண்டாட்டம்.. Costa Ricaவில் ஆனந்த் ராதிகா ஜோடி - தங்கியுள்ள Resortன் ஒரு நாள் வாடகை என்ன தெரியுமா?
Anant Radhika : ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகிய இருவரும் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி கோஸ்டா ரிகாவிற்கு தென் நிலவை கொண்டாட சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
radhika
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, கடந்த ஜூலை 12ம் தேதி அன்று, ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்து கொண்டார். இன்றுவரை இந்த உலகில் நடந்த மிக விலையுயர்ந்த திருமணங்களில் ஒன்றாக இது மாறியுள்ளது. இந்நிலையில் அனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இப்போது மத்திய அமெரிக்காவிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
Starbucksல் ரூ. 9.4 லட்சத்திற்கு coffee ஆர்டர் செய்த வாடிக்கையாளரைக் கொண்டாடும் Zomato!
anant ambani
புகழ்பெற்ற கோஸ்டா ரிகாவில் தங்கள் தேனிலவை அனுபவிக்க அந்த ஜோடி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெளியான சில தகவல்களின்படி ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி தான் கோஸ்டா ரிகாவை சென்றடைந்ததாக கூறப்படுகிறது. மத்திய அமெரிக்காவில் உள்ள காஸ்டிலியான நாடுகளில் Costa Ricaவும் ஒன்று.
Resort in costa rica
மேலும் புதுமணத் தம்பதிகள் கோஸ்டா ரிக்கா நாட்டில் உள்ள காசா லாஸ் ஓலாஸில் தான் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள பிரம்மாண்டமான அந்த ரிசார்ட்டில் தங்குவதற்கு ஒரு நாளுக்கு சுமார் 30,000 அமெரிக்க டாலர் வசூலிக்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ஒரு நாளுக்கு சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமாகும்.
anant radhika honey moon
அனந்த ராதிகா திருமணத்திற்கான சரியான செலவு குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. முகேஷ் அம்பானி, சுமார் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு உள்ளவர், அவர் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு சுமார் 5500 கோடி ரூபாய் செலவிட்டதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமந்தாவை காப்பி அடித்த ஆனந்த் அம்பானியின் மனைவி ராதிகா மெர்ச்சண்ட்.. வைரலாகும் போட்டோ..