அதிமுக - தேமுதிக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. தேமுதிகவுக்கு 4 இடங்கள் கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளன. 21 சட்டமன்ற இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் அதிமுக வேட்பாளரை தேமுதிக ஆதரிக்கும் என ஒப்பந்தம் போடப்பட்டது.
அதிமுக - தேமுதிக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையில் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. தேமுதிகவுக்கு 4 இடங்கள் கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளன. 21 சட்டமன்ற இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் அதிமுக வேட்பாளரை தேமுதிக ஆதரிக்கும் என ஒப்பந்தம் போடப்பட்டது. கூட்டணி ஒப்பந்தத்தில் அதிமுக சார்பில் ஓபிஎஸ்-ஈபிஎஸ், தேமுதிக சார்பில் விஜயகாந்த் கையெழுத்திட்டனர்.
கிரவுன் பிளாசா ஹோட்டலில் நடந்த இந்த கூட்டணி ஒப்பந்த சந்திப்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் செய்தியாளர்களை அனைவரும் கூட்டாக சந்தித்தனர். செய்தியாளர் கூட்டத்திற்கு விஜயகாந்த்தை கைத்தாங்கலாக அழைகத்து வந்த அமர வைத்தனர். செஇயாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம் ஒப்பந்த பாத்திரத்தை வாசித்தார். இதனைத்தி தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
மிகவும் அமைதியாக காணப்பட்ட விஜயகாந்த் பொம்மை போல் அமர்ந்திருந்தார். ஆனால் அப்பப்போ வெள்ளந்தி சிரிப்போடு வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த்.
அப்போது நீண்ட நாட்களுக்குப்பின் விஜயகாந்த் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். சிரித்த முகத்துடன் காணப்பட்ட விஜயகாந்த்தை கண்டு தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சிரித்த முகத்துடன் செய்தியாளர்களைப் பார்த்து சைகையால் தனது தொண்டையை சுட்டிக் காட்டி பேச முடியாது என்று அவர் கூறினார். கூட்டணி பேரம் படியாததால் இப்படி வந்து சிக்கிக்கிட்டோமே என அருகில் உம்முன்னு அமர்ந்திருந்த பிரேமலதா எதுவும் பேசாமலேயே அங்கும் இங்குமாக பார்ப்பதும், தலையை கீழே குனிவதுமாக இருந்தார்.
அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த சுதீஷ், இப்படி மாறி மாறி பேரம் பேசி... அவமானம் மட்டுமே மிச்சம் என்பதைப்போலவே கம்முன்னு முகத்தை சோகமாகவே வைத்திருந்தார்.