தமிழகத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 16 இடங்களில் வெற்றி பெறும் என INDIA- CNX கருத்து கணிப்பு முடிவுகளில் வெளியாகியுள்ளன. அந்த முடிவை அலசி ஆராய்ந்ததில் பல ஷாக் தகவல்கள் கிடைத்திருக்கிறது.
தமிழகத்தில் நடைபெறும் லோக்சபா தேர்தலில் திமுக 16 இடங்களில் வெற்றி பெறும் என இந்தியா- சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பு முடிவுகளில் வெளியாகியுள்ளன. அதிமுக மற்றும் திமுக சம பலத்துடன் வெற்றிபெறும் என தெரிய வந்துள்ளது. ஆனால் கூட்டணியில் இருக்கும் தேமுதிக பாமக உள்ளிட்ட கட்சிகள் மண்ணைக் கவ்வும் என்பது தெரியவந்துள்ளது. அதிலும் தேமுதிக ஆடிய ஆட்டத்திற்கு பாமக, திமுக, அதிமுக என மொத்தமாக ஆப்படிக்க காத்துக்கொண்டிருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும். தமிழகத்தில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாமால் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா டிவியும் சிஎன்எக்ஸும் இணைந்து சுமார் 38600 பேரிடம் 193 நாடாளுமன்றத் தொகுதிகளில் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளன. இந்த கருத்துக்கணிப்பு கடந்த மார்ச் 1 முதல் 7-ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்த கருத்துக்கணிப்பு முடிவில், திமுக 16 இடங்களிலும் , அதிமுக 12 இடங்களிலும் , அமமுக பாமக 2 இடங்களிலும் மற்ற கட்சிகள் ஒரு இடங்களிலும் வெற்றி பெறும், இதில் ஹைலைட் என்னன்னா? இவ்வளவு நாள் ஆட்டம் காட்டிய சுதீஷ் & பிரேமலதாவுக்கு பெரும் ஷாக்காகவும், அதிமுகவிற்கு உதவியாகவும் வந்த இந்த கருத்துக் கணிப்பின் முடிவு அமைந்துள்ளது.
ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத தன பலம் என்னவென்றே தெரியாமல் இருக்கும் தேமுதிக, கூட்டணி பேரம் பேசி அரசியல் அரங்கில் அசிங்கப்பட்டு கடைசியாக வேறு வழியே இல்லாமல் திமுக கொடுத்த நாலு சீட்டில் நிற்கப்போகிறது.
ஆனாலும் அந்த தொகுதிகளிலாவது ஜெயிக்குமா என்றால் அது தான் இல்லை, இப்படி கருத்துக் கணிப்பில் கூட, வெற்றிபெறமுடியாத தேமுதிகவை பேரம் பேச விட்டு வெறுப்பேத்தியது தான் திமுக அதிமுக கட்சிகள் நடத்திய டைம் பாஸ் விளையாட்டு.
தேமுதிக நிற்கும் தொகுதிகளில் பாமக இறங்கி வேலை செய்யாது ஏனென்றால் தேமுதிக வென்றால் அது எதிர்காலத்தில் தமக்கு ஆப்படிக்கும் என்பதால் உள்ளடி வேலைகளில் இறங்கும். திமுகவும் தேமுதிக சோலியை முடிக்க அனைத்து வேலைகளையும் செய்யும்.
அதிமுகவிற்கு, தேமுதிக போனாலென்ன, பாமக தோற்றால் என்ன? அவர்கள் நினைத்ததை போலவே இடைத் தேர்தலுக்கு ஆதரவு கிடைத்துவிட்டதால், இவர்களின் வெற்றி தோல்வி விஷயத்தில் காலையில் ஏற்றிக்கொள்ள விரும்பவில்லை. அதுமட்டுமா, அதிமுக வீக்கான, திமுக பலமாக இருக்கும் தொகுதிகளை நைசாக பாமக, தேமுதிகவுக்கு தள்ளிவிட்டுள்ளது.
திமுகவும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தான் வீக்காக கொடுத்துள்ளது. மதிமுக நிற்கும் தொகுதியில் ஜெயிக்க வாய்ப்புள்ளது. ஒரு தொகுதியில் பிஜேபியும் ஜெயிக்க வாய்ப்புள்ளது. பாமக ஜெயிக்கும் என சொல்லப்பட்ட 2 தொகுதிகளும், திருமாவளவன் நிற்கும் தொகுதியும் இழுபறியில் தான் முடியும் என சொல்கிறது கருத்துக் கணிப்பை அலசி ஆராய்ந்ததில் தெரியவந்ததுள்ளது.