முதல் பேட்டியே ரணகளம்... ஓபிஎஸ் மகனின் மிரட்டலான பொலிட்டிக்கள் என்ட்ரி!!

By sathish kFirst Published Mar 11, 2019, 7:17 PM IST
Highlights

நான் சுமார், 21 வருடமாக ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரங்களுக்கு சென்று கட்சிப்பணி செய்துள்ளேன். தேனி மாவட்டத்தில் நான் போகாத வீடுகளே கிடையாது என முதல் பேட்டியிலேயே அதிமுக மூத்த புள்ளிகளை முணுமுக்க வைத்துள்ளார்.

பொதுவாகவே வாரிசு அரசியலை கடுமையாக எதிர்த்து வந்த அரசியல் கட்சிகளில் அதிமுக தான் முதலில் இருப்பது. அதெல்லாம் ஜெயலலிதா மறைந்ததும் அதா கொள்கையும் ஜெயலலிதாவோடு மறைந்தது. ஜெயலலிதா இருக்கும் போதே ஜெயக்குமார் மகனை எம்பியாக்கினார். ஆனால் அதில் எந்த உள் நோக்கமும் இல்லை.

ஜெயலலிதா மறைந்த நிலையில், கட்சி இபிஎஸ் -  ஓபிஎஸ் கைக்கு வந்ததை அடுத்த தங்களது வாரிசுகளை அரசியலுக்கு இறக்கி வருகின்றனர் அதிமுகவின் முக்கிய புள்ளிகள். 

கட்சியும், ஆட்சி அதிகாரம் இருக்கும்போதே தன் மகனை அரசியலுக்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கிய ஓபிஎஸ், டெல்லிக்கு அனுப்ப நினைத்தார் அதற்காக முன்கூட்டியே சில கட்சியில் பொறுப்பும், அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்க வைத்து. வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில், சொந்த தொகுதியான தேனியில் நின்று பார்லிமெண்ட்டுக்கு பிளான் போட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் விருப்பமனு போட்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்றும், நாளையும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் பெற்றது. கூட்டணிக்கு கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்று அறிவிக்கப்படாத நிலையில் இன்று 20 தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது. 

இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, வளர்மதி ஆகியோர் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினர்.

தேனி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் நேர்க்கானலுக்கு சென்றுவிட்டு திரும்பியதும் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்களது கேள்விக்கு பதிலளித்த அவர், குடும்ப அரசியலுக்கு எதிராக இருக்கிறார் ஓபிஎஸ், ஆனால் ஓபிஎஸ் மகனான நீங்கள் போட்டியிட இருப்பது குடும்ப அரசியலுக்கு வித்திடாதா? என்ற கேள்விக்கு, பன்னீர்செல்வத்தின் மகன் என்பதால் வாரிசு அரசியல் முத்திரை வந்துவிடுமா? நான் என்ன அமெரிக்காவில் படிச்சுட்டு நேராக மீனம்பாக்கம் ஏர்போர்ட் வந்து கழகத்திற்கு வந்து சேர்ந்து இங்கே பதவியில் எங்க அப்பா இருக்கிறார் எனக்கு சீட் கொடுங்கள் என கேட்க்கிறேனா? 

நான் 18 வயதிலிருந்து கட்சி பணிகளில் இறங்கியுள்ளேன். இப்போது எனக்கு 39 வயது ஆகிறது. அதாவது 21 வருடமாக ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரங்களுக்கு சென்று கட்சிப்பணி செய்துள்ளேன். தேனி மாவட்டத்தில் நான் போகாத வீடுகளே கிடையாது.  எனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என முதல் பேட்டியிலேயே மூத்த அரசியல் கைகளை விழிபிதுங்க வைத்துள்ளார்.

click me!