கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு செல்லும் விஜயகாந்த்... கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது!!

By sathish kFirst Published Mar 10, 2019, 7:28 PM IST
Highlights

அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இன்று மாலைக்குள் முடிவு எட்டப்பட்டு உடன்பாடு கையெழுத்தாகும் என கூறப்பட்ட நிலையில்  கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு  தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சென்றுள்ளார்.

அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இன்று மாலைக்குள் முடிவு எட்டப்பட்டு உடன்பாடு கையெழுத்தாகும் என கூறப்பட்ட நிலையில்  கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு  தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சென்றுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக - பாமக கூட்டணி கடந்த மாதம் 19 ஆம் தேதி  உறுதியானது. சென்னை அடையாறு கிரவுன் பிளாசா ஹோட்டலில் பாமக நிறுவனர் ராமதாஸ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடனான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் 7+1 தொகுதி கொடுப்பது உறுதியானது.

இந்த கூட்டணியில் தேமுதிக சேரும் என விஜயகாந்த் வெளிநாட்டில் இருக்கும்போது தோர்நத கூட்டணி பேச்சு வார்த்தை பாமகவுக்கு அதிமுக அள்ளிக் கொடுத்ததால் அதுவரை நடந்து வந்த பேச்சுவார்த்தை பேரமாக நீடித்தது, வெளிநாட்டிலிருந்து வந்தும் கூட்டணி டீல் முடியவில்லை, இதனையடுத்து இழுபறி நீடித்ததால் திமுகவோடும் தினகரனோடும் பேச்சுவார்த்தை நடத்தியது. 

திமுகவோடு கூட்டணி டீல் பேச துரைமுருகனை சந்திக்க சென்ற தேமுதிகவினர் இரண்டு பக்கமும் மாறி மாறி டீல் பேசுவதை அறிந்த அவர், மீடியா முன்பாக புட்டு புட்டு வைத்தார். இதனையடுத்து தினகரன் தனது பலத்தைக் காட்ட தனியாக நிற்பதாக சொல்லிவிட்டதால் வேறு வழியில்லாமல், அதிமுக கொடுப்பதை வாங்கியே ஆகா வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானதால் இன்று கேடு விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாமகவைப் போலவே, தேமுதிக தலைவர் விஜயகாந்த் திமுகவோடு கூட்டணி ஒப்பந்தம் செய்துகொள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் மற்றும் முக்கிய சில நிர்வாகிகளுடன் சென்றுள்ளார். விஜயகாந்த்தை தொடர்ந்து அதிமுக தலைவர்களான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் இன்னும் சற்று நேரத்தில் கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு வர இருக்கின்றனர்.

click me!